விமல் ஆபாச படத்தில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன? வாகை சூடவா படத்தில் நடித்த விமலா இவர்?

What is essential to act Vimal in a porn film Is this Vaagai Sooda Vaa movie's Vimal

வாகை சூடவா என்ற அற்புதமான படத்தை தந்தவர் விமல். எப்போது அந்தப் படத்தைப் பார்த்தாலும் விமல் மீதான மரியாதை கூடிக்கொண்டே போகும். அப்படி ஒரு படம் அது. அப்படிபட்ட படைப்புகளில் நடித்த விமல் தற்போது, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் நடித்து உள்ளார். அதன் ட்ரெய்லர், ஸ்னிக் பீக் காட்சிகளைப் பார்த்தாலே தெரிகிறது படம் என்ன லட்சணத்தில் இருக்கும் என்று.

கூத்துப் பட்டறையில் இருந்து வந்து சினிமாவில் பிரபலமான நடிகர்கள் பலர் உள்ளனர். அவர்களில் பசுபதி, இளங்கோ குமார வேல், குரு சோம சுந்தரம், விமல், விதார்த், விஜய் சேதுபதி போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். இப்படிபட்ட குழுவில் இருந்து கில்லி போன்ற படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து பிறகு பசங்க படத்தின் மூலமாக நாயகனாக உருவெடுத்தார் விமல். அவர் நாயகனாக நடித்த முதல் படமே தேசிய விருது பெற்றுவிட கவனிக்கத்தக்க நடிகராக மாறினார். அதை அடுத்து களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வாகை சூடவா, கலகலப்பு, தேசிங்கு ராஜா என்று பல ஹிட் கொடுத்துள்ளார். அவற்றில் மிக முக்கியமான படம் வாகை சூடவா. இந்தப் படமும் தேசிய விருது பெற்றது. இப்படிப்பட்ட படைப்புகளில் பங்கேற்ற நடிகர் இன்று பலர் கேலி பண்ணும் வகையில், முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ள படத்தில் நடித்தது ஏனோ?

விமலியன்ஸ், கரணியன்ஸ் என்று நடிக்கத் தெரிந்த நடிகர்களை இன்றைய மீம் கிரியேட்டர்கள் வம்படியாக மீம் போட்டு கலாய்த்தாலும் அவர்கள் தந்த படைப்பின் மீது என்றும் மரியாதை இருந்துகொண்டே தான் இருக்கிறது. அப்படி இருக்கையில் விமல் இது போன்ற செக்ஸ் காட்சிகள், செக்ஸ் வசனங்கள் நிறைந்த படத்தில் நடிப்பதை தவிர்ப்பது நல்லது.

நல்ல படங்கள் பெரிதாக கண்டுகொள்ளப் படுவதில்லை என்பது உண்மை தான். அதற்கு மாற்று வழியாக காமெடிப் படங்கள் இருக்க ஆபாச நெடி வீசும் படத்திற்கா தாவுவது…  பாலங்குழியில் விழும் அளவுக்கு நான் மோசமான நடிகர் அல்ல என்பதை முதலில் விமல் உணர வேண்டும் என்பது நல்ல தமிழ் சினிமா ரசிகர்களின் வேண்டுகோள். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன், பாவம் எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரு என்று பழித்துப் பேசும் பாழாப்போனவர்களுக்கு இனியாவது கண்டன்ட் கொடுக்காமல் இருப்பாரா விமல்? வாகை சூடவா, கலகலப்பு போன்ற படங்களைத் தருவாரா விமல்?

Related Articles

தனுஷ் நடிப்பில் தமிழில் மறு ஆக்கம் காண்க... குறைந்த விலை சானிட்டரி நாப்கின் தயாரித்து புரட்சி செய்த அருணாசலம் முருகானந்தம் அவர்களின் கதையை தழுவி இந்தியில் எடுக்கப்பட்ட திரைப்படம் பேட்மேன். அருணா...
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு – இது ... காஞ்சித்தலைவன், தென்னாட்டு காந்தி, தென்னாட்டு பெர்னாட்ஷா, பேறிஞர், நூற்றாண்டு தலைவர் என்று பலவாறு  போற்றப்படும் தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் அண்ணா என்கி...
சுஜாதா எழுதிய ” திரைக்கதை எழுதுவது... சுஜாதா வின் "திரைக்கதை எழுதுவது எப்படி ? " புத்தகத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன் சுஜாதா எழுதிய " சிறுகதை எழுதுவது எப்படி ? " என்ற புத்தகத்தைப் பற்றிப் ...
தமிழ் சீரியல்களில் மாமியார் கொடுமைகள்!... பரபரப்பான சீரியல்களை ஒளிபரப்புவதில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய நான்கு சேனல்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சீரியல்கள் எ...

Be the first to comment on "விமல் ஆபாச படத்தில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன? வாகை சூடவா படத்தில் நடித்த விமலா இவர்?"

Leave a comment

Your email address will not be published.


*