குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படும் தம்பதியினர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு !

Infertility got increased

நாகரீக சமூகத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் திருமணம் மற்றும் குழந்தைப் பேறை
தள்ளி போட்டு தங்களது எதார்காலத்தை தொலைத்து வருகின்றனர். மனித வாழ்க்கையில் ஒரு
சில செயல்களை நிச்சயம் அந்த காலத்திலயே செய்தாக வேண்டும். அப்படி செய்வது தான்
குடும்பத்திற்கு நல்லது. ஆனால் யுவன் யுவதிகளோ திருமணத்தையே முப்பது வயதுக்கு மேல்
தள்ளி வைக்கின்றனர். அதன் பிறகு குழந்தை பெறுவதை ஒரு வருடம் தள்ளி வைக்கின்றனர்.
அதில் சிலருக்கு பலன் கிடைக்கிறது. பலருக்கோ அது சங்கடமான செயலாக மாறி வருகிறது.
உரிய வயதை தாண்டி குழந்தை பெற்றுக்கொள்வதால் பெற்றோர்கள் உளவியல் ரீதியாக
பாதிக்கப்படுவதோடு பிறக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.

கருவுறாமை அதிகரிப்பு

உலகம் முழுவதும் கருத்தரிக்கும் வயதில் இருக்கும் 15% தம்பதியரைக் கருவுறாமை பாதிக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி இந்தியாவில் முதல்நிலை கருவுறாமையால்
பாதிக்கப்பட்டவர்கள் 3.9-16.8 %. இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். உத்தரப்பிரதேசம்,
இமாசலப் பிரதேசம் மற்றும் மகாராட்டிரத்தில் 3.7 %, ஆந்திராவில் 5 % மற்றும் காஷ்மீரில் 15 %
ஆகும். ஒரே பகுதியில் மலைவாழ் மக்கள் மற்றும் சாதியக் குழுக்களிடையில் சதவிகிதம் மாற்றம்
அடையும்.

காரணங்கள்

உடல் மீது அக்கறையின்மையே காரணம். கண்டதை கண்ட கண்ட நேரங்களில் தின்னும்
அலட்சிய போக்கே இதற்கு முக்கிய காரணம். நாளைக்கு இந்த உடல் ஒரு உயிரை பெற்றெடுக்க
போகிறது என்ற அக்கறையின்மையே முக்கிய காரணம். இதில் ஆண் பெண் இருவருக்குமே சம
பங்குண்டு. அளவுக்கு மிஞ்சிய இருசக்கர வாகன பயன்பாடு, மது பயன்பாடு, சுய இன்பம்
அனுபவித்தல் உள்ளிட்ட காரணங்களால் தங்களது சக்தியை இழக்கின்றனர். இதனால்
அவர்களின் விந்தணுக்கள் வீரியமற்றதாக மாறிவிடுகிறது. பெண்களும் இப்போது மது புகைக்கு
அடிமையாகிவிட்டதால் தப்பு அவர்கள் மீதும் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்ள வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறோம். அது மட்டுமின்றி சுற்றுபுற சுகாதாரம் இன்னொரு காரணமாக diseaseஇருக்கிறது. காற்று மாசுபாடும் கருவுறாமை பிரச்சினைக்கு முக்கிய காரணம் என்று ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது.

காற்று மாசுபாடு எப்படி காரணம்?

காற்று மாசுபாடு காரணமாக பிரிமெச்சூர் ஓவரியன் பெய்லியர் எனப்படும் இளமையிலயே
மாதவிலக்கு நின்று போகும் நிலை இன்று அதிகம் காணப்படுகிறது. ஆகவே இனி முடிந்தவரை
சுய போக்குவரத்தை நிறுத்தி விட்டு பொதுபோக்குவரத்தை பயன்படுத்துங்கள். வாகன
பயன்பாடு, பிளாஸ்டிக் பயன்பாடு என்று நாம் சொகுசாக வாழ்ந்து நமக்கடுத்த தலைமுறையை
நரகத்தில் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.

Related Articles

ப்ளூசட்டை மாறன் சொன்னதுபோல் ஹிப்ஹாப் ஆதி... நான் சிரித்தால் திரைப்படத்தின் விமர்சனத்தில் ப்ளூசட்டை மாறன் ஹிப்ஹாப் ஆதியின் எல்லா பாடல்களும் ஒரே மாதிரி இருப்பதாக கூறியிருந்தார். அவருடைய இசையை பற்ற...
காலா டீசர் – நெருப்புடா என்றது கபா... மார்ச்1ம் தேதி காலை பதினொரு மணிக்கு காலா டீசர் ரிலீஸ் என்ற அறிவிப்பை வெளியிட்டது காலா படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ். அதனைத்தொடர்ந்...
பாண்டிச்சேரி கடற்கரையில் கதறி அழுத மைக்ச... துப்பாக்கி முனை படத்தில் ஆஷாத் என்னும் கேரக்டரில் அற்புதமாக நடித்திருந்தார் ஆர்ஜே ஷா.  இவரைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை.  யூடியூப்  ...
ஆந்திர முதல்வரின் வாழ்க்கை வரலாறு படத்தி... ஒய் எஸ் ஆர் என்று அழைக்கப்படும் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது.ஆந்திர முதல்வராக இருந்த...

Be the first to comment on "குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படும் தம்பதியினர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு !"

Leave a comment

Your email address will not be published.


*