ரயிலில் தவறி விழுந்தவரின் உயிரைக் காப்பாற்றிய ட்வீட்

Train

மும்பையில் ரயிலிலிருந்து தவறி விழுந்த பயணி ஒருவரை ட்வீட்டர் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி சக  பயணிகள் மீட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவம் நடந்த டிசம்பர் 12 அன்று எப்போதும் போல, மும்பையைச் சேர்ந்த ஆகாஷ் குமார பிந்த என்ற இருபத்து மூன்று வயது டாக்சி ஓட்டுநர் தனது வீட்டிலிருந்து கிளம்பி, மதுங்கா என்ற இடத்திற்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தார். ரயிலின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டே பயணம் செய்து கொண்டிருந்த ஆகாஷ், மும்ப்ரா கல்வா இடையே ரயில் சென்றுகொண்டிருந்த போது நிலை தடுமாறி ரயிலிலிருந்து கீழே விழுந்தார்.

இந்தக் காட்சியை அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த சக பயணிகள் உடனடியாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயிலுக்கு ட்வீட்டர் மூலம் தகவல் அளித்தனர். தகவலறிந்த ரயில்வே அமைச்சகம் உடனடியாக செயல்பட்டு, மும்பை தலைமை ரயில்வே நிர்வாகத்தை உஷார் படுத்தியது. இதனையடுத்து கல்வா ரயில் நிலையத்திற்குத் தகவல் அனுப்பப்பட்டு உடனடியாக கீழே விழுந்த பயணியை மீட்க ஒரு குழு தயாராக அங்கே காத்துக்கொண்டு இருந்தது.

அதற்குள்ளாகவே பாதிக்கப்பட்டவரை மீட்டப் பயணிகள் ரயிலிலேயே அவரை கல்வா ரயில் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர், அங்கே காத்து கொண்டிருந்த ரயில்வே ஊழியர்களைக் கொண்ட குழு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து எதிர்மறை எண்ணங்கள் தொடர்ந்து பரப்பப்படும் இன்றைய சூழலில், இது போன்ற செய்திகள் சமூக ஊடகங்கள் மீதான நம்பிக்கைக்கு பலம் சேர்க்கின்றன.

Related Articles

மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உரு... கடந்த ஆண்டு மோடியின் வாழ்க்கை வரலாறு புத்தகம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. அப்போதே அதுபற்றி பல விமர்சனங்கள் எழுந்தன. அதைப் போலவே சமீபத்தில் தமிழகத்த...
தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட நிஜமான நம் ... நூறு ஆண்டுகால பெருமை வாய்ந்த இந்த சினிமா உலகம் இந்த உலகில் உள்ள அத்தனை பெண்களின் இயல்பையும் தன்மையையும் விதவிதமாக காட்டியிருக்கிறது. ஆனால் வறுமையி...
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொர... நடிகர் நடிகைகள் : ரஜினி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, ராம்தாஸ், விஜய்சேதுபதி, சசி குமார், சிம்ரன், திரிஷா மற்றும் கார்த்திக் சுப்புராஜின் தோஸ்துக...
குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படு... நாகரீக சமூகத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் திருமணம் மற்றும் குழந்தைப் பேறை தள்ளி போட்டு தங்களது எதார்காலத்தை தொலைத்து வருகின்றனர். மனித வாழ்க்கையில் ...

Be the first to comment on "ரயிலில் தவறி விழுந்தவரின் உயிரைக் காப்பாற்றிய ட்வீட்"

Leave a comment

Your email address will not be published.


*