அட்லியின் நிறத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்! – வழக்கம் போல அமைதியாக இருக்கும் அட்லி!

Atlee remains Quiet after criticised by Nettisans

கருப்பாக இருக்கும் இளசுகளை கரிச்சட்டி தலையா, கருவாயா இப்படி விளையாட்டுக்கு அழைப்பது தமிழகத்தில் வழக்கம். அதே கருப்பை வைத்து ஒருவரை மட்டம் தட்டுவதும் தமிழகத்தில் வழக்கம். தற்போது அட்லியின் நிறத்தை வைத்து கேலி செய்யும் வேலையை செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

ஐபிஎல் மேட்ச் ஒன்றிற்கு தனது மனைவியுடன் சென்றிருக்கிறார் இயக்குனர் அட்லி. அங்கு நடிகர் ஷாருக்கானும் வர அவருக்கு அருகில் அமர்ந்தார் இயக்குனர் அட்லி. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அட்லி சற்று மங்கலாக தெரிகிறார். அது போதாதா நெட்டிசன்களுக்கு… “ஷாருக் பக்கத்துல சீட் காலியா இருக்குன்னு நினைச்சவன் RT மட்டும் பண்ணு” என்று அட்லியின் நிறத்தை வைத்து கலாய்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

அதை உடனே நிறுத்த வேண்டும் என்று பிரபலங்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் ஆர் ஜே நவலட்சுமி இதுகுறித்து பின்வருமாறு கூறியுள்ளார்.

” This just won’t stop? Colour vechu innum evalo naal “joke” adikaporeenga? With your racist comment your hurting an entire population & always targeting an individual on the basis of his colour is just horrible. Unlike you I see SUCCESS in this picture. ”

என்ன தான் பிரச்சினை நடந்தாலும்  அட்லி வழக்கம்போல எந்த பதிலும் தராமல் தான் உண்டு தான் வேலை உண்டு என்றிருக்கிறார். இதே போல் தான் நடிகர் சூர்யாவை எல்லோரும் குள்ளன் என்று கேலி செய்ய, அவரோ தன்னுடைய படத்தில் எவ்வளவு உயரமா இருக்குறோங்கறது முக்கியமல்ல எவ்வளவு உயர்றோம்ங்கறது தான் முக்கியம் என்று வசனம் பேசினார். நிறத்தை வைத்து கேலி செய்யும் நெட்டிசன்களுக்கு எப்படிப்பட்ட பதிலடியை தரப்போகிறார் இயக்குனர் அட்லி?

 

Related Articles

டெல்லியில் அமையவிருக்கிறது இந்தியாவின் ம... இந்திய காவல்துறையின் சாதனைகளை வெளிப்படுத்தும் விதத்தில் இந்தியாவின் முதல் காவல்துறை அருங்காட்சியகத்தை டெல்லியில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்க...
கடன் திட்டங்களுக்கான அடிப்படை வட்டி விகி... இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா marginal cost of funds based lending rate (MCLR) எம்சிஎல்ஆர் எனப்படும் கடன் திட...
கிராமப்புற ஏழைகளுக்காக ஒரு கோடி வீடுகள் ... வீடு என்பது ஒரு சாமானியனின் வாழ்நாள் கனவு. ஒரு குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரும் உழைத்து, தங்கள் அந்திம காலத்தில் ஒரு வீட்டைக் கட்டி குடியேறுகின்ற...
லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கை எப்படிபட்டது... லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கையைப் பற்றி அலுவலகங்களில் பணிபுரியும் சாமானியர்களான நாம் யாருமே அவ்வளவாக தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. நமக்குத் தெரிந்த...

Be the first to comment on "அட்லியின் நிறத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்! – வழக்கம் போல அமைதியாக இருக்கும் அட்லி!"

Leave a comment

Your email address will not be published.


*