கழிவுகள் மறு சுழற்சி செய்ய திட்டங்கள் – ஸ்மார்ட் கிளீன் கிரீன் மதுரை

madurai

கார்ப்பரேஷன் ஆணையர் எஸ். அனீஷ்சேகர் ஹோட்டல்கள், தியேட்டர் வளாகங்கள் மற்றும் திருமணமண்டபங்கள் ஆகியவற்றின் கழிவுகளை மறு சுழற்சி செய்வதற்க்கு வெறும் இரண்டே வாரங்கள் கொடுத்துள்ள நிலையில் சில நிறுவனங்கள் குப்பைகளை எப்படி சமாளிக்கலாம் என்பதற்கு புதியவழி முறைகளை செயல்பாட்டில் கொண்டுவருகிறது.

புதிய திட்டம் – ஸ்மார்ட் கிளீன் கிரீன் மதுரை

மதுரை மாவட்ட ஹோட்டல் அசோசியேஷனுடன் இணைந்து  30 ஹோட்டல்கள் ஸ்மார்ட் கிளீன் க்ரீன் மதுரை என்ற திட்டத்தின் மூலம்ஆவண செய்யப்பட்டுள்ளது.

மதுரை ஹோட்டல் அசோசியேஷன், மதுரை கார்ப்பரேஷனுடன் இணைந்து கழிவுமேலாண்மை திட்டத்தை ஊக்குவிப்பதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுதிட்டுள்ளனர். திரு. கே. திருப்பதி, திட்டத்தின் தலைவரின் கூற்றுப்படி இன்னும் பலதொழில்கள் கழிவுகளைப் பிரித்தெடுப்பதற்க்கு சிரமப்படுகிறார்கள்.

பசுமை இந்தியாவுடன் கை கோர்த்து செயல்பாடு

இயந்திர செலவு ₹55 லட்சத்தை கார்ப்பரேஷன் மற்றும் திரு. திருப்பதியின் பசுமை இந்தியாவால் கொடுக்கப்பட்டுள்ளது. ஹோட்டெல்களிலிருந்து பிரித்தெடுத்த குப்பைகளை தேர்ந்தெடுப்பதற்கும் கழிவுப் பொருட்களை புறநகர் பகுதிக்கு கொண்டு வருவதற்கும் தொழிலாளர்கள் ஏதுவாக இருக்க வேண்டும்.இத்திட்டத்தின் மூலம்குறைந்தபட்சம் 14 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கதீர்மானிக்கப்பட்டுள்ளது. இது இன்னும் 2 வாரங்களில் துவங்கவுள்ளது.

மக்கும் குப்பைகளை மறு சுழற்சி முறையில் உபயோகிக்க வழி உள்ளதா?

சீககங்காசாலையின் அருகே உள்ள பழத்தோட்டத்தில் அமைந்துள்ள ஆலை உயர் கம்போஸ்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்த ஆலை விரைவில் செயல்படத்துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கும் குப்பைகளை சிறுதுகள்களாக நொறுக்கும் வசதி இதில் உள்ளது. கன்வேயர் பெல்ட்டைக் கொண்டுள்ள ஒரு கம்போஸ்டிங் இயந்திரம் சிறந்த முறையில் பிளாஸ்டிக் துகள்களை நீக்குகிறது,

இதன் தொழில்நுட்பம் சிறு குறிப்பு

கன்வேயர் பெல்ட் மீது குப்பைகள் ஏற்றப்பட்டவுடன் தொழிலாளர்கள் அதிலிருக்கும் சிறிய பிளாஸ்டிக் பொருட்களை பிரித்தெடுப்பர். பின்பு அனுமதிக்கப்பட்ட அளவும், அனுமதிக்கப்பட்ட குப்பைகளும் கருப்புத்துகள்களாக மாற்றப்பட்டு நீண்ட பெரிய கம்போஸ்டிங் குழிக்குள் விடப்படுகிறது.

இந்த சுழற்சியால் என்ன பலன்

ஒவ்வொரு 21 நாட்களுக்கும் 15 முதல் 18 சதவிகிதம் மக்கும் குப்பைகள் கரிம மற்றும் வளமான உரமாக மாறுகிறது. இதைக்கொண்டு 5.5 ஏக்கர் நிலத்தில் பயிரிடலாம். இந்த இடத்தில் 12 வகையான காய்கறிகள், 15 வகையான பழங்கள் மற்றும் கீரைகள் பயிரிடப்பட்டுள்ளது.

டன் கணக்கில் இனி குப்பைகள்  வீணாகாது

இந்த திட்டத்தின் கீழ் தினமும் ஹோட்டல்கள் மற்றும் திருமணமண்டபங்களிலிருந்து 10 டன் குப்பைகள் சேகரிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. நாங்கள் பெருமளவில் வீணடிக்கப்படுகின்ற தேங்காய்நீரை நுண்ணிய ஊட்டச்சத்தாகவும்,  மைக்ரோ உயிரினங்களுக்கான இடமாகவும் பொட்டாஷியமின் ஆதாரமாகவும் பயன்படுத்துகிறோம் என்று திரு. திருப்பதி கூறுகிறார்.

மற்ற நிறுவனங்களின் செயல்பாடுகள்

மற்ற நிறுவனங்களும் முன் முயற்சியில் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க முற்படுகின்றன. ஜிஆர்டி ரீஜென்சியிடமுள்ள கம்போஸ்டிங் இயந்திரம் ஒருநாளுக்கு 100 கிலோ கழிவுகளை சரி செய்கிறது. தலைமை பொறியாளர் கோபாலின் கூற்றுப்படி வாரத்தின் இறுதியில் 70 கிலோ உரம் தயாரிக்கப்பட்டு உள்ளூர் விவசாயிகளுக்கு விற்ககப்படுகிறது.

விவசாய உரங்கள்

ஒரு அதிகாரியின் கூற்றுப்படி ஒருநாளைக்கு 100 கிலோ கழிவுகளை உற்பத்தி செய்யும் மொத்த கழிவு பொருட்கள் உற்பதியாளர்கள் வெவ்வேறு கம்போஸ்டிங் முறைகளைப் பயன்படுத்தலாம்.

உரம் விற்க விரும்புவோர் மொபைல் ஃபெர்டிலைசர் மேனேஜ்மென்ட் சிஸ்ட்டதில் பதிவு செய்யவேண்டும். இது 5000 சதுர அடி நீளம் கொண்ட வீட்டு வசதி சங்கங்கள் மற்றும் குடியிருப்புகளும் இந்த சேவயைப் பயன்படுதிக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு

கம்போஸ்டிங் செயல்முறை குறித்த விவரங்களுக்கு மதுரைகார்ப்பரேஷனை தொடர்புகொள்ளலாம்.  அல்லது 98942 33331 என்றஎண்ணில் திரு. திருப்பதியை தொடர்பு கொள்ளலாம்.

 

Related Articles

மக்களுக்கு விசம் கொடுத்து சம்பாதிக்கிறது... (TASMAC - Tamilnadu Anaiththu Samooga Makkalum Arundhum Cool Drinks) சமூக வலை தளங்களில் உலவிக் கொண்டிருக்கும் வரிகள் இது. உண்மை தான். தெருவுக்கு தெரு ...
ஐபிஎல் அட்டவணை 2018... போட்டி எண் தேதி போட்டி நேரம் இடம்1 7-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி...
இளைஞர்களுக்கான கதைசொல்லியை பற்றி தெரிந்த... திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் மற்றும் கதைசொல்லி பவா செல்லத்துரை. நிறைய இளைஞர்களை தன் வசீகர குரலால் இலக்கிய உலகிற்கு அழைத்து வரும் இந...
நான் சிம்பிளான ஆளு இல்ல – நடிகர் ர... சின்னத்திரை பக்கம் அவ்வளவு எளிதாக தலை காட்டாத நடிகர்கள் தான் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றோர். இதில் விஜய் அவ்வப்போது சில தொலைக்காட்சிகளுக்கு பேட்டி...

Be the first to comment on "கழிவுகள் மறு சுழற்சி செய்ய திட்டங்கள் – ஸ்மார்ட் கிளீன் கிரீன் மதுரை"

Leave a comment

Your email address will not be published.


*