விபத்துக்குள்ளான லாரி! டிரைவரை காப்பாற்றாமல் பொருட்களை அள்ளிய மக்கள்!

விபத்துக்குள்ளான லாரி! டிரைவரை காப்பாற்றாமல் பொருட்களை அள்ளிய மக்கள்!

ஒரு லாரி விபத்துக்கு உள்ளானா போதுமே! உடனே அதுல இருக்குற பொருள திருட கூட்டம் கூட்டமா வந்துடுவிங்களே! – இந்த வரிகளை ரமணா விஜயகாந்த் ஸ்டைலில் வாசித்துப் பாருங்கள். இக்கட்டான சூழலில் நாம் எவ்வளவு அல்பத்தனமாக நடந்து கொள்கிறோம் என்பது புரியும்.

சமீபத்தில் வெளியான வட சென்னை படத்தில் அரசியல் தலைவர் ஒருவர் இறந்துவிட வட சென்னையில் உள்ள குறிப்பிட்ட பகுதி மக்கள் அங்கிருக்கும் டிவி, பிரிட்ஜ், தையல் மிஷின் என்று பல கடைகளுக்குள்  கிடைத்த வரை லாபம் என்பது போல் செயல்படுவார்கள். அந்தக் காட்சியை எதிர்த்து பலரும் கருத்து தெரிவித்தனர். இயற்கைச் சீற்றத்தின் போதோ, விபத்தின் போதோ பல பொருட்களை உள்ளடக்கிய கடைகளில் லாரிகளில் சூறையாடி வருவது மக்களுக்கு பிடித்தமான விளையாட்டு போல.

மும்பை – புனே விரைவுச் சாலையில் லோனாவாலா என்ற இடத்தில்  வெங்காய லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி இருக்கிறது. லாரி பலத்த சேதத்துடன் கவிழ்ந்து கிடக்க ஓட்டுநர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.  லாரி விபத்துக்குள்ளான செய்தி அறிந்த மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருக்கின்றனர். மனிதாபிமானம் மிக்க அந்த மக்களுக்கு ஓட்டுநர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பது தெரியவில்லை. ஓட்டுநரை காப்பாற்றுவதை விடுத்து வெங்காயங்களை  அள்ளிச் செல்வதில் ஆர்வம் காட்டி இருக்கிறார்கள். சரி அந்தப் பகுதி மக்கள் தான் அப்படி என்றால் அந்த வழியே பயணித்த பைக் மற்றும் கார் ஓட்டிகளும் அதையே செய்திருக்கிறார்கள்.

பாதிக்கப்படும் லாரி ஓட்டுனர்கள் :

லாரியில் ஏற்றிச் செல்லப்படும் பொருட்கள் அனைத்தும் லாரி ஓட்டுனர் உடையது அல்ல. அந்த லாரியை அந்த டிரைவரிடம் கொடுத்து அனுப்பிய லாரி ஓனர் உடையதும் அல்ல. இவர்கள் எல்லாம் பொருட்களை எடுத்துச் செல்லும் இடை வேலையாட்கள் மட்டுமே. ஆக பொருட்கள் அவர்கள் உடையதாக இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் பொருட்களை பத்திரப்படுத்துவதில் இந்த இடை வேலையாட்களுக்கு தான் பொறுப்பு அதிகம்.

லாரியை கிளப்புவதற்கு முன் பூஜை போட்டு லாரியை எடுக்கும் டிரைவரின் மனநிலையை நாம் யாரும் புரிந்து கொள்வதில்லை. ஒரு நாள் தாமதமானாலும் அவர்களுக்கு குறைந்த பட்சம் இருபதாயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆக முடிந்த வரை ஓய்வு எடுக்காமல் டீசலை மிச்சம்படுத்தும் நோக்கத்துடன் கணிசமான வேகத்தில் தொடர்ந்து ஓட்டிக்கொண்டே இருக்க வேண்டிய சூழல். இடையில் வழிப்பறி கொள்ளையர்கள், டோல்கேட் தொல்லை என்று உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் அவர்கள் படும்பாடு பற்றி சொல்லி மாளாது.

இப்படிபட்ட மன அழுத்தத்துடன் லாரி ஓட்டுனர்கள் தங்கள் பொழப்பை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் லாரி விபத்துக்கு உள்ளாகும் போது நாம் பொறுக்கி எடுத்துச் செல்லும் பொருட்களின் நஷ்டக்கணக்கு எல்லாம் அந்த லாரி ஓட்டுனரின் தலையில் தான் விழும். ஒரு ஊரே சேர்ந்து ஒரு லோடு லாரியை சூறை ஆடியிருக்கிறது என்றால் எப்படியும் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படும். அத்தனை லட்சமும் அந்த சாமான்யனான லாரி ஓட்டுனர் தான் கட்டித் தொலைக்க வேண்டும்.

ஓசிக்கு ஆசைப்பட்டு:

சுமார் 15 வருடங்களுக்கு முன் ஸ்ரீ பெரும்பூதூர் அருகே பெட்ரோலிய லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது பெட்ரோலை பாத்திரத்தில் பிடிக்க வந்து உயிரை விட்டார்கள் நம் மக்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

Related Articles

இலவசம் சரியானது என்பவர்களுக்கு சீமானின் ... தி. மு. க மற்றும் அ. தி. மு. க அரசு இரண்டும் மாற்றி மாற்றி இதுவரை இலவசமாக கொடுத்த பொருட்கள் என்னென்ன என பார்ப்போம். மதிய உணவுத் திட்டம்: ஏழைகள் சாப...
அசுரன் படத்தில் உங்களுக்குப் பிடித்த வசன... கடந்த ஆயுத பூஜை அன்று வெளியாகி இன்றுவரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அசுரன். இந்தப் படத்தில் உள்ள வசனங்கள் வட்டார வழக்கு உச்சரி...
12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வ... பெண்களுக்கு எதிரான, குறிப்பாகக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வரம்பு மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதற்கு எதிராகக் கடுமையான சட்டங்கள்...
தைவானைத் தாக்கியது கடும் நில நடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 6 .4 என்று பதிவாகி இருக்கும் நில நடுக்கம் தைவானில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு தைவானின் சுற்றுலா நகரமான ஹுவாலியனை இந...

Be the first to comment on "விபத்துக்குள்ளான லாரி! டிரைவரை காப்பாற்றாமல் பொருட்களை அள்ளிய மக்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*