குழந்தை பெற்றுக்கொள்வதை திட்டமிட்டு தள்ளிப்போடுவது சரியா

Is it good to delay pregnancy

முதலில் திட்டமிடுதல் சரியா? என்ற கேள்விகள் இல்லாமல் மனிதன் சுதந்திரமாய் வாழ்ந்தான். பிறகு உணவு சமைப்பது, சேமிப்பது தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாகத் திட்டமிடலை கற்றுக்கொண்டான். 

சொத்து சேர்ப்பதில் திட்டம், காதலிப்பதில் திட்டம், கல்யாணம் பண்ணுவதில் திட்டம் என்பது போய் இப்போது குழந்தை பெற்றுக் கொள்வதிலும் திட்டம்போட ஆரம்பித்துவிட்டான் மனிதன். ஏன் அரசாங்கமே மக்கள்தொகையை கட்டுப்படுத்த இதை திட்டமாக வைத்துள்ளது. அதெல்லாம் ஒருபுறமிருக்க குழந்தை பெற்றுக்கொள்வதை திட்டமிட்டு செய்ய வேண்டும் என சொல்வது சரியா தவறா என்பதை பார்ப்போம்.  (பிப்ரவரி 2, 2020 ல் நடந்த நீயா நானா நிகழ்ச்சியின் எழுத்து வடிவ தொகுப்பு இது)

குழந்தை பிறப்பை திட்டமிடுவது சரி என்பதற்கான காரணங்கள்:

 1. கணவன் மனைவிக்குள் சில வருடங்கள் புரிதல் வேண்டும். வெளிநாட்டில் இருந்தால் தம்பதிகளின் பெற்றோர்களின் கவனிப்பு கிடைக்காது என்பதால் தள்ளி வைத்து பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக குடும்பத் தலைவனாக குடும்பத் தலைவியாக நன்றாக அனுபவம் ஆன பிறகு பெற்றுக்கொள்ளலாம். 
 2. குழந்தை பிறக்கும்போது அந்த குழந்தைக்கான கவனிப்புக்கான இருப்புத்தொகை இருக்க வேண்டும். பொருளாதார உயர்வும் இருக்க வேண்டும். அந்த தொகை சேரும் வரை குழந்தை பிறப்பை தள்ளி போடலாம். 
 3. குழந்தை பிறந்துவிட்டால் கணவன் மனைவிக்குள் இருக்கும் காதல் மறைந்து முழுக்க முழுக்க குழந்தை மீதே கவனம் மாறிவிடும் என்பதால் குழந்தை பிறப்பை தள்ளி போடலாம். 
 4. கணவனோ மனைவியோ அவர்களின் உயர்கல்விகளை முடித்து நல்ல வேலை (அரசு வேலை போன்ற கௌரவமான வேலை) கிடைக்கும் வரை, லட்சியம் நிறைவேறும் வரை குழந்தை பிறப்பை தள்ளி போடலாம். கனவுகளையும் சுமந்துகொண்டு கருவையும் சுமந்துகொண்டு இருப்பதை விட கனவுகள் நிறைவேறிய பிறகு குழந்தையை இன்னும் கவனிப்பாக ரிலாக்சாக வளர்க்கலாம். 
 5. அரேன்ஜ் மேரேஜ் என்றால் நாலு பேரு மெச்சும்படி (சிறந்த ஜோடி என பெயர் பெற்ற பிறகு) காதலர்களாக மாறி வாழ்ந்துகாட்டிய பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.  
 6. என் குழந்தையை நான் பெஸ்ட்டாக வளர்க்க வேண்டும் அதற்காக நாங்கள் பெஸ்ட்டாக மாறும் வரை காத்திருந்து பெற்றுக்கொள்ளலாம். 
 7. கணவன் மனைவிக்குள் வரும் புரிதலற்ற சண்டை குழந்தையால் தீர்வாகும் என்பது பொய். இவர்கள் போடும் சண்டையால் குழந்தையும் பாதிக்கப்படுகிறது. 
 8. குழந்தை பெற்றுக் கொண்டதும் உடலுறவு வைத்துக்கொள்வதை தவிர்ப்பதால் திருமணமான முதல் இரண்டு வருடங்கள் குழந்தை பிறப்பை தள்ளிப் போட்டு உடலுறவுகளை ரசித்து அனுபவித்து பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம். 

குழந்தை பிறப்பை திட்டமிடுவது தவறு என்பதற்கான காரணங்கள்: 

 1. சிறந்த ஜோடி என்பது ஒருத்தர் நினைப்பதை இன்னொருத்தர் செய்வது தான். இந்தப் புரிதலுக்கு வருடக் கணக்கில் கால அவகாசம் தேவையா? சிறந்த ஜோடி ஆகும் வரை குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவது தவறு. 
 2. பொருளாதார மேம்பாடு என்பதே தெளிவில்லாத விஷயம். குழந்தைக்கு செலவழிப்பதில் என்ன செலவாகப் போகிறது. சிக்கனமாய் வாழத் திட்டமிட்டால் குழந்தை பிறப்பு ஒரு சுமையாக தெரியாது. குழந்தைக்கு எல்லாத்தையும் பெஸ்ட்டா தான் தருவேன் என்று சொல்வது பொருளாதார மேம்பாடு அல்ல. எப்படிபட்ட சூழலிலும் குழந்தையை வளர்க்க வேண்டும் அப்போதுதான் குழந்தை எப்படிபட்ட சூழலிலும் வளர கற்றுக்கொள்ளும். 
 3. பொருளாதார மேம்பாடு, லட்சியம் நிறைவேற்றல் என்று காரணம் சொல்லி குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப் போடக் கூடாது, இதனால் இயற்கையாக குழந்தை பிறத்தல் தள்ளிப்போகும். 
 4. குழந்தை இல்லையா? டாக்டர்ட போனிங்களா? பரிகாரம் பண்ணிங்களா? என்று கேள்விகளை கேட்டு ப்ரஷர் ஆன பிறகு குழந்தை பிறப்பது கடினமாக மாறிவிடும். 
 5. புதுமண தம்பதிகள் வாழ்க்கையை உற்சாகமாக தொடங்குவீர்கள். அந்த உற்சாகத்துடன் குழந்தை பெற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் பிரஷர் இல்லாமல் வாழலாம். 
 6. குழந்தை பிறந்த பிறகு கணவன் மனைவி என்ற பொறுப்புணர்வு அதிகமாகும். புரிதலும் அதிகமாகும். 
 7. முதல் குழந்தை பெற்றுக் கொள்வதை திட்டமிட்டு செய்யக் கூடாது. உடனே பெற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவது குழந்தையை வேண்டுமானால் திட்டமிட்டு பெற்றுக் கொள்ளலாம். 
 8. முதலிலெல்லாம் மகப்பேறு மருத்துவமனை மட்டுமே இருக்கும். தற்போது கிராமங்களில் கூட கருத்தரிப்பு மையங்கள் அதிகமாகிவிட்டன. இது நல்ல விஷியம் அல்ல. 
 9. மருத்துவரிடம் கலந்துரையாடிய பிறகு பெண்ணின் உடல் வலிவைப் பொறுத்து மருத்துவர் ஓகே சொன்னால் குழந்தை பிறப்பை தள்ளிப் போடலாம். அது இல்லாமல் தள்ளிப்போடுவது ஒருவேளை ஆபத்தில் முடியலாம். 

குழந்தை பிறப்பு பற்றிய திருக்குறள்கள்: 

அதிகாரம் – 7. புதல்வரைப் பெறுதல்

 1. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.

 1. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.

 1. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்.

 1. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.

 1. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

 1. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.

 1. தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.

 1. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

 1. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

 1. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்.

Related Articles

செல்போன் டவரால் சிட்டுக்குருவிகள் அழிந்த... கடந்த சில வருடங்களாக மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  செல்போன் டவர்கள் ஊரெங்கும் முளைக்கத் தொடங்கிய காலத்தில் செ...
தேசிய விருதுபெற்ற இயக்குனர் செழியனின் &#... சினிமாவில் டைரக்டர் ஆக வேண்டும் என்று ஆர்வம் உள்ள இளைஞர்கள் சினிமா குறித்த கண்ட கண்ட புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள். உள்ளே விரித்துப் பார்த்தால் ஒன்...
ஜித்தன் ரமேசின் “ஒங்கள போடனும் சார... ஒங்கள போடனும் சார்... சுருக்கமாக ஓபிஎஸ்... இந்த மாதிரி டைட்டிலை எங்கிருந்து பிடிக்கிறார்கள் ? யாருக்காக வைக்கிறார்கள் ? என்பது கேள்விக் குறியே. தியேட்...
சிஎஸ்கே அணியின் தோல்வி குறித்த பிரபலங்கள... Ada pongada !!! Well played Mumbai !!! And yes தோத்தாலும் ஜெய்ச்சாலும் #CSK4Life  - ஆர் ஜே பாலாஜி CSK !! WATSON -#respect .. millio...

Be the first to comment on "குழந்தை பெற்றுக்கொள்வதை திட்டமிட்டு தள்ளிப்போடுவது சரியா"

Leave a comment

Your email address will not be published.


*