இயக்குனர் வெற்றிமாறன் பற்றிய 25 தகவல்கள்!

25 Informations about Director Vetrimaaran
  1. இயக்குனர் வெற்றிமாறனின் அப்பா ஒரு வெட்னரி சயின்டிஸ்ட். அம்மா நாவலாசிரியர்.
  2. படித்தது ஆங்கில இலக்கியம். லயோலா கல்லூரியில் படித்தார். தமிழ் இலக்கியம் படித்த பையன் வேண்டும் என்று இயக்குனர் பாலுமகேந்திரா கேட்டபோது ஆங்கில இலக்கியம் படித்த வெற்றிமாறன் சென்று சில புத்தகங்களை பற்றி பேசி உதவி இயக்குனராக சேர்ந்தார்.
  3. காதல் திருமணம் செய்துகொண்டார். மனைவி பெயர் ஆர்த்தி. மகள் பெயர் பூந்தென்றல்.
  4. விசாரணை படத்தின் மூலக்கதையான லாக்கப் நாவலை வெற்றிமாறனுக்கு கொடுத்தவர் ஞானசம்பந்தன் என்கிற தங்கவேலவன்.
  5. விசாரணை படத்தை கேன்ஸ் விழாவுக்கு அனுப்புவது குறித்து பேசிக்கொண்டிருக்கையில் தனது நண்பரான எடிட்டர் கிஷோரை இழந்தார்.
  6. வெனிஸ் திரைப்பட விழாவில் முதன்முதலில் கலந்துகொண்ட படம் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படம் மட்டுமே.
  7. வெற்றிமாறன் பாலுமகேந்திராவை முதன்முதலில் அவருடைய அலுவலகத்தில் சந்தித்த தேதி டிசம்பர் 26, 1997. பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் பெயர் ஃபாதர் ராஜநாயகம்.
  8. பாலுமகேந்திரா அலுவலகத்தில் வெற்றிமாறன் முதன்முதலில் சந்தித்த நபர் நா. முத்துக்குமார். முத்துக்குமார் தான் பாலுமகேந்திரா அலுவலகத்தில் வெற்றிமாறனுக்கு சீனியர் மற்றும் நண்பர். பாலுமகேந்திரா வெற்றிமாறனை வெட்டி என்று செல்லமாக அழைப்பார்.
  9. வெற்றிமாறனின் ஹச் ஓ டி பெயர் வீ. ஜே. மேத்யூ. வெற்றிமாறனுக்கு மிகவும் பிடித்த பேராசிரியர் பெயர் ஜோசப் சந்திரா. மிகவும் பிடித்த தோழி பெயர் ரஜினி ஹேமா.
  10. பாலுமகேந்திராவின் “கதை நேரம்” சமயத்தில் தர்மன் (பொறியாளன் தாணுகுமார்), கௌரி, வெற்றிமாறன் மூவரும் உதவி இயக்குனராகப் பணியாற்றினர். அப்போது வெற்றிமாறன் தான் சீனியர்.
  11. வெற்றிமாறனுக்கும் இயக்குனர் பாலுமகேந்திராவுக்கும் சின்ன மனஸ்தாபங்கள் நடந்தது உண்டு. பாலுமகேந்திராவை அந்தாளு என்று மரியாதைக் குறைவாக வெற்றிமாறன் பேசியதுண்டு.
  12. வெற்றிமாறனுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு செஸ். இயக்குனர் தங்கவேலவனுடன் விடிய விடிய விளையாடியதுண்டு. அதே போல இசையமைப்பாளர் ஜீவி பிரகாசிடம் விடிய விடிய அரட்டை அடிப்பது அவருக்குப் பிடித்தமான ஒன்று.
  13. ஆடுகளம் படத்தில் கருப்புக்கும் பேட்டைக்காரனுக்கும் இடையே ஈகோ சண்டை நடக்கும். அது பாலுமகேந்திராவுக்கும் வெற்றிமாறனுக்கும் இடையே நடந்த ஈகோ சண்டையை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  14. வெற்றிமாறனுக்கு அண்ணன் கிடையாது. இயக்குனர் தங்கவேலவனை தன்னுடைய அண்ணனாக நினைக்கிறார் வெற்றிமாறன்.
  15. ஆடுகளம் படத்திற்கு இயக்குனர் விக்ரம் சுகுமாரன் வசனம் எழுதி தந்தார் வெற்றிமாறனுக்காக. விக்ரம் சுகுமாரன் முதன்முதலில் பாலுமகேந்திரா அலுவலகத்துக்கு வந்த போது வெற்றிமாறன் அவரை உள்ளே நுழைய மறுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
  16. வெற்றிமாறன் படங்களின் எடிட்டிங் வேலைகள் வித்தியாசமாகவும் தரமாகவும் இருப்பதற்கு காரணம் பாலுமகேந்திராவின் எடிட்டிங் திறமையும் கற்பித்தலும் ஆகும்.
  17. பாலுமகேந்திராவின் கதைநேரம் சமயங்களில் வெற்றிமாறன் வெறும் நான்கு மணி நேரங்களே உறக்கம் கொண்டார்.
  18. தன்னோடு உதவி இயக்குனராக பணிபுரிந்த மணி (உதயம் NH பட இயக்குனர் மணிமாறன்) என்பவரை வெற்றிமாறனுக்கு ரொம்ப பிடிக்கும். குறிப்பாக மணி வைக்கும் சாம்பாருக்கு வெற்றிமாறன் அடிமை.
  19. இயக்குனர் பாலுமகேந்திராவிடம் இருந்து பிரிந்து “காதல் வைரஸ்” படம் இயக்கிய இயக்குனர் கதிரிடம் சில காலம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார் வெற்றிமாறன்.
  20. இயக்குனர் வெற்றிமாறனுக்கு வருங்கால மனைவி ஆர்த்தியை அறிமுகம் செய்து வைத்தவர் வெற்றிமாறனின் நெருங்கிய தோழி ரஜினி ஹேமா என்பவர் தான். ஆனால் அக்காலத்தில் ஹேமாவுக்குத் தெரியாமலே இருவரும் ஜோடி சேர்ந்து பல இடங்களில் சுற்றி உள்ளனர்.
  21. வெற்றிமாறனுக்காக தனக்கு ஹைதரபாத்தில் கிடைத்த வேலையை உதற இருந்தார் ஆர்த்தி. அப்போது, ” உன் புரொஃபஷனல் கோல் – ஐ நம்ம ரிலேசன்ஷிப் கெடுக்கற மாதிரி இருந்தா இந்த ரிலேசன்ஷிப்ல அர்த்தமே இல்ல… ” என்றார் வெற்றிமாறன். ஆர்த்தி 2,000ம் சம்பாதித்த போது அதில் 1,000ம் ரூபாயை பெற்றுக்கொண்ட வெற்றிமாறன், ஆர்த்தி 20,000ம் சம்பாதிக்க ஆரம்பித்ததும் அதில் 10,000ம் பிடுங்கும் நபராக இருந்தார் வெற்றிமாறன்.
  22. பொல்லாதவன் படத்தில் ஒரு தெருவில் கரண்ட் போனதும் இருட்டுக்குள் வைத்து தனுஷ் நாயகிக்கு கிஸ் கொடுப்பார். இந்த கிஸ் சீன் நிஜத்தில் வெற்றிமாறனுக்கும் ஆர்த்திக்கும் நடந்தவை. அக்காலத்தில் வெற்றிமாறன் ஆர்த்தியுடன் நெருக்கமாக இருக்க முயன்ற எல்லா தருணங்களுமே சொதப்பலில் தான் முடிந்திருக்கின்றன.
  23. வெற்றிமாறனும் ஆர்த்தியும் சேர்ந்து பார்த்த முதல் படம் கமலின் “காதலா காதலா”.
  24. வெற்றி மாறனுக்கு 26 வயது வரை பைக் ஓட்டத் தெரியாது. மணிமாறன் திருமணத்தின் போது வாங்கிய பைக்கில் தான் ஓட்டக் கற்றுக்கொண்டார். வெற்றிமாறனுக்கு முதலில் பைக் வாங்கி தந்தவர் ஆர்த்தி தான். யமஹாஆர் எக்ஸ் 135, TN 10 D 3551. பைக் வாங்கியதும் முதலில் கோயிலுக்குப் போகாமல் நேராக பாலுமகேந்திராவின் வீட்டுக்குத் தான் போனார் வெற்றிமாறன்.
  25. ஆர்த்திக்கும் வெற்றிமாறனுக்கும் செப்டம்பர் 8ம் தேதி திருமணம் நடந்தது. மகள் பூந்தென்றலின் ஒரு வருட வளர்ச்சியை நாள்தோறும் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

Related Articles

உங்கள் வாழ்க்கையைச் சுற்றி எத்தனை விசாரண... விசாரணை, உறியடி இந்த இரண்டு படங்களுமே மிக சின்ன படங்கள். ஆனால் வீரியமான கதைக்களம் கொண்ட படங்கள். "அதிகாரத்தை எதிர்த்து கேள்வி எழுப்புதல்" என்பது தான் ...
பெண்களின் மார்பகங்கள் தமிழ் சினிமாவில் வ... தனக்கென பெரிய அளவில் ரசிகர் படை வைத்திருக்கும், குறிப்பாக பெண் ரசிகர்கள் வைத்திருக்கும் விஜய் அவர்களின் படங்களில், பெண்களின் மார்பகங்களை எப்படி எல்லாம...
இணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி! –... கடந்த ஜனவரி 14ம் தேதி துக்ளக் பத்திரிக்கையின் 50ம் ஆண்டு விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் 'முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் எ...
எவிடென்ஸ் கதிர் எழுதிய சாதி தேசத்தின் சா... சாதியும் சாம்பல் பறவையும், சாதிக் களமாகும் பள்ளிக்கூடங்கள், அன்பினை இழக்கும் சமத்துவம், போராட்டமும் வாழ்வும், தாக்குதல்களும் சவால்களும் சாதனைகளும், நட...

Be the first to comment on "இயக்குனர் வெற்றிமாறன் பற்றிய 25 தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*