Home செய்திகள்
July 18, 2019
ஒழுக்கம் என்பது தனக்கும் அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்வதாகும். நமக்கு மாறுபட்ட கருத்துடையயோரும் நம்மிடம் பரிதாபம் கொள்ளும் முறையில் நம் சொல்லும் செயலும் இருக்க வேண்டியது அவசியம். நமக்கு வேண்டுவது எல்லாம் கட்டுப்பாடும் ஒற்றுமை உணர்ச்சியும் தான். நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோமோ அதேபோல் நாம் பிறரிடம் நடந்துகொள்வது தான் ஒழுக்கம். ஒழுக்கம் என்பது சமுதாயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே தன்மையாக இருக்க வேண்டும். ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும், நடந்தபடி சொல்வதுமே ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல. ஒருவன் மக்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து பிறரை மோசம் செய்யாமல் அன்புடன் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். உண்மையாக நாணயமாக நடப்பவனுக்கு மக்கள் நெஞ்சத்தில் ஓர் சிறந்த இடம் உண்டு. தேவையும் அவசியமும் அதிகமாக அதிகமாக நாணயக் கேடும் ஒழுக்க கேடும் வளர்ந்துகொண்டே தான் போகும். பிறருக்கு ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்வதை விட தன்னிடம் அது எவ்வளவு இருக்கிறது என்று ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். தாங்கள் தங்கள் குழந்தைகளுக்கு நகை செய்து போடுவதற்கு பதிலாக கல்வி செய்து வையுங்கள். கல்வியினுடைய குறிக்கோள் என்பது பணம் சம்பாதிப்பது மாத்திரம் என்று நினைக்க கூடாது. படிப்பு அதிகமானால் இழிநிலை தானாகவே மாறும். உயர்வு தாழ்வு தானே அகன்று விடும். அனைவரும் சமம் என்ற வாய்ப்பு தானாகவே ஏற்பட்டு விடும். பள்ளியில் கல்வி கற்பதன் மூலம் மாணவர்களின் பகுத்தறிவை வளர செய்ய வேண்டும். மற்ற நாட்டவர்கள் கண்டுபிடித்த விஞ்ஞான அதிசய அற்புதங்கள் அனுபவிக்கிறோமே ஒழிய நாம் கண்டுபிடித்தது என்று சொல்ல எதுவுமே இல்லையே. ஒரு சமூகத்திற்குச் சுயமரியாதை வேண்டுமானால் தொழிற் கல்வி மிக அவசியமானது. வாசக சாலைகளில் நல்ல அறிவை வளர்க்கும் அறிவுக்கு உணவாகும் எல்லா கொள்கைகள் கொண்ட புத்தகங்களையும் வைக்க வேண்டும். ஆசிரியன் என்பவன் இயற்கை அறிவு பெற்றவனாக அதில் மேம்பட்டவனாக உலக அனுபவம் பெற்றவனாக இருக்க வேண்டும். பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை தான் அவன் தன் லட்சியத்துக்கு கொடுக்கும் விலை. பக்தி என்பது சரீரத்தினாலும் தொண்டு செய்ய வேண்டியதுடன் மனத்தினாலும் செய்ய வேண்டும். மக்கள் நலனையும் அவர்களது சேமத்தையும் சாந்தியையும் காப்பாற்றுவதுதான் பொது நலவாதிகளின் மனத்தினாலும் செய்ய வேண்டும். பெண் தன்னை பற்றியும் தனது கற்பை பற்றியும் காத்துக்கொள்ள தகுதி பெற்றுக் கொள்ள விட்டுவிட வேண்டுமே ஒழிய ஆண்காவல் கூடாது. தன் இனத்தையே அடிமைப்படுத்தி அதைக் கொடுமைபடுத்தி வாழும் கெட்ட குணம் மனித ஜீவனிடத்திலயே அதிகமாய் இருந்து வருகிறது. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம்தான் சேவை. பேதமற்ற இடம் தான் மேலான திருப்தியான இடமாகும். காலத்தை எதிர்பார்ப்பது என்பதே சோம்பேறித் தனத்தை தான் குறிக்கும். மனிதன் உலகில் தன்னுடைய சுயமரியாதையை தன் மானத்தை உயிருக்கு சமமாக கொள்ள வேண்டும். ஓய்வு, சலிப்பு என்பனவற்றை தற்கொலை என்றே கூறுகிறேன். அளவுக்கு மீறிய உற்சாகமும் கண்மூடித் தனமான துணிவும் பயனளித்து விடாது என்பதோடு எதிர்ப்பான பலனைக் கொடுக்க கூடியதாகவும் ஆகிவிடலாம். பெண்களுக்கு படிப்பு சொத்துரிமை ஆகியவை இருந்து விட்டால் நாடு கண்டிப்பாக முன்னேற்ற மடைந்து விடும். காலத்தூக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாக வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆய்த்தமாக இருக்க வேண்டும். கிராம முன்னேற்றமென்றால் நாட்டில் கிராமங்களே இல்லாமல் சேய்து விடுவது. மாறுதல்களை சவுகரியத்திற்கு அனுகூலமாய்த் திருப்பிக் கொள்வதுதான் சீர்திருத்தமாகும். வாழ்க்கை என்பது தனித்தனி மனிதனைப் பொறுத்த தத்துவம் என்பது கூடவே கூடாது. ஆண்களுக்கு கற்பு இருந்தால் அது தானாகவே பெண்களையும் கற்பாக இருக்கச் செய்யும். மனித வாழ்வில் வெற்றி என்னவென்றால் அவனவன் மனத் திருப்தியோடு வாழ்வது தான். மனிதன் யார் என்றால் நன்றி விசுவாசமுடையவன். எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். இந்நாட்டில் அநீதியும் நாணயக் குறையும் அதிகமாக இருப்பதற்குக் காரணம் நீதிக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதாகும். ஒருவனுடைய யோக்கியதையைப் பார்க்க வேண்டுமானால் அவனுடைய விரோதியைப் பாருங்கள். பேத உணர்ச்சிகள் மக்களிடையே இருந்து வரும் வரையில் மனித சமுதாயம் குமுறிக் கொண்டு தான் இருக்கும். வருவாய் போதாமல் இருப்பதற்கும் கடன்காரர்களாய் இருப்பதற்குக் காரணம் நமது பலவீனத்தின் பயனான பேராசையும் அவசியமுமேயாகும். ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள். ஒவ்வொருவரும் பொது நலத்துக்காக என்ன செய்கிறோம் என்று எண்ணி பார்க்க வேண்டும். பழைய அபிப்ராயங்கள் எல்லாம் அது எதுவானாலும் அடியோடு நடுநிலையிலிருந்து பரிசோதிக்கப்பட வேண்டும். கர்மாவை நம்பினவன் கடைத் தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான். மக்களிடம் உணர்ச்சி ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும். ஒரு ஜீவனை பட்டினி போட்டுக் கொல்வதிலும் ஒரு பெண்ணை விதவையாக வைத்துச் சாகாமல் காப்பாற்றுவது கொடுமை அன்றோ என்பதை யோசித்துப் பாருங்கள். நமது நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்திரத்தை கெடுப்பது என்று தான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். பக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். பிச்சை கொடுப்பதூம் பிச்சை எடுப்பதும் சட்ட விரோதமான காரியங்களாக கருதப்பட வேண்டும்.
Be the first to comment on "தந்தை பெரியாரின் பொன்மொழிகள் 50!"