எவிடென்ஸ் கதிர் எழுதிய சாதி தேசத்தின் சாம்பல் பறவை புத்தகம் ஒரு பார்வை!

A view on Saathi Desathin Saampal Paravai - book written by Evidence Kathir

சாதியும் சாம்பல் பறவையும், சாதிக் களமாகும் பள்ளிக்கூடங்கள், அன்பினை இழக்கும் சமத்துவம், போராட்டமும் வாழ்வும், தாக்குதல்களும் சவால்களும் சாதனைகளும், நட்சத்திரமான ரோகித், கொலையை சாமியாக்கும் சாதி, என்கவுன்டரும் அதன் அரசியலும், ஆதாரம் நடமாடட்டும், நீதி நோயாளிகள், எளிய மனிதர்களும் வலிமையான சிந்தனைகளும், காதல், தலித் அடையாளம் அவசியமா? கள்ள மௌனத்தை உடைக்கும் களம், சாதியும் தந்திரமும், தேர் சாம்பல் எழுப்பும் கேள்வி, இழிதொழிலும் குடியும், பாகுபாடுடன் ஒலிக்கும் நீதியின் ஓசைகள், உங்களூக்கு கிடைத்தால் சமூக நீதி, எங்களுக்கு கிடைத்தால் சலுகையா?, வலிகளுக்கு சிகிச்சை உண்டு, அவற்றின் கேள்விகளுக்குப் பதில் உண்டா?, மதமாற்றமா? மதவாதமா?, சாதி அதிகாரமும் பிளக்ஸ் போர்டும், காற்றில் பறக்கும் சர்வதேசிய சட்டங்கள், பிசாசை விரட்ட என்ன செய்யப் போகிறோம்?, போராட்டத்தைத் தூண்டுகின்றனவா தொண்டு நிறுவனங்கள்? மாற்றத்தை விரும்ப நமக்கென்ன தயக்கம், சடலமும் சமூகநீதியும், இது இயற்கை சீற்றமல்ல, அநீதிக்கு எதிரான சீற்றம், காவல் நீதியும் சாதி நீதியும் போன்ற தலைப்புகளின் கீழ் சாதியைப் பற்றியும் அவற்றால் உண்டான விளைவுகள் பற்றியும் விவரிக்கிறார் எவிடென்ஸ் கதிர்.  

கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டதற்காக 44 தலித்துகளை 1968 டிசம்பர் 25ம் தேதி ஆதிக்கசாதி வன்கொடுமை கும்பல் ஒரு குடிசைக்குள் வைத்து எரித்துக் கொன்றது என்று தொடங்குகிறது எவிடன்ஸ் கதிரின் தகவல்கள். அதனைத் தொடர்ந்து பின்வரும் பல அத்தியாயங்களில் சாதிக் கொடுமைகள் பற்றிய தகவல்களை அடுக்கி வைக்கிறார். ஒவ்வொன்றும் நமக்குள் குடியிருக்கும் சாதி வெறியனை சாட்டையால் அடிப்பது போல உள்ளது.

விழுப்புரம், சிவகங்கை, வாச்சாத்தி, கொடியங்குளம், பரமக்குடி ஆதிக்க சாதி வன்முறை, தலித் பஞ்சாயத்து தலைவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள், தாமிரபரணி ஆற்றங்கரை சம்பவம், பள்ளிக்கூடங்களில் நடக்கும் சாதி பாகுபாடு, கிருஷ்ணகிரி அரசம்பட்டி மோட்டூர் கிராம சத்துணவு சமையல்காரர் மீதான சாதி ஆதிக்கம், அங்கன்வாடியில் சாதி பாகுபாடு, சாதிய வன்முறைகளுக்கு காரணாமாக இருக்கும் வழிபாட்டுத் தலங்கள், மக்கள் போராட்டம் மற்றும் அதை திசை திருப்பும் துப்பாக்கி சூடு சம்பவங்கள், தேசத்தையே புரட்டிப் போட்ட ரோகித் வெமுலாவின் தற்கொலை கடிதம், கௌரவ கொலைகளுக்கு பலியான காதலர்கள் –  குறிப்பாக பெண்கள் என்று சாதியால் நடந்த கொடூரங்களை விவரிக்க அதை படிக்கும் நமக்கோ சாதி பற்றாளர்கள் மீது எரிச்சல் உண்டாகிறது. ச்சை கருமம் எவன்டா இந்த சாதி சனியன கண்டுபிடிச்சான் என்று சாதிய கட்டமைப்பை திட்டத் தோன்றுகிறது.

” நம் நாட்டில் மக்கள் சாதியால் பிளவுபட்டு வாழ்கின்றனர். நம்முடைய வளர்ச்சிக்கு சாதிக் கட்டமைப்புகள் தடையாகவும் உள்ளன. பிறப்பு மற்றும் தொழிலின் அடிப்படையில் பாகுபாடு கடைபிடிக்கும் கொடுமை நீடித்து வருவது கவலையளிக்கிறது.

தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக கள ஆய்வோடு மட்டும் தன் பணியினை நிறுத்திக் கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதியை சட்ட ரீதியாக பெற்றுக் கொடுக்கும் முனைப்பிலும் எவிடன்ஸ் கதிர் ஈடுபட்டு வருகிறார்.

சாதியக் கொடுமைகளுக்கு எதிராக மட்டுமல்ல பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் இந்த நூல் பேசுகிறது. சாதியப் பாகுபாடுகள் எவ்வாறு தனிமனித திறமையைப் புறக்கணிக்கிறது என்பதை கதிர் தெளிவுபடுத்துகிறார். சாதியைவிட மனிதம் பெரிது. ” என்று குறிப்பிட்டுள்ளார் தோழர் இரா. நல்லகண்ணு.

அரசியல் மீது ஈடுபாடு உள்ள, சமூக அநீதிகளை தெரிந்துகொள்ள முற்படும் இளைஞர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்

” சாதி தேசத்தின் சாம்பல் பறவை “.

Related Articles

நாடு முழுக்க நம்மாழ்வார் இயற்கை அங்காடி ... கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பற்றிக் கேட்கும்போது நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் கலைஞர் கருணாநிதி. காரணம் அவர் முதன்முதலில் குளித்தலை த...
இயக்குனர் பாலா பற்றிய சுவாரஸ்யமான தகவல்க... மதுரை பெரியாஸ்பத்திரியில் பிறந்தார். ௧ம்பம் அருகே நாராயணத் தேவன்பட்டி தான் பாலாவின் பூர்வீகம். பெரிய குடும்பம். எட்டு பிள்ளைகள். அப்பா வங்கி வே...
வெக்கை நாவல் – புத்தக விமர்சனம்!... இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வர இருக்கும் படைப்பு எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் தழுவல் என்பது நாம் அனைவரும் அறி...
மக்களின் பாராட்டுக்களை பெற்ற தெலுங்கானா ... உயர் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகள் முதல் கடைநிலை அரசு ஊழியர்கள் வரை அனைவரும் அரசு மருத்துவமனையை நம்ப வேண்டும் என்பதற்கு உதாரணமாக தெலுங்கானாவில் உள்ள...

Be the first to comment on "எவிடென்ஸ் கதிர் எழுதிய சாதி தேசத்தின் சாம்பல் பறவை புத்தகம் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*