மருத்துவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட வசூல்ராஜா திரைப்பட வசனங்கள்!

Dialogues of Vasoolraja Movie dedicated to the doctors

” வா கங்காரு… ” 

” கங்காரு இல்லடா… கங்கா தரன்… “

 

* தரன் தரன் னு பேருல மட்டும் கங்கா தரன் காவிரி தரன்னு வச்சிக்கிட்டு கொடுத்த பணத்தையே திருப்பித் தர மாட்டிங்கிறாயாமே… அந்த போன எடு… “

 

* ” உன் உடம்புலயே உன் பொண்டாட்டிக்கு ரொம்ப பிடிச்சது எதுன்னு சொல்லு… அத வெட்டி அனுப்புறேன் பர்ஸ்ட்டு… “

 

” தாடிதாங்க… “

 

* ” என்னய்யா இது ஆப்ரேசன் தியேட்டருல மசால் வாசம் வீசுது… “

 

” சினிமாமா மாதிரி ஆப்ரேசன்லயும் மசால் கேக்குறாங்களே… சினிமா  மாதிரி ஆப்ரேசனும் தியேட்டர்லதான நடக்குது… “

 

* ” பல நாள் டாக்டர் ஒரு நாள் அகப்படுவான்… “

 

* ” அப்பா தலையெல்லாம் பாத்தியா… முடியெல்லாம் வெள்ளையா இருக்கு… கொஞ்சம் கருப்பா இருந்தாலும் பரவால… உண்மையைச் சொல்லி பொசுக்குனு நெஞ்ச பிடிச்சிட்டார்ன்னா… அம்மா பூவோட பொட்டோட அழகா இருக்குறாங்க… அதெல்லாம் இல்லாம… “

 

* ” உன் பொண்ணு எப்படி இருக்கா.,. “

 

” அவ நல்லா இருக்கா.,, ஹாஸ்பிட்டல் போயிருக்கா… “

 

” நல்லா இருக்கான்னு சொல்ற அப்புறம் ஏன் ஆஸ்பத்திரி போறா… “

 

* ” டேய் டாக்டர்…”

” டேய் டாக்டரா.,.”

” Day டாக்டர தான் அப்படி சொல்லிரக்காங்க… “

 

* ” அவர் ஒரு நேர்மையான.,.”

 

” போலீஸ் ஆபிசரா… “

 

” நேர்மையானனா போலீசாத் தான் இருப்பாரா… நேர்மையன ஸ்கூல் வாத்தியார்… “

 

* ” அதெப்படிடா நீ என்ன அடிக்கள உதைக்கள… உசுர மட்டும் உருவி எடுத்துட்டியே…

 

* ” ஒரு ஹீரோ சொன்னா அத செஞ்சுகாமிக்கனம்… அதான் ஹீரோ… “

 

* ” எச்சக்கள சிங்கம்னா ஏன் எச்சக்கள நாய்ன்னு எடுத்துக்குறிங்க… எச்சக்கள சிங்கம், எச்சக்கள புலி… னு சொல்லலாமா…

 

* ” மார்க்க பந்து… முதல் பந்து… கவித மாதிரி இருக்குதுல்ல… “

 

* ” என்னையப் பாத்தா கிண்டலா இருக்ஙுகா… நான் பர்ஸ்ட் ஸ்டூடன்டு… கலாட்டா பண்ணா காலேஜவே மூடவேண்டி வரும்…”

 

* ” மைக்கு முன்னாடி நின்னு ஆத்து ஆத்துனா ஆத்திட்டு இருக்கான் சொற்பொழிவு…

 

* நிராயுதபாணினா ட்ரெஸ் இல்லாமன்னு அர்த்தம் இல்ல… ஆயுதம் இல்லாதவன்னு அர்த்தம்…

 

* ” என்ன பாப்பு… “

 

” ஆ லாலி பாப்… “

 

” உஸ்ஸ்… ஏன் சத்தம் போட்றிங்க.. “

 

” ஏன் ஆளாளுக்கு எனக்கொன்னு கொடுன்னு கேப்ங்களா… “

 

* பூவர் இந்தியா.,. யூ கோ ஏழை வீடு (கோணிப்பைக்குள்)

 

கேஸ் பேரு ஆனந்த்…

 

கேசுன்னெல்லாம் சொல்லாதிங்க… மிஸ்டர் ஆனந்த்னு சொல்லுங்களே… இப்ப என்ன கெட்டுப் போச்சு…

 

உணர்ச்சிவசப்படல நா கண்ணுல டார்ச் அடிச்சு கேஸ்சு அதுஇதுன்னு சொல்விங்களே அதான்…

 

“12 வருசமா எந்த அசைவும் இல்லாத கேஸ்னால என்ன பிரயோஜனம்… “

 

” த்தோ இப்ப அவர வச்சி பாடம் எடுக்குறீங்களே அதுக்கு பிரயோஜமாகுதே… “

 

” ஆனந்த் சார்.,. ரெண்டு புஸ்தகத்த படிச்சிட்டு டாக்டர் தான் கடவுள்னு சொல்வாங்க… அதயும் நம்பாத… கடவுள் இல்லைனு சொன்னாம் பார் அவளக் கூட நம்பு… கடவுள் இருக்குனனு சொல்வரையும் நம்பு… ஆனா நாந்தான் கடவுள்னு சொல்றவனை மட்டும் நம்பிடாத… “

 

” எல்லோர்த்த்துக்கும் ஒரு பதில் வச்சிருக்கங்க… how do I know…”

 

* “கப்பல் கவுந்திருச்சா… கவலயா உக்காந்துருக்க.., பேப்பர பாத்தா… “

 

” ஆமா சார் நீங்க பாத்திங்களா பேப்பர… வந்தவாசில ஒரு குடும்பத்தைச் சார்ந்தவன் ஏழு பேரு வெட்டிக்கிட்டு செத்துட்டான்… ஆனா பரவால குப்பம்மா காஞ்சிவரத்துல அட்ஜெஸ்ட் பண்ணிட்டா.,. ஒரே பிரசவுத்து ஏழு குழுந்தைங்க… இதிலருந்து என்ன தெரியுது… கடவுளையும் ஜனத்தொகைகையும் ஒன்னும் பண்ண முடியாதுன்றது தெரியுதா… “

 

* “ரிசல்ட் என்னவானாலும் சொல்லிடுங்க… ஆனா சஸ்பென்ஸ் வைக்காதீங்க அதான் தாங்க முடியாது… “

 

* “எனக்கும் உங்கள மாதிரி தான்… வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி… ஆனா அங்கேயே தான் வலி… “

 

” உங்களுக்கு ஸ்டொமக் கேன்சர்… “

 

” இன்னும் அரநாள் தான் என்னுடைய டைம்… இல்ல… ஏன் டாக்டர் எனக்கு மட்டும் இப்டி… நான் சிகரெட் பிடிச்சது இல்ல… குடிச்சது இல்ல… ஒரு பொம்பளய கூட தொட்டது இல்ல… என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் குடிங்கிறாங்க… பொம்பளைங்க கூட சுத்துறாங்க… எனக்கு கூட ஆச தான்… இப்டிலாம் இருக்கனும்னு… என் கடமைய முடிக்கறதுக்குள்ள என் வாழ்க்கையே முடிஞ்சிரும் போல இருக்கு…”

 

*” எவ்ளோ நாள் அவருக்கு…”

 

” கடவுள் மனசு வச்சா… “

 

” என்னா நீங்க கடவுளுக்குப் படிச்சிருக்கிங்களா இல்ல… டாக்டருக்குப் படிச்சிருக்கிங்களா… “

 

* ” பொழைக்க மாட்டான்டிங்க… அப்றம் எதுக்கு ட்ரீட்மெண்ட்… ஆஸ்பத்திரிக்கு சம்பாதிக்கறதுக்கா… அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட்டுனு பில் போட்டு கொடுத்துகின்னே இருப்பிங்க… “

 

* ” இந்த டாக்டருங்களே இப்படித் தான்… சாரி வாட் டூ டு… வெட்டியானுக்குப் புரியுமா சுடுகாட்டுல அழுதுட்டு இருக்கறவங்க கவலை… நானா இருந்தா சொல்லிருக்கவே மாட்டேன்… அவன் என்ன டாக்டருக்காப் படிக்கிறான்… வியாதிப் பேருலாம் புட்டு புட்டு வைக்கிறீங்க… ஒன்னும் இல்லடா உனக்கு சாதாரண வயித்து வலி… மாத்திரைய முழுங்கிட்டு சாராயம் குடி உனக்குப் பிடிச்ச பொண்ணோட ஜல்சா பன்னு னு சொல்லிருப்பேன்…  “

 

* ” நோயாளி டாக்டரப் பாத்து கடவுளேங்குறான்… நர்சப் பார்த்து சிஸ்டருங்குறான்… ஆனா நம்பர் சொல்லி கூப்ட்றிங்க… நோயாளிய குப்பைய அள்ளி தள்ளுற மாதிரி தள்ளுரிங்க.., மனுசன் இல்லாத இடங்க அதான் கிளம்புறேன்… “

 

* ” சிரிச்சிக்கிட்டே சாவுறது பெருசா… சிரிச்சு சிரிச்சே சாவடிக்கறது பெருசா… “

 

* ” யாராது வேணும்னே செய்வாங்களா… ஆனா நான் செய்வேன்… “

 

* ” யாராவது எனக்கு அட்மிசன் பார்ம் பில்அப் பண்ணுங்க… “

 

* ” தர்மாஸ்பத்திரினா பரவால… இவனுங்க எனக்கு மேல வசூல்ராஜாங்க(டாக்டருங்க)… பில்லு போட்டு கிழிச்சு தள்ளிடுவாங்களோன்னு பயம்… “

 

* “பதில் தெரியாதவன்ட கேள்வி கேட்டாகூட தேடிப்பிடிச்சு தப்பாவாவது பதில் சொல்வான்… எனக்கு கேள்வியே தெரியாதே… “

 

* ” நான் ராஜாராமன் இல்லைங்க… வெறும் தெனாலி ராமன்… “

 

* “ஜெயிச்சவன்கிட்ட தோத்தவன் கேக்குற ஒரு வேண்டுகோள். நாளைக்கு சாகீரோட அம்மா அவன் சடலத்த வாங்க வருவாங்க… அவிங்ககிட்ட போய் அந்த பார்ம பில்அப் பண்ணு லஞ்சம் கொடுனு தொந்தரவு பண்ணாதீங்க… “

 

டாக்டர்களே நோயாளிங்க மீது அன்பு பாசம் பரிவு எல்லாம் வையுங்கள்…

Related Articles

“காளைகளுக்காகப் போராடிய நாம் எருமை... தமிழ் யூடியூப் உலகைப் பொருத்தவரை எந்த போலித்தனமும் இல்லாமல் உண்மையான அறச் சீற்றத்துடன் சமூக அவலங்களை பேசி வரும் ஒரே சேனல் என்றால் அது நக்கலைட்ஸ் சேனல்...
காலாவுக்கு இன்னும் நிறைய எதிர்ப்புகள எதி... கர்நாடாகாவில் காலாவுக்குத் தடை விதிக்கப் பட்டு உள்ளது. (இன்னும் சில வெளிநாடுகளில் காலாவுக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் சமூக பரப்பப்படுகி...
பாண்டிச்சேரி கடற்கரையில் கதறி அழுத மைக்ச... துப்பாக்கி முனை படத்தில் ஆஷாத் என்னும் கேரக்டரில் அற்புதமாக நடித்திருந்தார் ஆர்ஜே ஷா.  இவரைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை.  யூடியூப்  ...
ராஜாவுக்கு செக் – தூக்க வியாதியை க... முந்தைய தமிழ் சினிமாக்களில் தூக்கத்தில் நடப்பது, தூக்கத்தில் பேசுவது போன்ற வியாதிகளை காட்டி இருப்பார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வந்த விஷாலின்...

Be the first to comment on "மருத்துவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட வசூல்ராஜா திரைப்பட வசனங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*