ஆட்டோ எக்ஸ்போ 2018ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வகை கார்கள் என்னென்ன?

Autoexpo 2018

இந்தியாவே உற்று நோக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2018ல் பல புதிய வகை கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகன திருவிழாவுக்கு உலகெங்கிலும் இருந்து பங்கேற்பாளர்கள் பங்கு கொண்டிருக்கிறார்கள். இம்முறை மின்சார வாகனங்களுக்கு நிறையவே வரவேற்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மாருதி, ஹோண்டா, பிஎம்டபிள்யூ, டொயோட்டா, ரினால்ட் போன்ற பெரு நிறுவனங்களும் பங்கு கொண்டிருக்கின்றன. உலகெங்கிலும் இருக்கும் இருபது நாடுகளில் இருந்து 1200 பங்கேற்பாளர்கள் வருகை தந்துள்ளார்கள்.

இனி எந்தெந்த நிறுவனங்கள் என்ன வகை கார்களை அறிமுகம் செய்துள்ளன என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

மின்சார கார்கள்

Renault-Trezor

பெட்ரோலிய விலை தொடர்ந்து ஏறிவரும் சூழலில் இந்திய சந்தையில் மின்சார கார்களுக்கான சந்தை மெல்ல மெல்ல உருவாகி வருகிறது. இதனால் உலகம் முழுக்க இருக்கும் பெரு நிறுவனங்கள் இந்தியாவில் மின்சார கார்களுக்கான சந்தையை தன் வசப்படுத்த நிறைய புதிய வகை மின்சார கார்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. அதன் ஒரு பகுதியாக ரினால்ட் நிறுவனம் ட்ரெசார் என்ற பெயரில் புதிய மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது.இரண்டு பேர் அமரும் வகையில் இந்தச் சிறிய கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் கார்கள்

Hyundai-Elite-i20

தென் கொரிய வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் புதிய எலைட் i20 என்ற கார் வகையை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 5.34 லட்சத்திலிருந்து 9.15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் தொடர் ஆராய்ச்சியின் விளைவாக இந்த வகை கார் வடிவமைப்பு செய்யப்பட்டு இருப்பதாக அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கலையுணர்வும், நவீனமும் ஒன்று சேர்ந்த ஒரு படைப்பாக இந்த கார் இருக்கும் என்று மேலும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ்

TATA-H5X

தனது நூற்று ஐம்பதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் H5X என்ற புதிய வகை காரை அறிமுகம் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ். தனது முதல் வகை SUV காரை இந்த வாகன திருவிழாவில் அறிமுகம் செய்துள்ளது . SUV (Sport Utility Vehicle) என்பது கடினமான சாலைகளில் சிரமமின்றி பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் ஒரு நான்கு சக்கர வாகனமாகும். இருப்பினும் இதன் விலை இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் படவில்லை.

ஹோண்டா கார்

போட்டி போட்டுக்கொண்டு இந்தியாவின் மின்சார கார சந்தையை பிடிப்பதில் பெரு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. அந்த வகையில் ஹோண்டா நிறுவனம் தனது மின்சார காரை ஆட்டோ எக்ஸ்போ 2018ல் அறிமுகம் செய்துள்ளது. ஈவி(EV) கான்செப்ட் கார் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த வகை கார் அடிப்படையில் ஒரு பந்தைய கார் ஆகும். இந்த பந்தைய காரின் இன்னொரு சிறப்பம்சம் இதில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கார் ஓட்டுநரின் முக பாவனைகள், உணர்வுகள் போன்றவற்றை கண்காணிக்க முடியும். மேலும் குரல் மூலம் கட்டளைகள் வழங்கும் வகையிலும் இந்த பந்தைய கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மெர்சிடஸ் பென்ஸ்

Mercedes-Maybach-s650

மேபேக் s650 என்ற புதிய வகை காரை மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே அந்த நிறுவனத்தின் s500 மற்றும் s600 போன்ற கார் வகைகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றை எல்லாம் விட மேம்படுத்தப்பட்ட ஒரு வடிவமைப்பில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் விலை 2.73 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டொயோட்டா கார்

Toyota-India-Yaris

டொயோட்டா இந்தியா யாரிஸ் என்ற புது வகை காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அழகு மற்றும் நேர்த்திக்கு பேர்போன கிரேக்க பெண் கடவுளின் நினைவாக இந்த வகை காருக்கு யாரிஸ் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. ஹோண்டா சிட்டி, மாருதி சுசூகி, ஹூண்டாய் வெர்னா போன்ற கார்களுக்கு போட்டியாக டொயோட்டாவின் யாரிஸ் இருக்கும் என்று அந்த நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா கார்

Mahindra TUV Stinger

மஹிந்திரா ஸ்டிஞ்சர் என்ற பெயரில் புதிய வகை கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதுவும் SUVஐ பின்பற்றி வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். இளைஞர்களை மனதில் வைத்து இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரியவருகிறது.

பிஎம்டபிள்யூ கார்

BMW-6-series-GT

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்களால் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார 58.90 லட்சத்திற்கு விற்பனைக்குக் கிடைக்கிறது. சக்தி வாய்ந்த மற்றும் திறமையான இரண்டு லிட்டர் மற்றும் 4 சிலிண்டர் டர்போ எந்திரத்தை கொண்டிருப்பதால் 6.3 நொடிகளில் மணிக்கு நூறு கிலோ மாட்டார் அளவுக்கு வேகம் செல்லும் வல்லமை இந்த காருக்கு உண்டு.

மாருதி கார்

Maruthi-Swift-2018

மாருதி சுசூகி இந்தியாவின் ப்ராண்ட் காரான ஸ்விப்டின் புதிய வகை டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை  4.99 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இரண்டு வகைமைகளிலும் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டெல்லியில் நடைபெற்ற இந்த கார் திருவிழா பிப்ரவரி 14 ஆம் தேதி முடியுபெற்றது.

Related Articles

தோனிக்கு கிடைத்த மாதிரி நண்பர்கள் நமக்கு... ஏப்ரல் 2 2011 அன்று ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இந்தியாவும் ஸ்ரீலங்காவும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதிக்கொண்டு இருக்கிறது.  இந...
ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் படங்கள்!... ஏப்ரல் 4ம் தேதி :குப்பத்து ராஜாஜிவி பிரகாஷ் குமார், பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் "குப்பத்து ராஜா" திரைப்படம். நடன இயக்குனர் ...
ஹைதராபாத் என்கவுன்டரை கொண்டாடும் திரைப் ... 1.நடிகர் சதீஷ் :மற்றவர்களின் கருத்துக்களையோ, மனித உரிமை பேசுபவர்களையோ விடுங்கள்... அந்த பெண்ணின் பெற்றோருக்கு மனதின் ஓரத்தில் ஒரு சிறு நிம்மதி வரு...
சென்னையில் 12 வயது சிறுமியை ஏழு மாதங்களா... சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்த செவித்திறன் குறைபாடு கொண்ட 12 வயது பள்ளி மாணவியை, அவள் வசிக்கும் அபார்ட்மெண்டின் பல இட...

Be the first to comment on "ஆட்டோ எக்ஸ்போ 2018ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வகை கார்கள் என்னென்ன?"

Leave a comment

Your email address will not be published.


*