வாழ்க்கையில் முன்னேறியவர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட சில உண்மைகள்!

Truths learned from some developed persons in life

வாழ்க்கையில் முன்னேறி உயிர் மாண்ட பிறகும் பேசப்பட்டு வரும் சில நபர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்ததில் இருந்து தெரிந்து கொண்ட சில உண்மைகள்.

வாழ்க்கைல முன்னேறனமுனா…

மொதல்ல சொந்த ஊர விட்டு வெளியேறும். அப்படி வெளியேறினாலும் சொந்த பந்தம் இல்லாத ஊராப் பாத்து குடியேறனும். ( வெளி நாடு என்றால் சொந்த பந்தம் இல்லாத தமிழர்கள் அதிகம் வாழும் இடங்ளைத் தேடிச் செல்வது சிறப்பு )

சொல்லிக் காட்டுறதுக்காவே உதவி செய்றவங்ககிட்ட இருந்து ஒதுங்கி நிக்கனும்.  வட்டிக்கு கடன் வாங்குனாலும் பரவால எக்காரணத்தக் கொண்டும் சொல்லிக் காட்டுறவன்ட்ட எந்த உதவியும் பெறக் கூடாது.

தனக்கு எல்லாமே தெரியும் என்று லூஸ் டாக் விடுவதை தவிர்க்க வேண்டும். நான் அப்படிப்பட்டவன் இப்படி பட்டவன் நான் எவ்ளோ கஷ்டபட்ருக்கேன் தெரியுமா… என்று அட்வைஸ் செய்வதை முதலில் நிறுத்த வேண்டும். காரணம் நீங்கள் யாருக்கு அட்வைஸ் செய்கிறீர்களோ அவன் உங்களை பரிசோதனை எலியாக்கி வாழ்க்கையில் முன்னேறி விடுவான். கடைசியில் உங்களுக்கு நடுவிரலை தூக்கி காட்டிவிட்டு உங்களை எதோ குப்பையைப் பார்ப்பது போல பார்த்துச் செல்வான். அட்வைஸ் செய்து செய்தே ஆண்டியானவர்கள் அதிகம்.

வாழ்க்கைல முன்னேறிப் போறவங்கள பழிச்சுப் பேசறத நிப்பாட்டுங்க. ஏன்னா உயர்ந்த இடத்துக்கு செல்ல நினைப்பவன் அடுத்தவன தாழ்த்திப் பேச மாட்டான். மற்றவர்கள் யாரைப் பற்றியோ தாழ்த்திப் பேசிக் கொண்டிருந்தால் ” இப்படி புறணி பேசறது தப்பு… ” னு உங்கள் நல்லெண்ணத்தை அங்கே பரப்பாதீர்கள். நீங்கள் என்ன சொன்னாலும் அவர்கள் திருந்தப் போவதில்லை. அவங்க அப்படித்தான் என்று அந்த இடத்தில் எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு கடந்து வந்து விடுங்கள்.

ஒழுக்கமில்லாதவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி, அவர்களாகவே முன் வந்து உதவி கேட்காமல் வழிய சென்று உதவி செய்யாதீர்கள். காரணம் நன்றி மறந்த ஜென்மங்களும் ஒழுக்கமில்லாதவர்கள் லிஸ்டில் சேருவார்கள்.

இங்க யாரு தான் தப்பு பண்ணல… எல்லாரும் தப்பு பண்ணிட்டு தான் இருக்கான் என்று செய்யும் தப்புகளை சகஜப்படுத்துபவனிடம் அளவாகப் பழகுகங்கள். காரணம் தப்பை சகஜப்படுத்துபவன் உங்கள் வளர்ச்சியை ஒரு போதும் விரும்ப மாட்டான்.

Related Articles

முள்ளும் மலரும் இயக்குனர் மகேந்திரன் கால... இயக்குனர் மகேந்திரன் உதிரிபூக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு போன்ற படங்களை இயக்கியவர். பல படங்களுக்கு ஒளிப்பதிவ...
பார்க்க வேண்டிய உலக சினிமாக்கள்!... 1.children of heaven2.Life is beautiful3.The way home4.the road home5.cinema paradiso6.run lala run7.mariya full of grace ...
நீயா நானாவுக்குப் போட்டியாக களமிறங்கிய க... பொழுதுபோக்கிற்காக டிவி பார்க்கிறோம் என்பதை மீறி ஒரு சில நிகழ்ச்சிகள் நம் மனதை வெகுவாக கவர்ந்திருக்கும். நேரத்தை பயன் உள்ளதாக மாற்றும். சிந்திக்க வைக்க...
நாடக கலைஞர்களை இளைஞர்கள் ஆதரிக்க வேண்டும... சமீபத்தில் வெளியான படம் சீதக்காதி. அந்தப் படத்தில் நாடக கலைஞர்களின் வாழ்க்கை முறைகளை மிக அற்புதமாக காட்டி இருந்தது படக்குழு. அந்தப் படத்தில் காட்டப்பட...

Be the first to comment on "வாழ்க்கையில் முன்னேறியவர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட சில உண்மைகள்!"

Leave a comment

Your email address will not be published.


*