புதிய வாக்காளர் அடையாள அட்டைகளில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள்!

Lots of error in the new voter identity cards!

ஆதார் கார்டு, ஸ்மார்ட் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என்று அரசு வழங்கும் அனைத்து ஆவணங்களிலும் ஏகப்பட்ட பிழைகள். தேர்தல் நேரம் நெருங்கிவிட்டதால் வாக்காள அடையாள அட்டை வழங்குதல், பெயர் திருத்தம் செய்தல் போன்ற பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வழக்கம்போல வாக்காள அட்டைகளில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள் காணப்படுகிறது. இன்னும் சிலருடைய வாக்காள அடையாள அட்டைகளில் போட்டாக்கள் தெளிவாக இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு ஆதார் கார்டு வழங்கி பொதுமக்களுக்கு அதிர்ச்சி தந்தது. சமீபத்தில் சேலத்தில் சரோஜா பெரியசாமி என்ற பெண்ணின் குடும்ப அட்டையில், நடிகை காஜல் அகர்வால் படத்தை குடும்ப தலைவி என்று அச்சிட்டு தந்து பொதுமக்களுக்கு  மேலும் அதிர்ச்சியை தந்தது போல் இப்போது திருப்பூர் விவசாயி நல்லசிவம் நாச்சிமுத்து என்பவரின் குடும்ப அட்டையில் குடும்ப தலைவரின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் விநாயகர் படத்தை அச்சிட்டு தந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை தந்திருக்கிறது.

பெயர், வயது, ஊர், பாலினம் என்று அடிப்படை தகவல்களே ஏகப்பட்ட பிழைகளுடன் இருக்கிறது. ஆதார் கார்டில் சிலரின் முகங்களே தெரியாதவாறும், ஸ்மார்ட் ரேசன் கார்டில் குடும்பத்தில் யார் மிகவும் இளம்வயதினராக இருக்கிறார்களோ அவர்களை குடும்ப தலைவர் என்றும் அச்சிட்டு பொதுமக்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள்தொகை அதிகமுள்ள நாட்டில் இது போன்ற பிழைகள் சகஜம் தான் எனக்கூறி பிழைகளை திருத்த மறுபடியும் மக்களை அலைய வைக்கிறார்கள் அலட்சியமான அரசு ஊழியர்கள்! இதை வழங்குவதற்கு முன்னரே அச்சிட்ட அரசு ஊழியர்களும், வழங்குவதற்கு ஒப்புதல் கொடுக்கும் அதிகாரிகளும் சரிபார்த்துவிட்டால், மக்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படாதே! .

அச்சுப்பிழைகள் இதுபோன்ற ஆவணங்களில் மட்டுமில்லாமல் தேர்வு வினாத்தாள்களிலும், பாடப்புத்தகத்திலும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. இவை குழப்பான சூழலை உருவாக்கிகொண்டிருக்கிறது என்பதால் இனியாவது இதுபோன்ற பிழைகளை அலட்சியம் செய்யாது  முறையாக சரிபார்க்க வேண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் !

Related Articles

படிச்சு முடிச்சு வேலையில்லாமல் இருப்பவர்... வாராவாரம் எதாவது ஒரு அரசியல்வாதி எதாவது ஒன்றை உளறிக்கொட்டி நெட்டிசன்களிடம் வறுபடுவது வழக்கம். இந்த வாரம் சிக்கியிருப்பவர் அமித்ஷா.வேலை வாய்ப்பு இல...
தியேட்டர் கிடைக்காததால் இணையத்தில் வெளிய... வருகிற 10 ம் தேதி ரஜினியின் பேட்ட மற்றும் அஜீத்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவது நமக்கு தெரிந்த விஷியமே. இப்போது அந்தப் படங்களுடன் சேர்த்...
மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திர பிரதேச ... மேற்கு வங்கத்தில் நான்கு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புயல் மற்றும் மின்னல் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் கா...
முதன்முறையாக நடக்கும் பதினோறாம் வகுப்பு ... பல தனியார் பள்ளிகளில் பதினோறாம் வகுப்பு படிக்க வேண்டிய காலத்திலயே பண்ணிரண்டாம் வகுப்பு பாடங்களை நடத்த தொடங்கிவிடுகிறார்கள். இதனால் மாணவர்கள் பண்ணிரெண...

Be the first to comment on "புதிய வாக்காளர் அடையாள அட்டைகளில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள்!"

Leave a comment

Your email address will not be published.


*