251 ரூபாய்க்கு உலகின் மலிவான திறன்பேசி தருவதாக அறிவித்த நபரைக் கைது செய்தது டெல்லி காவல்துறை

நொய்டாவை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான மோஹித் கோயெல் உட்பட மூன்று பேரை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து காப்பாற்றுவதாக கூறி தொழில் அதிபர்களிடம் பணம்பறிக்க முயன்ற குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர். ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் உலகின் மலிவான விலையில் 251 ரூபாய்க்கு திறன்பேசி தருவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 6ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் மாவட்டத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் பெண் ஒருவர் தான் ஐந்து தொழிலதிபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஒரு ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க அந்தப் பெண் அழைக்கப்பட்டு இருக்கிறார், அங்கே ஐந்து பேர் சேர்ந்து கூட்டாக அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் காவல்துறையினரிடம் தெரிவிக்கப்படுகிறது .குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர்.

 

வழக்கில் இருந்து விடுவிக்க ஐந்து கோடி

காவல்துறை துணை கமிஷனர் (வட மேற்கு) அஸ்லம் கான் கூறியதாவது ‘வழக்கில் இருந்து காப்பாற்றி விடுவதாகக் கூறி தொழிலதிபர்களிடம் இருந்து பணம் பறிக்க முயன்ற மூன்றுபேர் கொண்ட கும்பலைக் கைது செய்திருக்கிறோம்’.

நேதாஜி சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் இருந்து தப்பவைக்க தொழில் அதிபரிடம் ஐந்து கோடி பெற மூன்றுபேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு இருப்பதாக வழக்கில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஞாயிறன்று குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Related Articles

இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்று R... என்ன தான் குப்பை அள்ளுறவனா இருந்தாலும் அவன் மனசு சுத்தம் என்பது படத்தின் மையக்கரு. சமூக வலைதளங்களில் போராளி வேசம் போட்டுத் திரியும் போலி பொதுநலவாதிகள்...
கொள்ளையடிக்கும் போட்டித்தேர்வு பயிற்சி ம... தமிழகத்தில் பால்வாடி முதல் பட்டப்படிப்பு வரை அத்தனையும்  வியாபாரம் தான். பஸ் கண்டக்டர் டிக்கெட்டை தருவது போல பணத்தை வாங்கிக்கொண்டு சர்வ சாதாரணமாக டிகி...
ஒருத்தர் விடாம எல்லோரையும் கலாய்ச்சிருக்... தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதும் பதற்றம் படபடப்பு என்ற சூழல் நிலவ அந்த சமயத்தில் அனைவரையும் கிச்சு கிச்சு மூட்டும் வகையில் சில நிகழ்வுகள் நடக்கும். அத...
தனுசின் “அசுரன்” படம் பற்றிய... எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி எடுக்கப்படும் படம். வெற்றிமாறன் நாவலை தழுவி எடுக்கும் இரண்டாவது படம் இது. இதற்கு முன் லாக்கப் நாவலை தழ...

Be the first to comment on "251 ரூபாய்க்கு உலகின் மலிவான திறன்பேசி தருவதாக அறிவித்த நபரைக் கைது செய்தது டெல்லி காவல்துறை"

Leave a comment

Your email address will not be published.


*