விஷால் தலைமையில் நடந்த சினிமா ஸ்ட்ரைக் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் ரஜினியின் நிலைமை வேறுதானே?

தமிழ்சினிமா வரலாற்றில் முதல்முறையாக   நாற்பத்தி ஒரு நாட்கள் வேலை நிறுத்தம்  நடந்தது. சினிமாவை மட்டுமே நம்பி இருந்த பலதரப்பட்ட அன்றாட தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டார்களே தவிர அவர்களின் எண்ணம் மட்டும் நிறைவேறவே இல்லை. இன்னமும் கியூப் நிறுவனம் தான் படத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

வேலை நிறுத்தம் நடந்தததால் பல படங்களின் படபிடிப்பும் ரிலீசும் தள்ளிப்போனது. எனினும் ஏர்.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் தயாராகி வரும் படப்பிடிப்பு மட்டும் நடந்து வந்தது. அதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதால் சில நாட்களில் அந்தப் படபிடிப்புக்கும் தள்ளிப்போனது. அதே போல அப்போதே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போனது. அதில் மிக முக்கியமான படங்கள் என்றால் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி, விஷாலின் இரும்புத்திரை மற்றும் ரஜினிகாந்தின் காலா படங்களைக் குறிப்பிடலாம். இந்த மூன்று படங்களுமே சமீபத்தில் தமிழகத்தில் நிலவும் பதட்டாமான பரபரப்பான சூழல்களுக்கு உகந்த படம் என்றே சொல்லலாம்.

ஆனால் அவற்றில் காலா மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும் வகையில் தான் பெரும்பாலான காட்சிகள் வந்து உள்ளது. ஆக இந்தப் படம், முதல்முதலில் சொன்ன ரிலீஸ் தேதியான ஏப்ரல் 27ல் வெளியாகி இருந்திருந்தால் தூத்துக்குடி சம்பவம் அப்படியே மாறி இருந்தாலும் மாறி இருக்கலாம். ஆனால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது ரஜினிகாந்தின் தற்போதைய அரசியல் நிலைப்பாடுக்கு மிகப்பெரிய பலவீனமாகச் சென்றுவிட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரை பார்த்து நலம் விசாரிக்கச் செல்கிறேன் என்ற பெயரில் தனக்குத் தானே குழி பறித்துக் கொள்ளும் விதமாகச் சில வார்த்தைகளை அள்ளி வீசிவிட்டார். இது அப்படியே மக்களுடைய உணர்வுகளுக்கு எதிரானதாக மாறிவிட, இப்போது காலா ஒரு முரண்பட்ட படமாகத் தான் எல்லோராலும் பார்க்க முடிகிறது.

ஏப்ரல் 27 ல் ரிலீசாகி இருந்தால், அண்ணா மற்றும் எம்ஜிஆர் கூட்டணியில் நடந்ததுபோல திரை வடிவம் மூலமாக அரசியல் பேசி ரஜினி  வெகுஜன மக்களை கவர்ந்து உள்ளார் என்றும், ரஜினிக்கு உண்மையிலயே நல்ல அரசியல் அறிவு இருக்கிறது என்றும் பலரும் பாராட்டி இருப்பார்கள்.

இப்போது ஆடிட்டர் குருமூர்த்தியோ, ரஜினி இது போன்ற படங்களை தவிர்த்திருக்க வேண்டும் என்று கருத்துக் கூறி இருக்கிறார். அதனை மறுத்து ரஜினி பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதைத் தான் தவிர்க்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

Related Articles

பிளாஸ்டிக் தடையை மதிக்காத தமிழக மக்கள்!... இந்த ஆண்டு முதல் தமிழகம் முழுக்க பிளாஸ்டிக் தடை உத்தரவை பிறப்பித்தது தமிழக அரசு. அதன் படி வியாபாரிகள் அனைவரும் பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலுமாக நிறுத்...
இதற்கெல்லாமா நம்ம அரசாங்கம் செலவு செய்யு... ஒரு அரசாங்கம் செயல்படுவதற்கு அடிப்படை மக்களின் வரிப்பணம். அனைத்து வகைகளிலும் மக்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணம் முறையாகத் தான் செலவு செய்யப்படுகிறதா...
தோசைல சாதி இருக்கு!  – வே. மதிமாறன... தோசைல கல் இருக்கு! தோசை கல்லு மாதிரி இருக்கு! இப்படிபட்ட விமர்சனங்கள் தோசை மீது இதுவரை இருந்திருக்கிறது. ஆனால் சாதாரண தோசையில் சாதி இருக்கு என்பது பு...
மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் மாபெரும் ... மகாராஷ்டிரா மாநில அரசு விவசாயிகளின் கோரிக்கைள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளதை அடுத்து மகாராசுடிரா விவசாயிகள் மாபெரும் போராட்டம் வாபஸ் ப...

Be the first to comment on "விஷால் தலைமையில் நடந்த சினிமா ஸ்ட்ரைக் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் ரஜினியின் நிலைமை வேறுதானே?"

Leave a comment

Your email address will not be published.


*