வார இறுதியில் மிக அதிக கனமழை மும்பையில் பெய்யக்கூடும் – மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்

மும்பையில் சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமையன்று மிக அதிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு இந்தியாவின் வானிலை திணைக்களத்தால் அறிவுறுத்தப்படுகிறார்கள் .

அடுத்த 24 மணிநேர காலத்திற்குள் 200 மிமீ அல்லது அதிகமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. வானிலை துறை வகைப்பாட்டின் கீழ், 15.6 மிமீ  முதல் 64.4 மிமீ பதிவாகும்  மழை மிதமானது என்றும், 64.5 மிமீ முதல் 115.5 மிமீ  பதிவாகும் மழை கனமானது என்றும் , 115.6 மிமீ முதல் 204.4 மிமீ  வரை பதிவாகும் மழை மிக அதிகமானது என்றும்  மற்றும் 204.5 மி.மீ. வரை பதிவாகும் மழை மிக அதிக கனமழை என்றும் அழைக்கப்படுகிறது.

வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: ‘பரவலான மழைப்பொழிவு ஜூன் 10 ஆம் தேதி வரை தொடரும். இந்தக் கனமழை வெள்ளிக்கிழமை முதல் மும்பை உட்பட வடகிழக்கு கடற்கரை மற்றும்  மகாராஷ்டிராவுக்கும் செல்ல வாய்ப்பிருக்கிறது. இந்தப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக அதிக மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்’.

 

மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தல்

ஜூன் 9 மற்றும் 10ம் தேதிகளில் மழைப்பொழிவு தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் கூடுமானவரை வெளியே நடமாடுவதைத் தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய வானிலை துறையின் மேற்கு பகுதி துணை இயக்குநர் கே.எஸ்.ஹோசாலிகர் தெரிவித்ததாவது ‘மழைக்காலம் தவிர, தென் கொங்கனிலிருந்து வடக்கு கேரளா வரை நீடிக்கும் மற்றுமொரு வானிலை அமைப்பின் காரணமாக மேற்கு கடற்கரையில் அதிக ஈரப்பதம் ஊடுருவ வாய்ப்பிருக்கிறது. இந்த இரண்டு வானிலை அமைப்புகளின் சங்கமத்தின் போது, அதிக மழைப்பொழிவு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.

ஜூலை 2005 இல், நகரின் பெரும்பகுதி வெள்ளத்தால் சூழ்ந்தது , 24 மணி நேரமாகத் தொடர்ந்து பெய்த மழை 900 மில்லிமீட்டர் அளவுக்குப் பதிவானது. இதன் காரணமாக பலர் உயிரிழந்தனர்.

கோவாவில் வியாழக்கிழமை தொடங்கிய தென்மேற்கு பருவமழை, மும்பையில் ஜூன் 10 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

Related Articles

நேபாள விமான விபத்தில் 49 பேர் பலி... 71 பேருடன் பயணித்த விமானம் ஒன்று நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து நொறுங்கியதில் 49 பேர் கொல்லப்பட்டு இருக்க...
தமிழ் எழுத படிக்கத் தெரியாத தமிழ்பிள்ளைக... விஜய் தொலைக்காட்சிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. காரணம் நீயா நானாவில் சமீப காலமாக மிக முக்கிய தலைப்புகளில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வ...
மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் மாபெரும் ... மகாராஷ்டிரா மாநில அரசு விவசாயிகளின் கோரிக்கைள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளதை அடுத்து மகாராசுடிரா விவசாயிகள் மாபெரும் போராட்டம் வாபஸ் ப...
பார்க்க வேண்டிய உலக சினிமாக்கள்!... 1.children of heaven2.Life is beautiful3.The way home4.the road home5.cinema paradiso6.run lala run7.mariya full of grace ...

Be the first to comment on "வார இறுதியில் மிக அதிக கனமழை மும்பையில் பெய்யக்கூடும் – மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்"

Leave a comment

Your email address will not be published.


*