வதோதரா ரயில்வே நிலையத்தில் பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு பெருமளவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘பிளாஸ்டிக் பயன்பாடு மிகவும் தவறானது மற்றும் தீங்கு விளைவிக்கும் ஒன்றாகும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்தாவிட்டால் , சுற்றுச்சூழலை யாராலும் காப்பாற்ற இயலாது’ என்று பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரத்தைத் திறந்து வைத்துப் பேசிய வதோதரா நாடாளுமன்ற உறுப்பினர் ரன்ஜன்பேன் பட் தெரிவித்தார்.
ரயில் நிலையங்களிலும், ரயில்வே டிராக்குகளிலும் பாட்டிலைத் தூக்கியெறிந்துவிட்டு செல்வதற்குப் பதிலாக, இந்த இயந்திரத்தில் செலுத்தினால் ஐந்து ரூபாய் பேடிஎம் கணக்கில் வரவு வைக்கப்படும்.
புனே, அகமதாபாத், மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் ஏற்கனவே ரயில்வே நிலையங்களில் இதே போன்ற இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன.
Be the first to comment on "பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரத்தில் பாட்டிலை போட்டால் ஐந்து ரூபாய்"