இந்தியாவின் கூகுள் பாய் ! – அற்புத நினைவாற்றல் கொண்ட பதினொரு வயது சிறுவன்!

India's Google boy

இந்தியாவின் கூகுள் பாய் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் கௌடில்யா
பண்டிட். எந்த துறையிலிருந்து எந்த கேள்வி கேட்டாலும் நொடியில் பதிலளிக்கும் இவரது
அற்புத நினைவாற்றலை இன்று உலகமே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஹரியானா மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் கோஹண்ட் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் சர்மாவிற்கும் சுமிதா சர்மாவிற்கும் டிசம்பர் 2007 ல் பிறந்தவர். கர்நூல் மாநிலத்தில் உள்ள கோஹண்ட் கிராமத்தில் இருக்கும் எஸ்.டி ஹரித் மாடர்ன் பள்ளியில் பயின்று வந்தார். இப்போது
பஞ்சகுலாவில் உள்ள சிறிய பள்ளிக்கூடம் ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

சரியாக அவருக்கு நான்கு வயதாக இருக்கும்போது பெற்றோருடன் ஆக்ராவிற்குச் சென்றபோது
வழிநெடுகிலும் இருந்த அறிவிப்பு பலகைகள், பெயர் பலகைகளை தவறில்லாமல் படித்துக்
காமித்தான். அப்போது முதல் அவருடைய பெற்றோர் சொல்லித்தந்த நாடுகள் பற்றிய தகவல்கள்,
வரலாற்றுக் குறிப்புகள் போன்றவற்றை ஒன்றுவிடாமல் அனைத்தையும் அப்படியே நியாபகம்
வைத்திருக்கிறார்.

இவரது திறமையை பாராட்டி ஹரியானா முதல்வர் இவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
அப்போது அந்த சான்றிதழிலில் இருந்த எழுத்துப் பிழையையும் சுட்டிக்காட்டி அனைவரையும்
வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அதே போல அமிதா பச்சன் நடத்தி வந்த நிகழ்ச்சியொன்றில்
குழந்தைகள் தினத்தன்று கலந்துகொண்டு அவர் கேட்ட கேள்விகளுக்கு ஸ்மார்ட்டாக பதிலளித்து
வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அவருக்கு விஞ்ஞானியாக வேண்டுமென்பது விருப்பமாம். அப்துல் கலாமை ஒரு முறை நேரில்
சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்திருக்கிறார். இந்தியாவில் அப்துல்கலாம்
போன்ற பல விஞ்ஞானிகள் உருவாக வேண்டுமென்பது பலருடைய விருப்பம். கௌடில்யா
பண்டிட் விஞ்ஞானிக உருவெடுக்க வாழ்த்துவோம். நம்மை சுற்றி இருக்கும் குட்டி குட்டி
விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்துவோம்.

Related Articles

2018 ம் ஆண்டில் களம் இறங்கி வெற்றி பெற்ற... ஆபாசம் இல்லாத இடமே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் எல்லா இடங்களிலும் ஆபாசம் நிரம்பி வழிகிறது. எதேதோ ஆப்கள் வந்து செல்போன் பைத்தியங்களை மானபங்கம் செய...
ஹைதராபாத் என்கவுன்டரை கொண்டாடும் திரைப் ... 1.நடிகர் சதீஷ் :மற்றவர்களின் கருத்துக்களையோ, மனித உரிமை பேசுபவர்களையோ விடுங்கள்... அந்த பெண்ணின் பெற்றோருக்கு மனதின் ஓரத்தில் ஒரு சிறு நிம்மதி வரு...
சூர்யாவின் “அகரம் அறக்கட்டளை”... கடந்த 2017 ஆம்  ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த  சர்ச்சைகள் விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வருட...
சரியான நேரத்தில் சம்பளம் தராதவர்களை என்ன... ஏழாவது சம்பள கமிஷன் என்று ஏதாதோ சொல்கிறார்கள்.  இந்த மாதிரியான திட்டத்தை கொண்டு வருபவர்களும் தெளிவாக இருப்பதில்லை, மக்களுக்கும் தெளிவாக புரிய வைப்பதில...

Be the first to comment on "இந்தியாவின் கூகுள் பாய் ! – அற்புத நினைவாற்றல் கொண்ட பதினொரு வயது சிறுவன்!"

Leave a comment

Your email address will not be published.


*