நீட் தேர்வில் நல்ல சதவீதம் பெற்ற உத்திரபிரதேச மாநில அரசு மருத்துவமனைகளில் தொடருது உயிர்பலி!

இந்த ஆண்டு நீட் தேர்வில் நல்ல சதவீதம் பெற்ற மாநிலமான உத்திரபிரதேசத்தைக் கண்டு வியக்காத ஆட்கள் இல்லை. ” போயும் போயும் இந்த மாநிலம் எப்படிடா நீட் தேர்வுல இப்படி பட்டைய கிளப்பிருக்காங்க… அதுலயும் இவனுங்க மாநிலத்துல கிட்டத்தட்ட நூத்தம்பைது பள்ளிக்கூடத்துல ஒரு பசங்கக் கூட பாஸ் ஆகவே இல்லையாம்… அப்படி இருக்க இவனுங்க எப்படி நீட் தேர்வுல ச்சை…” என்பது போல உத்திரபிரதேச ஆட்சியைப் பற்றி ஒட்டுமொத்த இந்தியாவுமே பல்வேறு மொழிகளில் கழுவி ஊத்துகிறது.

 

கடந்த ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களில் ஏற்பட்ட பழுதால், பற்றாக்குறையால் எத்தனை குழந்தைகள் உயிர் இழந்தார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அப்போது அந்த அரசு எவ்வளவு “விரைந்து செயல்பட்டது” என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. இதைத் தொடர்ந்து இது போன்ற உயிரிழப்புகள் ஏதும் நடந்திடாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் பல எடுத்திருக்கும் என்று எண்ணி இருந்தால் அது சுத்த மூடத்தனம். காரணம், தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் உள்ள ஐசியு வார்டில் ஏசி பழுது ஆனதால் நான்கு நோயாளிகள் உயிரிழந்து உள்ளனர். இதனை அறிந்த நோயாளிகளின் உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம் எனவும், மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்குத் தொடுக்க வழக்கம் போல மருத்துவமனை அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.

 

அந்த நான்கு பேரில் இரண்டு பேர் மாரடைப்பால் உயிர் இழந்ததாகவும், மீதி இரண்டு பேர் நோயின் தீவிரவாதத்தாலும் உயிர் இழந்ததாகவும் கூறி திசை திருப்பி நாடகம் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் மருத்துவமனை முதல்வர் நவ்னித் குமார். உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் இது போன்று ஏசி பழுது, ஆக்சிஜன் சிலிண்டர் பழுது, ஆம்புலன்ஸ் பற்றாக்குறை எனப் பலக்குறைபாடுகள் மருத்துவத் துறையில் உள்ளது. ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் எட்டு கிலோமீட்டருக்கு தாயின் இறந்த உடலை தோளில் சுமந்தபடி நடந்தே செல்லும் அவலம் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்த மாநிலங்கள் நீட் தேர்வில் முன்னணியில் இருப்பது எப்படித்தானோ? புரியாத புதிராக உள்ளது.

இது போன்ற தகுதி இல்லாத மருத்துவர்களை அலட்சியமான மருத்துவர்களை உருவாக்குகிறதா இந்த நீட் தேர்வு. நீட் தேர்வு எழுதாத மாணவர்கள் எல்லாம் தேர்ச்சி பெற்று மருத்துவர் ஆக இருக்கிறார்கள். நீட் தமிழ் கேள்வித்தாளில் ஏகப்பட்ட பிழைகள் இருந்ததால் அதனால் எத்தனை குழப்பம் அடைந்து எத்தனை மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

Related Articles

தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதல் பத... கடந்த 2015ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் 2016ம் ஆண்டு 73 நகரங்கள், 2017ஆம் ஆண்டு 434 நகரங்கள், 2018ஆம் ஆண்டு 4 ஆய...
இவர்களுடைய பிள்ளைகள் எல்லாம் அரசுப்பள்ளி... இந்தியா முழுக்க கல்வி வியாபாரமாகிவிட்டது. அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதில்லை. அனைவருக்கும் இலவசமான கல்வி வேண்டும். அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த...
இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்த கதை! ... கவிதை தளத்தில் நன்கு அறியப்பட்ட வைரமுத்து மொழிக்கும் மண்ணுக்குமான தொடர்பை திரையில் விரித்திருக்கும் பாரதிராஜா மூலமாய் திரைக்குள் நுழைய விரும்பினார். அ...
தூங்கும் போதும் அருகில் செல்போன் – என்னெ... நீங்கள் தூங்கும் சமயம், இரவில் செல்போன் அணைக்க விரும்பவில்லை என்றால், குறைந்தபட்சம் இணைய இணைப்பை துண்டித்து மற்றும் படுக்கைக்கு மூன்று அடி தூரத்தில் வ...

Be the first to comment on "நீட் தேர்வில் நல்ல சதவீதம் பெற்ற உத்திரபிரதேச மாநில அரசு மருத்துவமனைகளில் தொடருது உயிர்பலி!"

Leave a comment

Your email address will not be published.


*