கைது பண்ண வேண்டிய எஸ்வி சேகருக்குப் பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்; தூத்துக்குடி போராளிகளை வீடு தேடி கைது செய்வது ஏன்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி பொதுமக்களை வீடு தேடி சென்று கைது செய்தது காவல் துறை. ஆனால் நீதிமன்றங்கள் குற்றவாளி என அறிவிக்கப் பட்ட, உடனடியாக கைது பண்ணி சிறையில் அடைக்க வேண்டிய எஸ் வி சேகருக்கு போகும் இடம் எல்லாம் பாதுகாப்பு அளித்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழாவில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டினார் ஆளுநர். அதைத் தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. ஆளுநருக்கு சப்போர்ட் பண்ணும் விதத்தில் அவசரப் பட்டு பல துறைகளில் பணி ஆற்றி வரும் பெண்கள் எல்லாம் பலருடன் படுக்கையைப் பகிர்ந்து தான் முன்னேறிச் செல்கிறார்கள் என்று மகா பிற்போக்குத் தனமான பதிவு ஒன்றை எழுதிவிட்டு, அதை நான் சரியாகப் படித்து பார்க்காமல் பகிர்ந்துவிட்டேன் என்று சமாளித்தார். அதனை நீதிபதிகள் உள்பட பெரிய பொறுப்பில் இருக்கும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வில்லை. மாறாக அவரை கைது செய்து உள்ளே அடைக்க வேண்டும் என்று உத்தரவு இட்டார்கள். ஆனால் கைது செய்வதை பல மாதங்களாகத் தள்ளிப் போட்டு வருகிறது காவல் துறை.

கிரிஜா வைத்தியநாதன் எஸ்விசேகருடைய அண்ணி என்பதால் அவருடைய விரல் அசைவில் காவல் துறை இருப்பதாகப் பலரும் கருத்து காறி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தல் கூட்டத்திற்கு காவல் துறை பாதுகாப்புடன் வந்த எஸ்விசேகரை பற்றியும் அதிகாரம் ஒரு குற்றவாளிக்கு எப்படி எல்லாம் துணை நிற்கிறது என்றும் சமூகவலை தளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.

இந்த மாதர் சங்கம் எல்லாம் இப்போது என்ன செய்கிறது, பெண் பத்திரிக்கையாளர்கள் ஏன் இன்னமும் மௌனம் காத்து வருகிறீர்கள் என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏன் அவரை கைது பண்ணாமல் இருக்கிறோம் என்பதற்கான காரணத்தையாவது காவல் துறை தெளிவாகக் கூற வேண்டும்.

Related Articles

பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள எ... கர்நாடகா மாநிலத்தின் இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் (கே.எஸ்.என்.டி .எம்.சி), பெங்களுருவில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை இன்று (திங்க...
இயற்கை எய்தினார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கி... இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76 ஆம் வயதில் மரணமடைந்தார். அவர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்...
மனிதம் போற்றும் 3 Roses விளம்பரம்! vs மன... சமீபத்தில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்று வரும் இரண்டு விளம்பரங்களைப் பற்றி இங்கு பேச உள்ளோம். ஒன்று 3 Roses டீத்தூள் விளம்பரம் மற்றொன்று 5 Star சாக...
போலீஸ் துறையில் இருப்பவர்கள் எல்லாருமே ம...   சிவகார்த்திகேயனும் அப்பா சென்டிமென்டும்:  சிவகார்த்திகேயன் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்றால் யுவன் நா முத்துக்குமார் கூட்டணியில் உருவான தெய்வ...

Be the first to comment on "கைது பண்ண வேண்டிய எஸ்வி சேகருக்குப் பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்; தூத்துக்குடி போராளிகளை வீடு தேடி கைது செய்வது ஏன்?"

Leave a comment

Your email address will not be published.


*