அம்மா பிறந்தநாளை முன்னிட்டு அரவக்குறிச்சி தொகுதி பெண்களுக்கு இலவச சேலை!

Free sari for women in the Aravakurichi for the birthday of Amma!

கடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று தமிழகமெங்கும் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு அரவக்குறிச்சி தொகுதி பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஐநூறு ரூபாய் மதிப்புள்ள சேலைகள் இலவசமாக வழங்கப் பட்டுள்ளது.

செலவு செந்தில் பாலாஜி :

சமீபத்தில் தினகரன் அணியில் இருந்து திமுகவிற்கு மாறினார் செந்தில் பாலாஜி. அது அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு கொஞ்சம் பயத்தை தந்தது. காரணம் கட்சி மாறியதால் எங்கு ஓட்டுக்கு பணம் தராமல் போய்விடுவாரோ என்ற பயம். ஆனால் செந்தில் பாலாஜியோ வழக்கம் போல செலவு செய்ய தயங்கவில்லை.

கடந்த மார்ச் 1 அன்று தமிழகமெங்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தனது தொகுதியான அரவக்குறிச்சியில் விழா சிறப்பாக நடைபெற வேண்டுமென்று செந்தில் பாலாஜி கிட்டத்தட்ட 30 கோடிக்கும் மேல் செலவு செய்ததாக அப்பகுதியில் பேசிக்கொள்ள படுகிறது.

செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து ஸ்டாலின் பிறந்த நாளுக்காக அரவக்குறிச்சி தொகுதி இளைஞர்களுக்கு ஸ்டாலின் முகம் பதித்த டீசர்ட், பேண்ட் சர்ட், தொப்பி என்று இளைஞர் அணியில் உள்ள அத்தனை பேருக்கும் ஏகப்பட்ட இலவசங்கள் வழங்கப் பட்டுள்ளது. இதனை அறிந்த அதிமுக மகளிரணியோ தங்கள் தலைமைகளிடம் சென்று அம்மா பிறந்த நாளை முன்னிட்டு இந்த தொகுதி மக்களுக்காக எதாவது செய்தே ஆக வேண்டும் என்று முறையிட, அதிமுகவில் இருந்து அம்மா பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு பெண்களுக்கும் தலா ஐநூறு ரூபாய் மதிப்புள்ள சேலைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இலவச சேலைகள் என்றதும் சேலைகளை தேடி தொளாவி வாங்கிக் கொண்டு முகம் மலர அம்மாவை நினைவுகூர்கின்றனர். வாய் நிறைய “யானை இருந்தாலும் ஆயிரம் பொன்… இறந்தாலும் ஆயிரம் பொன்… ” என்ற பழமொழியை கூறி சந்தோசப் பட்டுக்கொள்கின்றனர். மற்ற தொகுதி பெண்களுக்கோ இலவச சேலை கிடைக்காததால் அடிவயிறு பற்றிக் கொண்டு தகதகவென்று எரிவதாக கூறப்பட்டு வருகிறது.

Related Articles

பாஜகவை வீழ்த்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்ச... 2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக, பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்று சமாஜ்வாடி கட்ச...
வீட்டுக்குப் பொருட்களை அனுப்பி வைக்கும் ... தொழில்நுட்பம் முன்பு மனிதர்கள் செய்துவந்த மிகக் கடினமான வேலைகளை எளிமையாக்கியது, பிறகு அவர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிப்போனது. ...
அண்ணாவின் ” வேலைக்காரி ” நாட... கதாபாத்திரங்கள் : வேதாசல முதலியார் - வட்டியூர் ஜமீன்தார் சரசா - வேதாசல முதலியாரின் மகள் மூர்த்தி - வேதாசல முதலியாரின் மகன் அமிர்தம்...
ஒரு இந்தியா மூன்று அமெரிக்காவுக்கு சமம்!... ஒரு திரைப்படம் பார்த்தால் அதில் நாம் கற்றுக்கொண்ட விசியங்கள் ஒன்றிரண்டாவது இருக்க வேண்டும். அந்த வகையில் தன்னுடைய படங்களின் மூலமாக புதிய தகவல்களை பார்...

Be the first to comment on "அம்மா பிறந்தநாளை முன்னிட்டு அரவக்குறிச்சி தொகுதி பெண்களுக்கு இலவச சேலை!"

Leave a comment

Your email address will not be published.


*