மனித தன்மை மட்டும் மாறாது! – கோமாளி விமர்சனம்!

Comali Review

சின்ன வயது கதாபாத்திரத்துக்காக உடலை குறைத்துள்ளார் ஜெயம் ரவி. மிக அழகாக உள்ளது அந்த தோற்றம். மூன்று செம்மொழிகள் கூறு என்று ஆசிரியை கேட்டதும்  தேன்மொழி, கனிமொழி, இளமொழி என்று பதில் சொல்லி குலுங்க வைக்கிறார் யோகி பாபு. அவர் வரும் எல்லா காட்சிகளும் தியேட்டரில் சிரிப்பலைகள். கேஎஸ் ரவிக்குமார், என்னம்மா ராமர் பொன்னம்பலம் கூட்டணி மற்றும் ஷா ஆகியோர் யோகிபாபு இல்லாத இடங்களில் சிரிப்பலைகளை வர வைக்கிறது. குறிப்பாக சந்தேகம், பயம், மூடநம்பிக்கை இந்த மூன்றினால் கே எஸ் ரவிக்குமார் பயப்படும் சீன் செம காமெடி.

காமெடிகளை தாண்டி ரவி மற்றும் யோகி பாபுவின் நட்பு மனதை வெகுவாக கவர்கிறது. யோகி பாபு போன்ற ஒரு நண்பன் கிடைக்கமாட்டானா என்ற ஏக்கம் படம் பார்க்கும் அனைவருக்கும் உண்டாகும்.

நடிகர் தனுஷ் என் மகன் என்ற சர்ச்சை, என்னை நோக்கி பாயும் தோட்டா, மிஷ்கின், பல சாதிகளில் பேரன்களை பெற்றுள்ள ராஜராஜ சோழன், கூவத்தூர் ரெசார்ட் எம்எல்ஏ விவகாரம் போன்றவற்றையும் என்று சகல விஷியங்களையும் என்னடா பன்னி வச்சிருக்கிங்க என்ற தலைப்பில் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

“ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் நமக்கு பிடிச்ச வேலய நாம செஞ்சுட்டே இருக்கனும்… ” ” என் பையன் சாதி பத்திலாம் தெரிஞ்சிக்காம எல்லார்கிட்டயும் சரிசமமா பழகட்டும்” ” உங்கள மாதிரி சில பொண்ணுங்க சிங்கிளா இருக்கறனால தான் எங்கள மாதிரி பசங்களாம் உயிரோடவே இருக்கிறோம்… ” ” நீ அவ அண்ணன்ங்கறதால செய்யலடா… நீ என் பிரண்டுங்கறதால செஞ்சன்டா… ” ” சாப்டியா தூங்கினியானு அம்மாவ தவிர வேற யாருடா கேக்கப் போறாங்க… எவன் எவன்டாயோ மணிக்கணக்குல போன் பேசுற அம்மாட்ட பேச மாட்டியா… ” ” கூகுள் மேப் பொய் சொல்லாதுடா… ரூட்டுனா என்னைக்கும் ஆட்டோக்காரங்க தாண்டா கரக்ட்டு… ” ” சட்டையாவது மாத்துடா… சட்டசபைல இருந்து வந்த மாதிரி இருக்கு… ” ” டார்லிங்கோட சுருக்கம் தான் டா… டியரோட சுருக்கம் தான் டி… ” ” டெக்னாலஜி மூலமா கிட்ட வரத நினைச்சு தூரம் தூரமா போயிட்டு இருக்கிங்க… ” ” பேஸ்புக்லயே இல்லாத அம்மாவுக்கு பேஸ்புக்ல பர்த்டே விஸ் பண்ணி என்னடா பிரயோஜனம்… ” போன்ற வசனங்கள் கைதட்டலை பெறுகின்றன. ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசை படத்தை தாங்கி பிடிக்கிறது. நான் சும்மாவே சீனுடி ஸ்கூலுக்கே டானுடி, ஒளியும் ஒலியும் பாடல்கள் விசீல் சத்தம் பெறுகிறது. ஆர் ஜே ஆனந்தி தங்கையாக நடித்துள்ளார். நன்றாக இருக்கிறது அவருடைய நடிப்பு. நண்பன் படத்தில் வருவது போலவே மழையில் பிரசவம் சார்ந்த காட்சி நெகிழ வைக்கிறது.

அதுஅது அந்தந்த வயசுல நடந்துட்டா எவ்வளவு நல்லா இருக்கும்… எல்லாருக்கும் எவ்வளவு இன்பமாக இருக்கும் என்பதே படம் சொல்ல வரும் செய்தி. சீன் பை சீன் சிரிக்க வைக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர். நிறைய இடங்களில் அவர்களின் எண்ணம் நிறைவேறி இருக்கிறது. கோமாளி படத்தில் ரஜினிகாந்த் குறித்த காட்சி நீக்கம் என்று செய்தியில் வர வைப்பது செம கலாய். ஒரு கதாபாத்திரத்தின் மீது பரிதாபம் (அக்கறை) வர வேண்டும் என்றால் அந்தக் கதாபாத்திரத்தை மிக துள்ளலாக அனைவருக்கும் பிடித்தமானதாக அமைக்க வேண்டும் என்ற டெக்னிக் இயக்குனருக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் முதல் படத்தையே வெற்றி படமாக தந்துள்ளார்.

Related Articles

உலகின் தலைசிறந்த சொல் செயல் – வேலை... சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நீ மாறாத... உனக்கேத்த மாதிரி சூழ்நிலையவே மாத்து... இந்த உலகத்துல கொடுமையான விஷியம் ரெண்டு.      ...
வீட்டின் முதல் பட்டதாரிகளின் வலியை சொன்ன... இதை பற்றியெல்லாம் எழுத வேண்டுமா? என்று சிலர் யோசித்தாலும் இதைப் பற்றியெல்லாம் எழுதவில்லை என்றால் வேறு எதைப் பற்றித்தான் எழுதுவது? முதலில் பிளாக்ஷீப் ய...
நா. முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய க... நம் நெஞ்சில் என்றும் குடி இருக்கும் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம் அவ்வப்போது இணையதளங்களில் அரையுங்குறையுமாக உலா வருவதுண்ட...
எழுத்தாளர் லட்சுமண பெருமாள் எழுதிய சிறுக... நாளைய இயக்குனர் சீசன் 6ல் வெளியான குறும்படம் தான் பேசாத பேச்செல்லாம். சிறுகதையை தழுவிய குறும்படங்கள் பிரிவில் இயக்குனர் ஜெய் லட்சுமி இயக்கத்தில் வெளிய...

Be the first to comment on "மனித தன்மை மட்டும் மாறாது! – கோமாளி விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*