ஓட்டுக்கு பணம் வாங்காத நேர்மையான குடிமகன்களுக்கு சமர்ப்பணமா சர்கார்?

Sarkar Submit to Honest Citizens

சர்கார் சந்தித்த பிரச்சினை என்னென்ன என்பது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் அதன் ரிலீஸ்
தேதியில் சில குழப்பங்கள் எழுந்துள்ளது. நவம்பர் 2ம் தேதி ரிலீஸ் ஆனால் படம் நல்ல வசூல்
அள்ளும் என்று ரசிகர்களே அந்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என வேண்டுகோள்
வைக்க தொடங்கி உள்ளனர். நவம்பர்2 ம் தேதி வெளியானால் நவம்பர் 6ம் தேதி வெளியாக
இருக்கும் திமிரு பிடிச்சவன் படத்தால் சில தியேட்டர்கள் இழக்க நேரிடும் என்பதால் சன் பிக்சர்ஸ்
குழப்பத்திலே இருந்தது. இந்நிலையில் திமிரு பிடிச்சவன் படம் பின் வாங்கிவிட்டது. ஆதலால்
சர்கார் ரிலீஸ் தேதியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பிரச்சினை ஒருபுறம் இருக்க சர்கார் படம் யாருக்கு சமர்ப்பணம் என்ற கேள்வியும் விஜய்
ரசிகர்களிடம் எழுந்துள்ளது. வழக்கமாக ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள் குறிப்பிட்ட மக்களுக்கு
சமர்ப்பணம் செய்யப்படுவதாக இருக்கும்.

ஏழாம் அறிவு படம் உலகத் தமிழர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. துப்பாக்கி படம்
இராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. கத்தி படம் விவசாயிகளுக்கு சமர்ப்பணம்
செய்யப்பட்டது. இந்நிலையில் சர்கார் படம் யாருக்கு சமர்ப்பணம்? என்ற கேள்வியும்
எழுந்துள்ளது.

ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொள்வது தான் புத்திசாலித் தனம் என்று நினைக்கும் செம்மறி
ஆடுகளுக்கு மத்தியில் ஓட்டுக்குப் பணம் வாங்காத சில நேர்மையான மனிதர்களும்
இருக்கிறார்கள். அந்த வகையில் சர்கார் படம் ஓட்டுக்கு பணம் வாங்காத நேர்மையான
வாக்காளர்களுக்கு சமர்ப்பணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே சமயம் இந்தப் படம் மிகப் பெரிய ஆளுமையை எதிர்க்கும் தனிமனிதப் போராளிகளுக்கு
சமர்ப்பணமா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. காரணம் சேலம் எட்டுவழிச்சாலை
திட்டத்திற்கு எதிராகப் போராடிய தனிமனிதப் போராளி யான பரவலாக அறியப்பட்ட சமூக
ஆர்வலர் பியூஷ் மனுஷ் இந்தப் படத்தில் நடித்து உள்ளார். அதே போல் நீட் தேர்வுக்கு எதிராகவும்
மாணவிகள் அனிதாவுக்கும் மாணவி ராஜலட்சுமிக்கும் நீதி கேட்டு போராடும் சமூக ஆர்வலர்
சபரிமாலாவும் இந்தப் படத்தில் நடித்து உள்ளார்.

சமீபத்தில் விஜய்யின் அப்பா சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றுப்
படத்தில் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல சர்கார் படத்திலும்
வெளிநாட்டில் இருந்து திரும்பும் விஜய் தனக்கு நேர்ந்த அவமானத்தால் தனிமனிதப்
போராளியாக மாறி பின் மக்களை தன் பக்கம் திருப்பி தனக்கென சர்கார் உருவாக்குகிறார். ஆக
இந்தப் படம் தனிமனிதப் போராளிகளுக்கு சமர்ப்பணம் என்று கூறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

Related Articles

கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் ... பஞ்ச தந்திரம்இயக்கம்: கே. எஸ். ரவிக்குமார்கதை: கமல்வசனம்: கிரேசி மோகன்இசை: தேவாகதை: பிளேபாயாக சுற்றித்திரிந்த கமல் திருமணமான...
பாரதிய ஜனதா கட்சியை கலாய்க்கும் திருக்கு... நாட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது, ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு திருவள்ளுவர் எந்த மதத்தை சார்ந்தவர் எந்த சாதியை சார்ந்தவர் என்...
அரசுப் பள்ளியை தத்தெடுத்த பத்தாம் வகுப்ப... பள்ளி, கல்லூரி நாட்களில் நமக்குத் தரப்படும் சிறிய அளவிலான திட்டப்பணிகளை எப்படிச் செய்து முடித்தோம் என்று நினைவிருக்கிறதா? பல நேரங்களில் நம் அம்மாவோ அப...
மோடி ஆட்சிக்குப் பிறகு சுவிஸ் பேங்கில் இ... இந்தச் செய்தி பார்க்கும் போது போலியாக நினைக்கத் தோன்றும். ஆனால் இது உண்மை செய்தி தான். பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் பல தரப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும...

Be the first to comment on "ஓட்டுக்கு பணம் வாங்காத நேர்மையான குடிமகன்களுக்கு சமர்ப்பணமா சர்கார்?"

Leave a comment

Your email address will not be published.


*