திருநங்கைகளின் வேலைவாய்ப்பு கனவுகளை திருத்தியெழுதும் திருநங்கை – மதுரை ஸ்வப்னா

Madurai’s Swapna gives colour to transgender’s employment dreams

நல்ல உடல் நலனுடனும், மன நலனுடனும் இருப்பவர்கள் கூட சமுதாயத்தில் படித்து ஒரு அரசு
வேலையைப் பெறுவது என்பது இன்றைய கால கட்டத்தில் மிகப் பெரிய சவால். ஆனால்
இன்னமும் உடலில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக திருநங்கைகளாக மாறுபவர்களைச்
சமுதாயம் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்தும், புண்படுத்தியும் வருகிறது. அப்படிப்பட்ட சூழலில் இருந்து அவர்கள் வெளிவருவது என்பதே பெரிய காரியம். அப்படி முன்னேறி வாழ்வில் பலருக்கு முன்னுதாரணமாக வாழும் திருநங்கைகள் பலர். அவர்களில் ஒருவர் தான் திருநங்கை மதுரை ஸ்வப்னா.

அரசு வேலைப் பெற்ற திருநங்கை ஸ்வப்னா

மதுரையைச் சேர்ந்த ஸ்வப்னா நாட்டிலேயே முதல் முறையாக, டிஎன்பிஎஸ்சி குரூப் II A தேர்வில்வெற்றி பெற்று மாநில பதிவு துறையில் உதவியாளராகச் சேரவிருக்கும் முதல் திருநங்கை என்ற பெருமையை பெறுகிறார். இதன் மூலம் அரசிதழில் பதிவு பெறாத முதல் திருநங்கை அலுவலர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார். இதை எளிதில் அவர் பெற்று விடவில்லை. இந்த வெற்றிக்காக அவர் ஒரு நெடிய சட்ட போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. அதன் மூலம் தற்போது அவர் மூன்று அரசு வேலைகளுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார்.

தன்னைத் திருநங்கை என்று அடையாளப்படுத்திக் கொள்வதை விரும்பாத ஸ்வப்னா தன்னை
ஒரு பெண்ணாகவே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார். தற்போது அவருக்கு 27 வயது
ஆகிறது. தனது பெற்றோர்கள் தான் தனக்கு மிகப்பெரிய ஆதரவு என்றும், அவர்கள் தன் மீது
பாகுபாடற்ற அன்பைப் பொழிந்தனர் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

சட்ட போராட்டம்

தன்னுடைய மிகப் பெரிய பலம் மற்றும் சொத்து எல்லாமே கல்விதான் என்று கூறும் ஸ்வப்னா ”
வேலைக்கான எனது இந்தப் போராட்டம் 2013 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் II தேர்வு எழுத
முயற்சித்த போதே தொடங்கிவிட்டது. அப்போது அந்தத் தேர்வை எழுத நான் அனுமதி
மறுக்கப்பட்டேன். அதைத் தொடர்ந்து சென்னையில் போராடிய பிறகு இந்த பிரச்சினையை
உயர்நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்றேன். எனக்காக இரண்டு வழக்கறிஞர்கள் பணம்
வாங்கிக்கொள்ளாமல் இலவசமாக வாதாடிக் கொடுத்தனர்” என்கிறார்.

அவரது சட்ட போராட்டத்தின் பலனாக திருநங்கைகள் பெண்கள் என்ற வகைமையின் கீழ்
டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்துத் தேர்வுகளையும் எழுதலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் படி அரசனையும் வெளியிடப்பட்டது.

இதுவரை டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் II A , குரூப் II மற்றும் குரூப் IV ஆகிய தேர்வுகளில் வெற்றி
பெற்று மூன்று அரசு வேலைகளைக் கையில் வைத்திருக்கிறார் ஸ்வப்னா. மாவட்ட ஆட்சியர்
ஆவது ஒன்றே தனது கனவென்றும், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற்றது போலவே
நிச்சயம் ஐஏஎஸ் தேர்விலும் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையாகச் சொல்கிறார் ஸ்வப்னா.

ஸ்வப்னாவின் குடும்பத்திற்கும், நீதிமன்றத்துக்கும் இந்தச் சமுதாயம் என்றைக்கும்
கடமைப்பட்டுள்ளது.

Related Articles

UIDAI அறிமுகப்படுத்திய 5 வயதிற்கு உட்பட்... பால் ஆதார் என்றால் ? மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 5 வயதிற...
திருடனாகுவது எப்படி? இதோ சில டிப்ஸ்! திர... முதலில் கள்ளச் சாவிகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதில் எத்தனை வகைகள் உள்ளன எந்த மாதிரியான பூட்டுகளுக்கு எந்த மாதிரியான சாவிகளை போட வேண்டும் எ...
அண்ணனுக்காக வெறியோடு களமிறங்கும் பூண்டி ... " அண்ணன் செத்த அடுத்த பதினாவது நாள் அவன் தம்பி வந்தாண்டா... " துப்பாக்கி படத்தில் இடம் பெற்றிருக்கும் வசனம் இது. சமீபத்தில் வெளியான தனுஷின் நடிப்பில் ...
குழந்தை தொழிலாளர்கள் பற்றி சொன்ன வாகை சூ... 1.குழந்தைத் தொழிலாளர்கள் –குட்டி, வாகை சூடவாஇந்தியாவில் பல ஆண்டுகளாக மாறாமல் சில விஷியங்கள் உள்ளது. அவற்றில் முதன்மையானது குழந்தைத் தொழிலாளர்கள் ப...

Be the first to comment on "திருநங்கைகளின் வேலைவாய்ப்பு கனவுகளை திருத்தியெழுதும் திருநங்கை – மதுரை ஸ்வப்னா"

Leave a comment

Your email address will not be published.


*