#TN_welcomes_XiJinping #GoBackModi என்று ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள்! – அதிரும் டுவிட்டர் !

Trending Hashtags in Twitter #TN_welcomes_XiJinping #GoBackModi

சீன நாட்டை சேர்ந்த ஜின்பிங்கை வரவேற்கும் தமிழர்கள் #Gobackmodi என்று டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம். 

1.சீன பேரரசின் அரசே.. அப்படியே உங்க வண்டியை எங்க வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பக்கம் திருப்பி விட்டீங்கன்னா நல்லாயிருக்கும்..

ஒரேயொரு மழைக்கே ரோடு தாங்காமல் பள்ளம், பள்ளமா இருக்கு. ஆங்காங்கே புல்டோசரை வைச்சு நல்லாயிருந்த நிலத்தையும் தோண்டி மேடு, மேடா ஆக்கிவுட்டுட்டானுங்க..

பெரிய மனசு பண்ணி நீங்க இந்தப் பக்கம் வந்துட்டுப் போனீங்கன்னா உங்க புண்ணியத்துல எங்களுக்கு நல்ல ரோடாச்சும் கிடைக்கும்..!

2.வாங்க சாமி வாங்க..!

“வெல்கம் மிஸ்டர் ஜின்பிங்”

“ஹல்லோ மிஸ்டர் மோடி”

“சந்திப்பை ஆரம்பிக்கலாமா?”

“அதுக்கு முன்னாடி முக்கியமா ஒன்னு தெரியணும்..”

“சொல்லுங்க ஜி…”

“கான்ட்ராக்டர் நேசமணிக்கு இப்ப எப்படி இருக்கு? டிஸ்சார்ஜ் ஆகிட்டாரா?”

3.ஓட்டுப் போடாத தமிழ்நாட்டுக்காரங்களை இப்படித்தான் பழி வாங்கணும். அடுத்தது டிரம்ப் வந்தா திருச்சியில் கொண்டு வந்து இறங்கி விடுங்க.

4.தமிழர்களின் தொன்மம் கீழடி அகழ் ஆய்வுகளை தடுத்து, 2600ஆண்டுகளுக்கு முன்னான நகர நாகரீகம் வெளிவந்துவிடக்கூடாது என்று அகழாய்வை பாழ்படுத்தநினைத்த பிரதமரே, நீங்கள் தமிழகத்தின் பண்பாட்டு நகரமான மாமல்லபுரம் வரத்தேவையில்லை. #gobackmodi

5.கன்னிப் பெண்கள் நெஞ்சத்தில்

கையெழுத்து போட்டவன்

பெண்கள் பின்னால் சுற்றாமல்

பெண்கள் சுற்றும் பேரழகன்

அழுக்குச்சட்டை போட்டாலும்

அழகாய் தெரியும் ஆணழகன்

எவனோ அவனே காதல் மன்னன்! #GoBackModi #TN_welcomes_XiJinping

6.’ரஜினி படத்தோட update,அடுத்து எப்ப வரும்?’

‘அடுத்து எப்ப #மோடி TN வராரோ, அப்ப வரும்’ #GoBackModi

7.போதி தருமர் தென் இந்தியாவிலிருந்து (அதாவது தமிழகத்திலிருந்து) சீனா சென்று புத்த மதத்தைப் பரப்பியதைப் பற்றி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த டாவோசுவான் என்ற சீன வரலாற்றாசிரியர் எழுதிய குறிப்புகளை Andy Ferguson என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதி இருந்தாலும் “இதெல்லாம் போதாது, அவர் தமிழ்நாட்டின் எந்தத் துறைமுகத்திலிருந்து சென்றார் என்பதற்கான ஆதாரம் வேண்டும்” என்று பார்ப்பனர் அலறுகின்றனர். இன்னும் சிலரோ, “போதி தருமரே பார்ப்பனர்” என்றுதான் கூறப்பட்டுள்ளதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். புத்தரே பார்ப்பனர்தான் என்று கூறுவோரும் உண்டு. (அந்த புத்தர் பார்ப்பனீயத்தை எதிர்த்துக் கலகம் செய்தார் என்று வரலாற்றாசிரியர் கூறுவது தனிச்செய்தி.) ஆக, தமிழருக்கு எவ்விதப் பெருமையும் சேர்ந்துவிடக் கூடாது. ஒருவேளை வரலாற்றுக் குறிப்புகள் இருப்பது தெரிய வந்தால் அதைத் தமதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவர்களின் பார்ப்பனீயம் தெளிவாகிறது.

தமிழர்களின் பண்பாட்டையும் வரலாற்றையும் இலக்கியத்தையும் சிதைத்துத் தமதாக்கிக் கொண்ட அவர்கள், வீட்டில் தமிழ் பேசுவதால் தமிழர்களாம். #GoBackModi

இப்படி விதவிதமாக மோடியை கலாய்த்து தள்ளுகிறார்கள் நெட்டிசன்கள். 

Related Articles

#4Yearsofbbvip – ரகுவரன வில்லனா தா... கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாகத் தியேட்டருக்கு சென்று கொண்டாடி தீர்த்த படம் விஐபி. தனுஷை பிடிக்காத ரசிகர்கள...
வைரமுத்துவின் “திருத்தி எழுதிய தீர... இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1979ல் நடந்துள்ளது. இதுவரை இருபத்திமூன்றாம் பதிப்புகளை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்தப் புத்தகம் தான் வைரமுத்துவி...
ஐபிஎல் அட்டவணை 2018... போட்டி எண் தேதி போட்டி நேரம் இடம்1 7-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி...
மாணவ மாணவிகளுக்கு மாக்ஸிம் கார்க்கி எழுத... உலக அளவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போராளிகள் பலர் கடிதம் எழுதி உள்ளனர். அதே போல காந்தி, நேரு, அண்ணா, அப்துல்கலாம் என்று பலர் கடிதம் எழுதி உள்ள...

Be the first to comment on "#TN_welcomes_XiJinping #GoBackModi என்று ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள்! – அதிரும் டுவிட்டர் !"

Leave a comment

Your email address will not be published.


*