ஜோதிடம் நம் வாழ்க்கையில் எந்த மாதிரியான பாதிப்புகளை உண்டாக்குகிறது! – ஒரு பார்வை!

What kind of impact does astrology have on our lives

உலகம் எவ்வளவு வேகமாக இயங்கினாலும் எவ்வளவு வேகமாக மாறினாலும் விஞ்ஞானம் எவ்வளவோ தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்தாலும் எல்லாமே இயந்திர செயல்பாடுகள் என்று மாறினாலும் இந்த ஜோதிடத்தின் மீதான நம்பிக்கை மக்களுக்கு இன்னும் குறையவில்லை என்பது மட்டும் உண்மை. ஜோதிடம் என்பது உண்மையா, கை ரேகை பார்த்து ஜோதிடம் சொல்வது கிளியை வைத்து ஜோதிடம் சொல்வது இதை நாம் கண்டிப்பாக நம்ப வேண்டிய அவசியம் இருக்கிறதா இது என்னென்ன வழிபாடுகளை முன்மொழிகிறதோ அந்த வழிபாடுகள் எல்லாம் நாம் செய்ய வேண்டுமா என்பது குறித்த அடுக்கடுக்கான கேள்விகள் பல காலங்களாக நம் மனதில் எழுந்துகொண்டே இருக்கிறது. நாம் இவை எல்லாம் பொய் என்று ஒதுக்கித் தள்ளினாலும் அது வலுக்கட்டாயமாக ஏதோ ஒரு வழியில் நம் வாழ்க்கைக்குள் வந்துவிடுகிறது. அப்படிப்பட்ட ஜோதிடக் கணிப்புகளை எல்லாம் நம் வாழ்க்கையில் திணிப்பவர்கள் பெரும்பாலும் நம்முடைய அம்மா அப்பாக்கள் அல்லது நெருங்கிய உறவினர்களாக தான் இருப்பார்கள். இந்த மாதிரி சில  அப்பாவிகள் இருப்பதால்தான் ஜோதிடம் இன்றும் உயிருடன் இருக்கிறது. 

நம்பிக்கை இல்லாதவனும் கையாலாகாதவனும் தான் ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு வருவான் என்று சில ஜாதகக்காரர்கள் கூட சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவனுங்க தான் இந்த ஜாதகக்காரர் சொல்றது சரி இல்லை, இவன் சொல்வது எதுவும் நடக்காது என்று கூறிக்கொண்டு ஊர்ஊராக ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு ஜாதக காரனிடம் சென்று ஒவ்வொரு மாதிரியான கருத்துக்களை கேட்டு குழம்பி போய் பைத்தியமாக சுற்றி திரிவான் என்று ஜோசியக்காரர்களே சொல்லியிருக்கிறார்கள். அப்படி இருப்பினும் ஜோதிடம் மென்மேலும் வளர்வதற்கு காரணம் அப்பாவி மக்களின் அறியாமை இயலாமை பேராசை மூடநம்பிக்கை இவைதான். 

ராஜாக்களின் காலத்தில் இருந்தே இந்த ஜோதிடத்தின் மீது மக்களுக்கும் மன்னர்களுக்கும் நம்பிக்கை இருந்து கொண்டே வருகிறது.  சோழி உருட்டி பார்ப்பது வானத்து விண்மீன்கள் வைத்து கணிப்பது கைரேகையை வைத்து கணிப்பது என்று ஜோதிடம் அன்று முதல் இருந்து கொண்டே தான் வருகிறது. விஞ்ஞானம் சொல்லும் தகவல்களை நம்பி வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் இந்த விஞ்ஞான தொழில்நுட்பங்களுக்கு முன்பே இயற்கை சூழலை, மனித வாழ்வியலை ஜோதிடம் சரியாக கணித்து சொல்லியது. நம் முன்னோடிகள் அப்போதே  விஞ்ஞானத்தின் தொடக்கப் புள்ளியாக இருந்துள்ளார்கள். ஜோதிடம் குறித்து புறநானூறு முதலான தமிழ் இலக்கியம் புத்தகங்களில் கூட கூறியிருக்கிறார்கள். ஜோதிடம் சொன்னால் சுனாமி போன்ற பேரழிவுகள் நடப்பதற்கு பெரும்பாலும் வாய்ப்பு இருக்கு என்பதை சுட்டும் வரிகள் அந்த புத்தகங்களில் உள்ளன. ஜோதிடத்தை பாடமாக பல பல்கலைக்கழகங்களில் வைத்திருக்கிறார்கள். வேதங்களில் ஆறாவது இடத்தில் உள்ளது ஜோதிடம். கெப்ளர் விதி முறைப்படி சொன்னால் வானியல் என்ற அறிவாளி தாய்க்கு பிறந்த முட்டாள் குழந்தைதான் இந்த ஜோதிடம். சந்திர கிரகணம் சூரிய கிரகணம் போன்ற செயல்பாடுகள் எல்லாம் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இது முழுக்கமுழுக்க விஞ்ஞானம் கிடையாது. விஞ்ஞானத்தின் சிறுபகுதி ஜோதிடம் என்பது தான் உண்மை. இந்த விஞ்ஞானத்தின் சிறுபகுதி அமெரிக்காவில் சில பல்கலைக்கழகங்களில் பாடத் திட்டமாகவும் இருக்கிறது. அமெரிக்காவுக்கு கலிபோர்னியாவுக்கு சென்று வேலை செய்யக்கூடிய இளைஞர்களிடம் நல்ல நேரம் பார்த்து தான் வெளிநாடு செல்கிறார்கள். 

இவையெல்லாம் ஜோதிடத்தின் மேன்மைகள் என்று சொல்லி சொல்லியே காலம் காலமாக ஏழைகளை ஏமாற்றி வருகிறார்கள் இந்த வியாபார சூதாட்ட ஜோதிடர்கள். இப்படிப்பட்ட ஜோதிடர்கள் அப்பாவி ஏழை மக்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் ஏமாற்றி சிதைக்கிறார்கள் என்று பார்ப்போம். 

குழந்தை பிறப்பு, குழந்தை வளர்ப்பு, நிலம் வாங்குதல், வீடுகட்டுதல், குடி போகுதல், பெண் பார்த்து திருமணம் செய்து மீண்டும் குழந்தை பிறப்பு என்று  ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கை சுழற்சியில் ஒவ்வொரு தருணத்திலும் இந்த ஜோதிடம் வேலையை பார்க்கிறது. 

முதலில் குழந்தை பிறப்பை ஜோதிடம் எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை பார்ப்போம். எந்த நேரம் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என்று ஜோதிடர்கள் ஜோதிடர்களாக சென்று விசாரித்து தள்ளுகிறார்கள் குடும்பத்தினர்கள். அவர்கள் சொன்ன நேரத்தில் தான் குழந்தை பிறக்க வேண்டுமென்று மருத்துவர்களின் சிரமத்துக்கு உள்ளாகி இந்த நேரத்துக்குள் எடுங்க என்று கெஞ்சு கெஞ்சேன கெஞ்சி வயிற்றை அறுத்து ஒரு குழந்தையை வெளியே எடுக்கிறார்கள். இப்படி ஜோதிடம் ஒரு குழந்தையின் பிறப்பையும் குழந்தையை கருவில் சுமந்து கொண்டிருக்கும் தாயையும் எப்படி பாதிக்கிறது என்பதை இயக்குனர் பாலா தன்னுடைய தாரை தப்பட்டை படத்தில் காட்டி இருப்பார்.  சரியான பாதுகாப்பு முறை இல்லாமல் ஜோதிடம் சொன்னால் சரியாக இருக்கும் என்று நம்பி வரலட்சுமி துடிக்க துடிக்க அப்படியே வயிற்றை கிழித்து எடுப்பார்கள். அதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு வரலட்சுமி உயிரை விடும் சூழ்நிலைக்கு வந்து விடுவார். 

அடுத்ததாக குழந்தை வளர்ப்பு முறையில் ஜோதிடம் எப்படிப்பட்ட பாதிப்புகளை உருவாக்குகிறது என்பதை பார்ப்போம். அம்மாவோட ராசிப்படி அல்லது அப்பாவோட ராசிப்படி இந்த குழந்தை உங்க கூட இருக்க கூடாது. அப்படி இருந்தால் ஏதாவது ஒரு பாதிப்பு வந்துகிட்டே இருக்கும். கண்டிப்பா எதாவது ஒரு உயிர் இழப்பு ஏற்படும் என்று பயமுறுத்துகிறார்கள். அதை நம்பிக் கொண்டு சில பெற்றோர்கள் தங்களுக்கு பிறந்த குழந்தையைக் கொண்டு போய் வேறொரு ஊரில் இருக்கும் தாத்தா பாட்டியிடம் கொடுத்து வளர்க்க சொல்கிறார்கள். அப்படி இல்லை என்றால் மாமா தங்கச்சி போன்றோர்களின் வீடுகளில் கொடுத்து வளர்க்க சொல்கிறார்கள். அதுவும் இல்லாதவர்கள் தங்கள் குழந்தைகளை மிக இளம் வயதிலேயே கொண்டுபோய் ஹாஸ்டலில் சேர்த்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட முட்டாள்தனத்தையும் இயக்குனர் பாலா தன்னுடைய நான் கடவுள் படத்தில் காட்டி இருப்பார். அந்த படத்தில் ஆர்யா சிறுவனாக இருக்கும்போது அவனை நீங்கள் வீட்டில் வைத்து இருந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று ஜோசியர் சொல்ல, அப்பா அம்மா இருவரும் சேர்ந்து காசிக்கு கூட்டிச் சென்று அங்கு வேதம் படிக்க அனுப்பி விடுவார்கள். ஆனால் ஆர்யா பெரியவனானதும் கொஞ்சம் கூட குடும்ப பற்று இல்லாமல் இருப்பார். 

அது போல திருமண விஷயத்திலும் அந்த ஜோதிடர்கள் நிறைய மனிதர்களின் வாழ்க்கையை பாதித்து இருக்கிறார்கள். செவ்வாய் தோஷம் இருக்கும் பெண்களை திருமணம் செய்து கொண்டவர் அல்லது அந்தப் பெண் புகுந்த வீட்டில் நிச்சயமாக ஒரு மரணம் ஏற்படும் என்று இந்த ஜோதிடர்கள் சொல்லி சொல்லி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். செவ்வாய் தோஷம் இருக்கும் பெண்ணை செவ்வாய் தோஷம் உள்ள பையனுக்கு தான் கட்டி கொடுக்க வேண்டும் என்ற ஒரு விதி  நிர்ப்பந்திக்கப்பட்டு  பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது. ஜோதிடத்தை பொருத்தவரை மிக கொடூரமான ஒரு விஷயம் என்றால் அது செவ்வாய் தோஷம். அதுவும் செவ்வாய் தோஷம் இருக்கிற பெண்கள் பாவப்பட்டவர்கள். பாவம் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடப்பதில்லை அலையோ அலையென அலைந்து  தெரிந்து வயது ஆகிப்போய் உடல் முற்றிப்போய்  வாழ்க்கையே வெறுத்து விடுகிறார்கள் அந்த பெண்கள். இப்படி தமிழகம் முழுக்க எத்தனையோ பெண்கள் செவ்வாய் தோஷம் என்ற வார்த்தையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்ன என்பதை பாருங்கள். செவ்வாய் தோஷம் இருக்கும் பெண்ணை செவ்வாய் தோஷம் இல்லாத ஒரு பையனுக்கு கட்டி வைத்தால் அந்த பையனின் வாழ்க்கை கண்டிப்பாக சீரழியும் என்பது உண்மை. அது மரணம் ஏற்பட்டு அல்லது உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டு அல்லது அந்த இளைஞனின் சந்ததி ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு என்று இப்படி பாதிப்புகள் ஏதோ ஒரு வகையில் நிச்சயம் இருக்கும். அதுமட்டுமில்லாமல் செவ்வாய் என்பது மிக வேகமான ஒரு கோள். அது எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் தன்னுடைய சக உயிரை வீழ்த்தி இந்த செவ்வாய் அதிக வேகத்தில் செயல்படும். அதற்காகத்தான் செவ்வாய் உடைய பெண்ணுக்கு அதே சக்தி கொண்ட செவ்வாய் உடைய பையனை திருமணம் செய்து வைக்கிறோம். இப்போது இரண்டும் சரிசமமாக இருக்கும் போது இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் போகிறது. 

இப்படி அடுத்தடுத்து கேள்விகளை கேட்க விடாதபடி ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சமாளித்து விடுகிறார்கள் இந்த ஜோதிடர்கள். மக்கள் நம்புகிறார்கள் என்பதற்காக ஜோதிடத்தை உண்மை என்றும் நம்பவில்லை என்பதற்காக மூடநம்பிக்கை என்றும் சொல்ல முடியாது. ஜோதிடம் என்பது நிரூபணம் இல்லாத ஒன்று. அப்படிநிரூபனம் இல்லாத ஒன்றை வைத்து மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி செய்யும் வியாபார சூதாட்டம் தான் இந்த ஜோதிடம். இன்றைய விஞ்ஞானிகள் புதுப்புது கோள்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.  அந்த மாதிரியான கோள்கள் இவர்களுடைய சாதனை புத்தகத்தில் இருக்கிறதா? இந்த ஜோதிடர்கள் எல்லாம் இலக்கியத்தில் ஜோதிடம் பற்றி கூறியிருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் சுத்த பொய். அவர்கள் உண்மையில் இன்றைய விஞ்ஞானத்தின்  ஊற்று கிடையாது. 

இப்படி இந்த ஜோதிட காரர்கள் நிறைய பேருடைய திருமண வாழ்க்கையில் விளையாடி வருகிறார்கள்.  விளையாடிவிட்டு ஜோதிடர்கள் ஏமாற்றுகிறார்கள் தவிர ஒருபோதும் ஜோதிடம் ஏமாற்றாது என்று சொல்லி சமாளித்து விடுகிறார்கள். திருக்கணித முறையில் எழுதப்பட்ட ஜாதகம் தான்  உண்மையான ஜாதகம் என்கிறார்கள், அவர்கள் பிறந்த ஊரை வைத்து நேரத்தை கணித்து இந்த திருக்கணித ஜாதகத்தில் எழுதுகிறார்கள் என்று சொல்கிறார்கள். திருக்கணித ஜாதகம் உலகம் முழுக்க உள்ள ஜாதகம் என்றால் அமெரிக்காவில் அடிக்கடி நேர கணிப்பு முறையை மாற்றுகிறார்களே அங்கு எப்படி இந்த திருக்கணித முறை செல்லுபடி ஆகும். இந்த மாதிரியான ஜோதிடர்கள் வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். இரண்டு பஞ்சாங்கத்திற்கும் வெறும் நேர வித்தியாசம் மட்டும்தான் உள்ளதே தவிர அவற்றில் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை என்று சொல்லி அவர்கள் சமாளிப்பார்கள். 

 அந்த ஜோதிடர்களின் குறிக்கோள் அறியாமையில் வாழும் அப்பாவிகள் தான்.  அவர்களிடம் போய் இந்த தகடு வைத்துக்கொள் இந்த தாயத்தை வைத்துக்கொள் என்று வற்புறுத்தி பயமுறுத்தி வியாபாரம் செய்கிறார்கள். பல்கலைக்கழக பாடத்திட்ட புத்தகத்தில் ஜோதிடம் இருக்கிறது என்பதற்காக ஜோதிடம் அங்கீகரிக்கப்பட்டு விட்டது அது அறிவியல் பூர்வமானது என்று ஏற்றுக்கொள்ள முடியாது. பல்கலைக்கழக பாடத் திட்ட தேர்வுக் குழுவில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்கின்றன அந்த மாதிரி நடந்த குளறுபடிகளில் தான் ஜோதிடங்கள் பாட புத்தகங்களாக மாறியுள்ளன. இந்திய அறிவியல் கழகம் ஜோதிடத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆன்மீகத்தின் மீது உள்ள பற்று காரணமாக சில அரசியல் லாபத்திற்காக ஜோதிடத்தை வலிந்து திணித்து பாடத்திட்டமாக வைத்துவிடுகிறார்கள்.  அந்த மாதிரி ஆன்மிகப் பற்று கொண்ட துணைவேந்தர்கள் படித்திருந்தாலும் அவர்கள் முட்டாள்கள். அவர்கள் அறிவாளிகள் அல்ல. 

ஜோசியக்காரன் சொன்னான் என்பதற்காக மேலே குறிப்பிட்டிருக்கும் இந்த மாதிரியான தவறுகளை செய்யாமல், பரிகாரம் செய்கிறோம் என்கிற பெயரில் கண்ட கண்ட இடங்களுக்கு சென்று காசை கரியாக்காமல், எந்த ஒரு செயலையும் நிதானமாக செய்யுங்கள், முடிவு எடுப்பதற்கு முன் நிதானமாக யோசித்து விட்டு முடிவெடுங்கள். இன்று நேற்று நாளை படம் பார்த்திருக்கிறீர்களா அந்த படத்தில் “ஒரு ஜோதிடர் ஒரு டைம் மிஷின்” இருக்கும். இந்த இரண்டு விஷயங்களாலும் மனித வாழ்க்கையை மாற்ற முடியாது கட்டுப்படுத்த முடியாது. நாம் எடுக்கும் முடிவுகள் தான் நம்மை  செழுமைப் படுத்தும். 

Related Articles

எஸ் ராமகிருஷ்ணனின் “கடவுளின் நாக்க... தின இந்து நாளிதழலில் தொடராக வந்த கடவுளின் நாக்கு கதைகளின் தாயகம், மனிதன் நல்லவனா?, அன்பின் அடையாளம், காட்டின் அரசன்!,சிலந்திப் பெண்!, கண் திறவுங்கள், ...
பெட்ரோல் விலை உயர்வு குறித்து நெட்டிசன்க... பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படியே போனால் விரைவில் நூறு ரூபாயை எட்டி விடும் என்று வாகன ஓட்டிகள் வருத்தத்தையும் அதிருப்...
கழிவு நீரில் இருந்து பேட்டரி உருவாக்கம் ... ஐஐடி கரக்பூரில் உயிர் தொழில்நுட்ப துறையில்(Biotechnology) முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுவரும் மாணவி ரம்யா வீறுபோட்லா. இவர் கழிவு நீரில் இருக்கும் பாக்ட...
இந்தியர்கள் 70 சதவீதம் நேரத்தை மொபைல் போ... குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டியது அந்தக்காலம். செல்போனை காட்டி சோறு ஊட்டுவது இந்தக்காலம். அந்தளவுக்கு செல்போன் மனித வாழ்க்கையின் இன்றியமையா ப...

Be the first to comment on "ஜோதிடம் நம் வாழ்க்கையில் எந்த மாதிரியான பாதிப்புகளை உண்டாக்குகிறது! – ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*