மாணவ மாணவிகளுக்கு மாக்ஸிம் கார்க்கி எழுதிய “புரட்சி” கடிதம்! – இந்திய இளைஞர்களுக்கு எப்போதும் பொருந்தும்!

மாணவ மாணவிகளுக்கு மாக்ஸிம் கார்க்கி எழுதிய “புரட்சி” கடிதம்! – இந்திய இளைஞர்களுக்கு எப்போதும் பொருந்தும்!

உலக அளவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போராளிகள் பலர் கடிதம் எழுதி உள்ளனர். அதே போல காந்தி, நேரு, அண்ணா, அப்துல்கலாம் என்று பலர் கடிதம் எழுதி உள்ளனர். இவை அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்தவை. சமீபத்தில் பெரும்பாலானோரை கவர்ந்த கடிதமாக பாடலாசிரியர் நா. முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம் கருதப் படுகிறது. இந்நிலையில் ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்கியின் கடிதம் ஒன்றை நாம் நினைவு படுத்தி பார்க்க வேண்டியுள்ளது. காரணம் இன்றைய இளைஞர் இளைஞிகள் அதிக அளவில் சமூக அவலங்களை சாடி மாற்றத்தை உருவாக்க துடிக்கிறார்கள் என்பதை அவர்களுடைய முகநூல் கட்டுரை, அரசியல் மீம்கள் வெளிப்படுத்துகின்றன. அந்த மாதிரி மாற்றத்தை விரும்பும் “இந்திய” இளைஞர் இளைஞிகள் மாக்ஸிம் கார்கியின் இந்தக் கடிதத்தை படித்துப் பார்த்தால் அவர்கள் இந்த சமூகத்தை மேலும் அதிகமாக நேசிக்கத் தொடங்குவார்கள் என்பது உறுதி.

ரஷ்யப் புரட்சிக்குப் பின்னால் இர்குட்ஸ் என்ற பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கடிதம் தான் இது.

” நீங்கள் எப்படிச் சிரமப்பட்டு உழைக்கிறீர்கள் என்பதைக் கேட்க பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். மாணவர்களே அதுதான் விஞ்ஞானத்தை கற்க வேண்டும். மனிதனுக்கு அதைவிட பலம் பொருந்திய ஆயுதம் வேறொன்றுமில்லை. நம் உலக உழைப்பாளி மக்கள் கல்வி இல்லாமலும் அறியாமையாலும் சொல்ல முடியாத துயருக்கு உள்ளாகி இருக்கிறார்கள். உங்கள் தந்தையர்கள் விஞ்ஞானத்தின் சிகரம் வரை எட்டிப் போகும் அகன்ற பாதையை உங்களுக்குத் திறந்து வைத்துள்ளனர். நீங்கள் இப்பொழுது உங்கள் தந்தையர்கள் காட்டிச் சென்ற அவ்வழியில் உங்கள் கடமையைச் செய்ய வேண்டியுள்ளது.

நம் நாட்டிற்கு ஆயிரக்கணக்கில் டாக்டர்களும் பள்ளி ஆசிரியர்களும் விஞ்ஞானிகளும் பாடகர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் நடிகர்களும் இன்னும் எல்லா துறையிலும் சிறந்த இளைஞர்கள் தேவைப் படுகின்றனர். மக்கள் இயக்கம் ஒன்று தங்கள் சக்தியைச் செலவிட்டு பூமியின் கீழ் புதைந்துள்ள பொருள்களை எடுத்து அவற்றைப் பெருக்க வேண்டும்.

மக்களின் வாழ்க்கையைப் பாழாக்கும் நாட்டிலே ஊடுருவியுள்ள புல்லுருவிகளையும், நஞ்சு மனம் கொண்டவர்களையும் விசக் கும்பலையும் கூண்டோடு அழிக்க வேண்டும். நாட்டின் வளரச்சிக்குத் தீங்கு செய்யும் எவருக்கும் இங்கு இடம் இல்லை. நம் நாடு முழுவதையும் ஒரே தோட்டமாக கருதி உழுது பண்படுத்தி விளை நிலமாக்க வேண்டும். ஆறுகளுக்கு அணைகட்ட வேண்டும். “பயன்படாத” காட்டை அழித்து பல லட்சக் கணக்கான மைல் சாலை போட வேண்டும். பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகளை எலிகளை ஒழிக்க வேண்டும். மக்களுக்கு நோய்களை உண்டாக்கி விஷ ஜுரம் உண்டாக்கும் கொசுக்களை பல நோய்களை பரப்பும் ஈக்களைக் கொல்ல வேண்டும்.

இன்னும் நீங்கள் சாதிக்க வேண்டிய காரியங்கள் ஏராளம் உள்ளன. இந்த மண்ணில் ஓர் உண்மையான கலாச்சாரமுடைய சோஷலிஸ சமுதாயத்தை அமைக்க வேண்டும்.

இத்தகைய வேலைகள் உங்களை எதிர் நோக்கியுள்ளன. அதற்கு மிகப் பெரிய அளவில் விஞ்ஞான அறிவு வளர வேண்டி இருக்கிறது. அதன் மூலம் எல்லாவற்றையும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

இத்தகைய பணிகளை நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவனும் முனைந்து செயலில் ஈடுபட வேண்டும். நீங்களே உலகத்தின் சிறந்த மக்கள். எதிர்காலம் உங்களிடம் உள்ளது. உங்களை நாடு போற்றிப் புகழ் வேண்டுமானால் வீரப் புதல்வர்களாகச் செயல்படுங்கள். நாட்டிற்குத் தொண்டாற்ற உதவும் கல்வியைக் கற்று, பல்லாண்டுகளாக மனிதன் கண்டு வந்த ஆசைக் கனவுகளை நினைவாக்குங்கள்.

இளைஞர்களே! இந்த ஆசிரியனின் வேண்டுகோள் இதுவே. மனிதன் பயன் இன்றி அழியக் கூடாது. இதை உங்கள் மனதில் இருத்திக் கொள்ளுங்கள். ”

இதுவே அந்தக் கடிதம். இது மாக்ஸிம் கார்க்கி உயிரோடு இருக்கும்போது எழுதியது. பல ஆண்டுகள் ஆன போதும் இந்த வரிகள் மங்கலடிக்காமல் புத்துணர்வை ஊட்டக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

Related Articles

இன்றைய தமிழ் சமூகத்தில் “பெண் குழந... இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான படம் "கருத்தம்மா". 1996ல் நான் பிறந்தேன். நான் பிறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே அதாவது 1994 ல் வெளியான இ...
2.0 படத்திற்கு எதிர்பார்ப்பு அவ்வளவாக இல... தமிழ் சினிமாவை உலக அரங்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் சினிமா எடுக்கும் இயக்குனர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இயக்குனர் ...
#TN_welcomes_XiJinping #GoBackModi என்று... சீன நாட்டை சேர்ந்த ஜின்பிங்கை வரவேற்கும் தமிழர்கள் #Gobackmodi என்று டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம். 1.சீன ...
நகர்ப்புற சாலைகளில் இனி மணிக்கு 70 கிலோ ... நகர்ப்புற சாலைகளில் வாகனங்கள் பயணிக்கும் வேகத்தை அதிகரித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி கார்கள் இனி மணிக்கு 70 கிலோ மீட்டர் வ...

Be the first to comment on "மாணவ மாணவிகளுக்கு மாக்ஸிம் கார்க்கி எழுதிய “புரட்சி” கடிதம்! – இந்திய இளைஞர்களுக்கு எப்போதும் பொருந்தும்!"

Leave a comment

Your email address will not be published.


*