கிரேஸி மோகன் பற்றிய சில தகவல்கள்!

Some information about “Crazy” Mohan
  1. 40 ஆண்டுகளில் 6500 க்கும் மேற்பட்ட நாடகங்கள் மேடையேற்றம் செய்துள்ளார். 
  2. மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, அண்ணாமலை, வாசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற 20 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வசனம் எழுதி உள்ளார். 
  3. மைக்கேல் மதன காமராஜனில் மளிகை கடைக்காரராகவும் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் மார்க்க பந்து கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவற்றில் எல்லாம் கமல் தான் வற்புறுத்தி நடிக்க வைத்தார். 
  4. கிரேஸி கிரியேசன்ஸ் 1979ல் ஆரம்பித்தார்கள். இது வரைக்கும் 6500 ஷோ போட்டிருக்கிறார்கள். 
  5. எல்லா நாடகமும் 300, 400 ஷோ போட்டிருப்பார்கள். குறிப்பாக  ” மீசையானாலும் மனைவி “, ” மேரேஜ் மேட் இன் சலூன் ” நாடகங்களை 700 முறைக்கு மேல் போட்டு உள்ளார்கள். சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தை 1009 ஷோ போட்டிருக்கிறார்கள். 
  6. கிரேஷி மோகன் ரொம்ப ரசிச்சு எழுதின நாடகம் சாக்லேட் கிருஷ்ணா தான். கிரேஸி மோகனுக்கு பிடிச்ச டிராமாவும் சாக்லேட் கிருஷ்ணா தான். 
  7. இவரது நாடகங்களை தூர்தர்ஷன் சேனல் செவ்வாய் கிழமைகளில் ஒளிபரப்பியது. 
  8. இவரது குழுவை நம்பி 25 குடும்பங்கள் உள்ளன. 
  9. காமெடி நடிகர் சதீஷ் மற்றும் எட்டு தோட்டாக்கள் புகழ் ஸ்ரீ௧ணேஷ் இருவரும் இவரது நாடக குழுவில் இருந்தவர்கள். 
  10. 66 வயதில் மரணமடைந்தார். 

கிரேஸி மோகனின் வசனங்கள் சில: 

  1. இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க?மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு?

    இப்ப மருந்து கொட்டிடுச்சி.

  2. என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா…!!

     அய்யோ…!! அப்பறம்?

    “சாத்திட்டா”

  3. கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக்

    காப்பாத்தினியே, அவ இப்போ எப்படி இருக்கா?

    முழுகாம இருக்கா..!!!???….

  4. DOCTOR : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி

    இருக்கு?

    போயும் போயும்v இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு

    தோணுது டாக்டர்…!

  5. “எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?”

    அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்… எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!”

  6. வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!

    அதனால…?

    வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!

  7. “தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?”

    “நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்”

  8. ஹீரோவுக்கும் தயாரிப்பாளருகும் என்ன வித்தியாசம்?

    ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில்

    கோடீஸ்வரனாகி விடுவான்,

    கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸி’ல

    ஏழையாயிடுவாரு…!

  9. “தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?”

    “சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?”

  10. உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?

    அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!!!

Related Articles

தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்திய படங்கள்!... எங்க எந்த தப்பு நடந்தாலும் நான் தட்டிக் கேட்பேன்... கண்ணு முன்னாடி நடக்குற அநியாயத்த யார் தடுத்தாலும் தட்டிக் கேட்பேன்... மத்தவங்கள மாதிரி சுயநலமா என்...
இதய நோய்களும் அதற்கான நவீன சிகிச்சைகளும்... இதயம் காக்கும் புதிய சிகிச்சைகள்! ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் நாள் ' உலக இதய விழிப்புணர்வு நாள்'  எனக் கொண்டாடி வருகிறோம். காரணம் நம் உயிருக்கு பாது...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தி... மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அடிக்கல...
மோடி ஆட்சிக்குப் பிறகு சுவிஸ் பேங்கில் இ... இந்தச் செய்தி பார்க்கும் போது போலியாக நினைக்கத் தோன்றும். ஆனால் இது உண்மை செய்தி தான். பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் பல தரப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும...

Be the first to comment on "கிரேஸி மோகன் பற்றிய சில தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*