மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது!

கடந்த ஆண்டு மோடியின் வாழ்க்கை வரலாறு புத்தகம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. அப்போதே அதுபற்றி பல விமர்சனங்கள் எழுந்தன. அதைப் போலவே சமீபத்தில் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் பதவி வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியிடப்பட்டது. அதைப் பற்றியும் சமூகவலைத் தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாகிறது என்ற செய்தி நெட்டிசன்களுக்கு நல்ல தீனியாக அமைந்து உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆந்திர முன்னாழ் முதல்வரின் வாழ்க்கை வரலாறும் கர்நாடக முன்னாள் முதல்வரின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாக உருவாக இருக்கிறது என்ற செய்தி வந்தது. அதே போல நமது பிரதமரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மோடியாக பரேஷ் ராவல் நடிக்க உள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் பாஜக எம்பியும் கூட என்பது கவனிக்கத்தக்கது.

சமீபத்தில் திரைக்கு வந்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம்மின் வாழ்க்கை வரலாறு படம், தடகள வீரர் பறக்கும் சீக்கியர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்றுப் படம், சச்சினின் வாழ்க்கை வரலாறு படம், தோனியின் வாழ்க்கை வரலாறு படம் போல் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுப் படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

Related Articles

டெஸ்லா நிறுவனத்தை முந்தத் திட்டமிட்டிருக... தெற்கு ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப் பெரிய லித்தியம் அயன் பேட்டரியை (lithium ion battery) உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த...
டீ குடிச்சதெல்லாம் ஒரு சாதனையா முதல்வரே!... எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் என்று ஊர் முழுக்க கட்அவுட் முளைத்துள்ளது. ...
கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் ... ஹேராம்நடிகர்கள்: கமல் & ஷாருக்கான் (அகழ்வாராய்ச்சியாளர்கள்), ஹேமா மாலினி, ராணி முகர்ஜி, அப்பாஸ்(டாக்டர்),...இயக்கம்: கமல்இசை: இளையராஜ...
ரஜினியின் 100 மரணமாஸ் வசனங்கள் ஒரு பார்வ... எனக்கு மரியாதை வேண்டாம், வேலைக்கு மரியாதை கொடுங்க... இது எப்படி இருக்கு? எப்போதுமே ஒருத்தர குறைச்சி மதிப்பிடக் கூடாது. ஆஞ்சநேயர ராவணன் குற...

Be the first to comment on "மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது!"

Leave a comment

Your email address will not be published.


*