ஆதார் இணைக்கக் கால கெடு நீட்டிப்பு. தீர்ப்பு வரும் வரை காத்திருக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Supreme Court Indefinitely Extends Deadline of Aadhar Linking To Mobile and Bank Accounts

மார்ச் 31 ஆம் தேதிக்குள் மொபைல் எண்கள் மற்றும் வங்கி கணக்கு ஆகியவற்றோடு கட்டாயம்
ஆதார் காரடையும் இணைக்க வேண்டும் என்ற கால கெடுவை மறு உத்தரவு வரும் வரை
நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மானியம் வழங்குவது தவிர வேறெந்த
காரணத்துக்காகவும் ஆதார் அட்டையை பொதுமக்களிடம் வற்புறுத்திப் பெற கூடாது என்று
மேலும் தனது உத்தரவில் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

ஆதாருக்கு எதிரான வழக்கு

இந்தத் திட்டத்திற்காக கை விரல் ரேகைகள் மற்றும் கண் கருவிழி படங்கள் போன்றவற்றைப்
பெருமளவில் பதிந்து வைப்பது என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது, ஆகவே ஆதார்
திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த
வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக மிஸ்ரா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட
அமர்வு விசாரித்து வருகிறது. அமர்வில் ஏ.கே.சிகரி , ஏ.எம்.கான்வில்கர், அசோக பூஷன் மற்றும்
டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இந்த அமர்வுக்கு நேற்று ( செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்த ஆதார் வழக்கில் நீதிபதிகள்
பின்வருமாறு தங்கள் தீர்ப்பை தெரிவித்தனர் ‘அரசு வழங்கும் பல்வேறு மானியங்களைப் பெற
ஆதார் கட்டாயம் என்ற கெடு நீட்டிக்கப்படுகிறது , மொபைல் எண் மற்றும் வங்கி எண்
போன்றவற்றை ஆதாரோடு இணைக்க மார்ச் 31 என்ற கால கெடு நீட்டிக்கப்படுகிறது. இந்த
அமர்வின் இறுதி தீர்ப்பு வரும் வரை இந்தக் கால கெடு நீட்டிப்பு அமலில் இருக்கும்.’

முன்னாள் நீதிபதியின் ஆதாருக்கு எதிரான வாதம்

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியவர்
கே.எஸ்.புட்டசாமி. இவர் ஆதாருக்கு எதிரான தனது வாதங்களைத் தொடர்ந்து உச்ச
நீதிமன்றத்தில் தெரிவித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் ஆதார் குறித்து தனது வாதத்தைத்
தெரிவித்த அவர் ‘ஆதார் இணைக்கப்படவில்லை என்ற காரணத்தால் பொது விநியோக
திட்டங்களின் கீழ் பெற வேண்டிய சலுகைகள், உணவுப் பொருட்கள் முறையாகக் கிடைக்காமல்
நாட்டின் சில இடங்களில் ஏழைகள் உணவு இன்றி பலியாகி உள்ளனர். ஆகவே இந்தத்
திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்து இருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று
இருக்கிறது.

Related Articles

தன்னுடைய சொந்தக் கட்சியையே தோற்கடித்த மல... தேவைப்பட்டால் நான் என் சொந்தக் கட்சியைக் கூட எதிர்ப்பேன் என்று கமல் தெரிவித்து உள்ளார். அதை வைத்து பல மீம் பேஜ்கள் கலாய்த்து வருகின்றனர்.ஆனால் உண்...
அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்க கூடாது... 43வது சென்னை புத்தக திருவிழா 2020ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி தொடங்கியது. தொடங்கி வைக்க தமிழக முதல்வர் எடிப்பாடி பழனிச்சாமி வந்தார். அடுத்த வருட புத்தக திர...
தமிழ் சினிமாவின் பாராட்டத்தக்க சில புதிய... தமிழ் சினிமாவில் அவ்வப்போது வித்தியாசமான முயற்சியுடன் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாவது உண்டு. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் உண்மையிலயே வித்தியாசம...
பல நன்மைகளை தரும் பனம் பழம்!... விதைக்க வேண்டியதுமில்லை. வளர்க்க வேண்டியதுமில்லை என்கிற அளவில் நமக்கு சிரமம் தராதது பனை மரம். பனை மரத்தின் பழம் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. ...

Be the first to comment on "ஆதார் இணைக்கக் கால கெடு நீட்டிப்பு. தீர்ப்பு வரும் வரை காத்திருக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு"

Leave a comment

Your email address will not be published.


*