சட்டப்பேரவையில் தனிஒருவனாக தினகரன்! – ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த ஸ்டாலின்!

dinakaran

2018ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி தொடங்கி வைத்தது, தனியொருவனாக தினகரன் சட்டப்பேரவைக்கு முதன் முறையாக வந்த டிடிவி தினகரனுக்கு 148 வது இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது, அரசை பாராட்டி பேசிய ஆளுநர் உரையை புறக்கணித்து எதிர்கட்சியினர் வெளிநடப்பு என்று பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்தது சட்டப்பேரவைதொடர்.

ஆளுநர் உரை

தமிழில் வணக்கம் கூறியவர் தொடர்ந்து அதிமுக அரசை வெகுவாகப் பாராட்டித்தள்ளினார்.

எதற்காக இந்த பாராட்டுகள்?

* தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை சிறப்பாக அமல்படுத்தியதற்காக…

* வருவாய் குறைந்தபோதும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதற்காக…

* ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களைக் காப்பாற்ற மத்திய அரசோடு தமிழக அரசு          இணைந்து சிறப்பாக செயல்பட்டதாக…

* முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வகுத்துத் தந்த பாதையில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக…

* மின்பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம், ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளால் தற்போது மின்மிகை மாநிலமாக இருப்பதாக…

* இறந்தோர் உடல் உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்துவதில், நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதுடன், அதற்கான தேசிய விருதை 2015ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்டுகளாக பெற்றுவருவதற்காக…

இப்படி ஆளுங்கட்சியை பாராட்டி தள்ளியதோடு ஜெவுக்கு மெரினா கடற்கரையில் நினைவுமண்டபம் அமைக்கவும், இல்லத்தை நினைவிடமாக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். இப்படிப்பட்ட இவரது உரையை இது ஒரு ஆளுநரின் பேச்சாக தெரியவில்லை, ஆளுங்கட்சி அமைச்சரின் உரைபோல தெரிகிறது என்று சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு

ஆளுநரின் உரையாற்ற, எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். மேலும் ஸ்டாலின்,
பெரும்பான்மை இன்றி அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது; மெஜாரிட்டி நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடாமல் அரசு தயாரித்த உரையை ஆளுநர் படிக்கிறார் என்றும் குதிரை பேர ஆட்சியை ஆளுநர் பாராட்டுவது வேதனைக்குரியது என்றும் கூறியுள்ளார்.

இப்படி எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தே தங்களுக்கான வாய்ப்புக்களை இழந்து வருகின்றனர் என்று எதிர்கட்சிக்கும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Related Articles

பாலகுமாரன் எழுதிய பாட்ஷா வசனங்கள்!... " மாட்ட விலை பேசி விக்குற மாதிரி மாப்பிளைய விலை பேசி விக்குறதுக்கு பேருதான் வரதட்சணை! " " கடன் வாங்கறதும் தப்பு... கடன் கொடுக்கறதும் தப்பு......
தமிழ்பிரபாவின் “தெய்வத்தால் ஆகாதென... செருப்பு வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றும் இரண்டரை அடி உயரமுள்ள நாகேஷ்...க்ளவுனிங் டாக்டர் மாயா...தேசிய அமைப்பொன்றால்  அங்கீகரிக்கப்பட...
கூவம் நதி தாமிரபரணியைக் காட்டிலும் புனித... "சென்னையில் யாரும் எங்கும் செல்லலாம். யாரும் யாருக்காகவும் பயப்பட வேண்டியதில்லை. கூவம் அழுக்காய் மலமாய் நாற்றத்தோடு ஓடினாலும் தாமிரபரணியைக் காட்டிலும்...
ரவுடிகளை பிடிக்க போலீஸ்க்கு உதவிய மலையம்... பூந்தமல்லி அருகே நேற்று இரவு எட்டு மணி அளவில் வினு என்ற ரவுடியின் பிறந்தநாள் விழாவிற்காக ஒன்றுகூடிய 120 ரவுடிகளில் 72 பேரை போலீஸ் கொத்தாக கைது செய்துள...

Be the first to comment on "சட்டப்பேரவையில் தனிஒருவனாக தினகரன்! – ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த ஸ்டாலின்!"

Leave a comment

Your email address will not be published.


*