இயற்கை எய்தினார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்

Greatest Scientist and Physics Stephen Hawking Passed Away

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76 ஆம்
வயதில் மரணமடைந்தார். அவர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் இந்தத்
தகவலை தெரிவித்தார்.

பன்முகம் கொண்ட அறிவியல் ஆளுமை

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டில் 1942 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி பிறந்தவர் ஸ்டீபன்
ஹாக்கிங். மிகச் சிறிய வயதிலேயே நரம்பியக்க நோயினால் பாதிக்கப்பட்டு கை கால் செயல்
இழந்து, பேச்சு பாதிப்புக்கும் உள்ளானார். எழுத்தாளர், கோட்பாட்டு இயற்பியலாளர் மற்றும்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் என்று பன்முக ஆளுமை கொண்டவர். இயற்பியல்
ஆராய்ச்சிகளிலும், எழுத்து துறையிலும் அதீத ஆர்வம் கொண்டவர். இவரது ஆய்வுகளில்
அண்டவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்பு போன்றவை முக்கிய பங்கு வகித்தன.

உலகில் வாழும் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் என்று கருதப்பட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங்.
அவர் எழுதிய காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் (A Brief History of Time) என்ற நூல் உலகெங்கிலும் கிட்டத்தட்ட பத்து மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.

ஸ்டீபன் ஹாக்கிங் தனது சக இயற்பியலாளரான ரோஜர் பென்ரோஸ் என்பவருடன் சேர்ந்து ,
ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை(Theory of Relativity) குவாண்டம் கோட்பாட்டுடன்(Quantum Theory) இணைத்து , விண்வெளியும் காலமும் பிரபஞ்ச பெருவெடிப்பில்(Big Bang) தொடங்கி கருந்துவாரங்களில்(Black Holes) முடிவடைவதாகப் பரிந்துரைத்தார். கருந்துவாரங்கள் என்பது விண்வெளியில் காணப்படும் விநோதமான, கவர்ச்சிகரமான பொருட்கள் ஆகும். அவை வலுவான புவிஈர்ப்பு விசையைக் கொண்டவை. ஹாக்கிங் , கருந்துவாரங்கள் முழுமையாகக் கருப்பு நிறத்தில் இருப்பதில்லை எனவும் அவை கதிர்வீச்சை வெளியிட்டு இறுதியில் ஆவியாகி மறைந்துவிடும் எனவும் கண்டுபிடித்தார்.

ஸ்டீபன் ஹாக்கிங்கை தாக்கிய நோய்

ஸ்டீபன் ஹாக்கிங்கை ALS (amyotrophic lateral sclerosis) என்ற நரம்பியக்க நோய் தாக்கியது. இது லூ கெஹ்ரிக் நோய்( Lou Gehrig’s Disease) என்றும் பிரபலமாக அறியப்படுகிறது. 1963 ஆம் ஆண்டு அவருக்கு இந்த நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது அபாயகரமான இந்த நோய் கண்டறியப்பட்ட போது அவருக்கு வயது 21 , இன்னும் சில ஆண்டுகள் மட்டும் உயிர் வாழலாம் என்று அவருக்கு மருத்துவர்களால் சொல்லப்பட்டது.

இந்த நோயின் காரணமாக அவர் சக்கர நாற்காலியில் முடங்கும் நிலை ஏற்பட்டது. அவரால்
தனது உடலில் சில விரல்களை மட்டுமே அசைக்க முடிந்தது. தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் தொழில்நுட்பத்தையும் மட்டுமே அவர் நம்பியிருக்க வேண்டிய சூழல் இருந்தது. குளிக்க, உடையணிய, சாப்பிடப் பேசவும் கூட அவர் மற்றவர்களை நம்பியிருக்க வேண்டி இருந்தது.

ஸ்பீச் சிந்தசைசர்(Speech Synthesizer) மூலம் தனது கருத்துக்களைக் கணினி குரலில் அமெரிக்க
உச்சரிப்பில் பேசி வந்தார்.

‘நான் முடிந்தவரை இயல்பான வாழ்க்கையை வாழ முயற்சிக்கிறேன், என் நிலைமையைப் பற்றி
யோசிப்பதில்லை’ என்று தனது வலைத்தளத்தில் எழுதி இருக்கிறார்.

‘நான் அதிர்ஷ்டக்காரன். என் நிலைமை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஒருவர்
நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை என்பதையே இது காட்டுகிறது’ என்று மேலும் அவர்
எழுதியுள்ளார்.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் இல்லற வாழ்க்கை

ஹாக்கிங் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். அவரும் அவரது முதல் மனைவியான
ஜேன் வைல்டை பட்டதாரி மாணவராக இருந்த போது 1995 ஆம் ஆண்டில் திருமணம் செய்து
கொண்டார் . 30 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்த இந்தத் தம்பதி விவாகரத்து செய்து கொண்டனர்.
தனது முன்னாள் செவிலியர்களில் ஒருவரான எலைன் மேசன் என்பவரை மணந்து கொண்டு
ஹாக்கிங் 11 வருடங்களாக வாழ்ந்தார்.

வானியலாளர் மற்றும் இயற்பியலாளர் கலிலியோ கலிலியின் மரணத்தின் 300 வது ஆண்டு
நிறைவு நாளில் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தது ஒரு தற்செயல் நிகழ்வாக மட்டும் அவரது
வாசகர்களால் பார்க்கப்படுவது இல்லை.

‘தி தியரி ஆப் எவ்ரிதிங் (The Theory of Everything)’ என்ற பெயரில் ஸ்டீபன் ஹாக்கிங்கின்
வாழ்க்கை படமாக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் குடும்பம்

ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு மூன்று குழந்தைகளும், மூன்று பேர குழந்தைகளும் இருப்பதாக அவரது
அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஹாக்கிங்கின் குழந்தைகள் லூசி, ராபர்ட் மற்றும் டிம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்
கூறியதாவது “அவர் ஒரு பெரிய விஞ்ஞானி ஆவார். அவர் ஒரு அசாதாரணமான மனிதர் .
அவரது தைரியம், திறமை மற்றும் நகைச்சுவை உணர்வின் மூலம் உலகம் முழுக்க உள்ள
மக்களுக்கு அவர் தொடர்ந்து ஊக்கம் தருவார்.”

தன் நோயுடன் வாழ்நாள் முழுக்க போராடி வென்ற ஒரு அறிவியல் மேதையின் மறைவு
அறிவுலகத்தின் பேரிழப்பு ஆகும்.

Related Articles

UIDAI அறிமுகப்படுத்திய 5 வயதிற்கு உட்பட்... பால் ஆதார் என்றால் ? மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 5 வயதிற...
தன்னுடைய பெயருக்கு பின் ஒட்டு பெயர் வைத்... மருதமலை படம் பார்த்திருக்கிறீர்களா? அந்த படத்தில் வடிவேலு நகைச்சுவை போலீசாக நடித்து இருப்பார். அப்போது அவர் ஸ்டேஷனில் இருக்கும் போது ஒரு பெண் மணக்கோலத...
நண்பர்களோடு பார்க்க வேண்டிய படம்! –... இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் இயக்குனர் கரு பழனியப்பன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நட்பே துணை.மீசைய ...
லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கை எப்படிபட்டது... லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கையைப் பற்றி அலுவலகங்களில் பணிபுரியும் சாமானியர்களான நாம் யாருமே அவ்வளவாக தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. நமக்குத் தெரிந்த...

Be the first to comment on "இயற்கை எய்தினார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்"

Leave a comment

Your email address will not be published.


*