“ஒரு படைப்பாளரின் கதை” இந்த நிகழ்ச்சியை நாம் ஏன் பார்க்க வேண்டும்?

Oru pataippalarin katai

எஸ். ராமகிருஷ்ணன், ஷாலின் மரியா லாரன்ஸ், அருண கிரி, காவிரி மைந்தன், ஓவியர் புகழேந்தி, கரன் கார்க்கி, கவிஞர் மனுஷி, சந்தோஷ் நாராயணன்,  எழுத்தாளர் தமயந்தி, எழுத்தாளர் முகில், ராஜா மணி, பாக்கியம் சங்கர், ஜீவ கரிகாலன், ரமேஷ் ரக்சன், அராத்து, பேராசியர் பா. செல்வகுமார், தமிழ்மகன், பிரபு காளிதாஸ், கவிஞர் வெயில்,  கவிதைக்காரன் இளங்கோ,  கவிஞர் அமிர்தம் சூர்யா, தீபா ஜானகிராமன், பேராசியர் நவீனா,  லக்ஷ்மி சரவணக்குமார், பாஸ்கர் சக்தி, எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி, அறிவியல் ஆர்வலர் ஹாலாஸ்யன், கவிஞர் சக்தி, எழுத்தாளர் ஷாஜி,  எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன்,  எழுத்தாளர் கவின்மலர்,  எழுத்தாளர் தமிழ்நதி, பதிப்பாளர் காயத்ரி, வன்னி மகள் எஸ்கே சஞ்சிகா, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, எழுத்தாளர் கவிதா சொர்ணவல்லி, எழுத்தாளர் ராம் தங்கம், பாஸ்கி, எழுத்தாளர் வெண்பா, எழுத்தாளர் கே.வி. ஜெயஸ்ரீ, மொழிபெயர்ப்பாளர் சுகானா,  எழுத்தாளர் D.I. அரவிந்தன்,  ஆர்ஜே நாகா, கவிஞர் பிருந்தா சாரதி, எழுத்தாளர் சா கந்தசாமி,  இயக்குனர் மாலினி ஜீவரத்தினம்,  எழுத்தாளர் சுரேஷ் மான்யா,  எழுத்தாளர் ஈழவாணி,  முத்தாலங்குறிச்சி காமராசு,  அப்துல் ஜப்பார், கவிஞர் யுகபாரதி,  எழுத்தாளர் நாறும்பூநாதன், சாரு நிவேதிதா, கவிஞர் தெ.சு. கௌதமன், கவிஞர் நர்மி,  எழுத்தாளர் கே என் செந்தில், கவிஞர் கார்த்திக் நேதா,  எழுத்தாளர் கா அரவிந்த் குமார்,  மொழிபெயர்ப்பாளர் லதா அருணாச்சலம், எழுத்தாளர் குட்டி ரேவதி, எழுத்தாளர் உமா பார்வதி,  எழுத்தாளர் சாரா என்று வடசென்னை எழுத்தாளர்கள், ஈழ எழுத்தாளர்கள், தென்தமிழக எழுத்தாளர்கள், மலையாளம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள், ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள், ஓவியர்கள், புகைப்பட கலைஞர்கள், இயக்குனர்கள், என்று பலதரப்பட்ட படைப்பாளிகளை  நேர்காணல் செய்த நிகழ்ச்சி தான் “ஒரு படைப்பாளரின் கதை”.

பெண் எழுத்தாளர்களுக்கு அவர்களுடைய வீட்டில் ஒத்துழைப்பு இருக்கிறதா?  குறிப்பாக பெரிய பெரிய அரசியல் கட்சிகளை பற்றி விமர்சித்து எழுதும் பெண் எழுத்தாளர்களை  அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சொந்த பந்தங்கள் எல்லாம் எப்படி பார்க்கிறார்கள்? வடசென்னை பகுதியில் பிறந்து வளர்ந்து ஐடி துறையில் பணியாற்ற கூடிய பெண்களை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது? ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடிய மொழிப்போர் தியாகிகள் எந்த பகுதியிலிருந்து அதிகம் வந்தார்கள்? கிண்டில் போன்ற மின்நூல் வடிவ புத்தகங்கள் இப்போது வருவதால் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறதா? படைப்புகளில் ஒவ்வொரு காலகட்டத்தின் உடைய நிலப்பரப்பை பதிவு செய்வது எவ்வளவு முக்கியம்? சங்ககால இலக்கியங்களில் பெண்கள் வர்ணிக்கப்பட்ட விதம் பெண்களின் உரிமைகள் பேசப்பட்ட விதம்? ஒரு சிலர் கவிதைகள் கதைகள் படிப்பதைக் காட்டிலும் வரலாற்று தகவல்கள் நிறைந்த கட்டுரைகள் படிப்பதில் ஆர்வம் செலுத்துவது ஏன்? கவிதைகள் கதைகள் நாவல்கள் இவற்றிலிருந்து கட்டுரைகள் முற்றிலும் எப்படி வேறுபட்டு நிற்கிறது? பத்திரிக்கையாளர்கள் இதழாசிரியர்கள் போன்றவர்களின் வாழ்க்கை  எப்படி பட்டது? தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சார்ந்த மருத்துவம் சார்ந்த புனைவுகள் எவ்வளவு வந்து இருக்கிறது அல்லது ஏற்கனவே எழுதிய விஷயங்களைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு வடிவில் எழுதப்பட்ட கொண்டு இருக்கிறதா? மரணம் சார்ந்த படைப்புகள் எப்படிப்பட்ட அனுபவத்தை தருகிறது? சொந்தமாக ஒரு இதழ் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு நாம் என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்? அந்த மாதிரி இதழ்கள் தொடங்கி நடத்துவது இந்த காலகட்டத்தில் சிரமமான காரியமா? இதழ்களுக்கு மக்களிடம் வரவேற்பு இருக்கிறதா? பெரிய பெரிய ஆளுமைகளை நேர்காணல் செய்யும் போது எப்படிப்பட்ட கேள்விகள் கேட்கவேண்டும்? வெறும் கவன ஈர்ப்புக்காக பரபரப்புக்காக கேள்வி கேட்பதற்கும், யாரும் அறியாத தகவல்களை வெளியே கொண்டுவருவதற்காக அறிவார்ந்த கேள்வி கேட்பதற்கும் உள்ள வித்தியாசங்கள்? தமிழ்நாட்டில் உள்ள விவசாய நிலங்களை சிதைப்பதில் மத்திய அரசு இவ்வளவு கவனம் செலுத்துவதன் நோக்கம் என்ன? தமிழ் எழுத்தாளர்களில் எவ்வளவு எழுத்தாளர்கள் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக களத்தில் இறங்கி போராடுகிறார்கள்? மக்கள் ஒன்று சேர்ந்து போராடும் போது அவர்களுக்கு துணை நிற்கிறார்கள்? மக்களுக்கான பிரச்சினைக்காக மக்களுடன் களத்தில் இறங்கி போராடும் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கிய உலகில் அதிகமா? அல்லது மலையாள இலக்கிய உலகில் அதிகமா? தமிழ் இலக்கியங்களைக் காட்டிலும் மலையாள இலக்கியங்கள் அதிகம் கொண்டாடப்படுகிறதா? அதற்கான காரணம் என்ன? இந்த சமூகத்தில் நடக்கும் அத்தனை அராஜகங்களுக்கும் “அன்பு” என்கிற ஒரு விஷயம் ஒரு காரணமாக இருக்கிறதா? நம் தமிழ் சமூகத்தில் எவ்வளவு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சுயசிந்தனை மனிதர்களாக வளரவிட முற்படுகிறார்கள்? திருக்குறள் பைபிள் குரான் போன்ற புத்தகங்கள் ஒரு மனிதனை எவ்வளவு மாற்றுகிறது? புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கை நிலை எப்படிப்பட்டது?  அவர்கள் மீது நடத்தப்படும் உளவியல் போர் எப்படிப்பட்டது? மதம் ஒரு மனிதனை மேம்படுத்துகிறதா அல்லது மிருகம் ஆக்குகிறதா? பெண்களுக்கான சுதந்திரம்  உண்மையாக கிடைத்து விட்டதா? அல்லது அன்பு என்கிற பெயரில் இன்னமும் அவர்களை அடக்கி வைக்கும் அதிகாரம் தான் நடந்து கொண்டிருக்கிறதா? இந்த வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வது எப்படி?  மன உளைச்சல் இல்லாமல் மென்மையாக வாழ்வது எப்படி? என்பதனை நாங்கள் எங்கள் ஆசிரமத்தில் பயிற்சிக்கிறோம் என்று சில குருமார்கள்  மாதம் இவ்வளவு தொகை என்று வாங்கிக் கொண்டு அதை பயிற்று விக்கிறார்கள்.  அப்படி இருக்கும்போது நம் சமூகத்திற்கு கல்வி சாலைகள் இலக்கியங்கள் போதுமான அறிவை தரவில்லையா? உலகில் எந்த எந்த நாட்டினர் புத்தகங்கள் அதிகம் வாசிக்கிறார்கள்? எந்த நாட்டினர் புத்தகங்கள் வாசிப்பதில்லை? பாடல் ஆசிரியர்களாக சினிமா துறையில் சாதிக்க வருபவர்கள் எவ்வளவு மொழி வளமையுடன் இருக்க வேண்டும்? படைப்புகளுக்கு கொடுக்கப்படும் விருது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? விருதுக் குழுவில் அரசியல் நடக்கிறது என்று சொல்கிறார்கள் அது எவ்வளவு உண்மை? பெண்கள் என்பதால் ஈசியாக அவர்களுக்கு ஒரு சில விஷயங்கள் கிடைத்துவிடுகிறதா? குறிப்பாக ஊடக வெளிச்சம் பெண்களுக்கு சுலபமாக கிடைக்கிறது என்பது உண்மையா? விருது கொடுக்கப்படுவதில் அரசியல் இருக்கிறது என்பது பெருபாலும் தமிழகத்தில் இந்தியாவில் மட்டும் நடக்கிறதா?  அல்லது உலகின் புகழ் பெற்ற விருதுகள் கொடுக்கப்படுவதில் கூட அரசியல் நடக்கிறதா? ஓரினச்சேர்க்கை என்பது மேலை நாட்டு கலாச்சாரமா இல்லை அது இந்தியாவில் ஆதி காலம் முதல் இருந்து நடந்து கொண்டு இருக்கும் ஒரு விஷயமா? இன்றைய தலைமுறையில் ஓரினச்சேர்க்கையை விரும்பும்  இளைஞர்களை இளைஞிகளை பெற்றோர்கள் எப்படி பார்க்க வேண்டும்? முற்போக்கான கருத்துகளை  பேசும் கலைஞர்களும் அவர்களின் படைப்புகளும் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறதா?  திருமணத்தை விட லிவிங் டுகதர் நல்லதா? வங்கிகள் ஏழைகளுக்கு ஒரு முகமும் பணக்காரர்களுக்கு ஒரு முகமும் காட்டுகிறதா? விவசாய கடன் தள்ளுபடி  எந்த அளவுக்கு இந்த நாட்டிற்கு நன்மை தந்திருக்கிறது? போன்ற பலதரப்பட்ட விஷயங்களை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை எல்லாம்  இந்த நிகழ்ச்சியில் இந்த  மனிதர்கள் உரையாடி இருக்கிறார்கள். 

பொதுவாக சினிமா நடிகர்கள், நடிகைகளை இயக்குனர்களை டிவி பிரபலங்களை பேட்டி எடுப்பது என்பதில் அவ்வளவு சிரமம் இருக்காது. அவர்களைப் பற்றிய தகவல்களை எளிதில் சேகரித்து விடலாம், அல்லது பெரும்பான்மை மக்கள் என்ன மாதிரியான கேள்விகள் அந்த பிரபலங்களிடம் கேட்க விரும்புவார்கள் என்பதை தெரிந்து கொண்டால் போதும், அவர்களிடம் சுலபமாக ஒரு நேர்காணலை நடத்தி முடித்து விடலாம். ஆனால் எழுத்தாளர்களிடம் நேர்காணல் செய்கிறது என்பது முற்றிலும் வேறுபட்டது. 

எழுத்தாளர்களை நேர்காணல் செய்வது என்பது அவ்வளவு சாதாரண காரியமில்லை. ஒவ்வொரு எழுத்தாளரையும் நேர்காணல் செய்வதற்கு முன் அவருடைய புத்தகங்களை படித்து அதை நன்கு உள்வாங்கிக் கொண்டு நுண்ணறிவுடன் கேள்விகளை கேட்க வேண்டும்.  அப்படிப்பட்ட நுண்ணறிவு இருந்தால் மட்டுமே இது போன்ற தமிழ் படைப்புலகின் மிக முக்கியமான நபர்களிடம்  நேர்காணல் செய்ய முடியும். அப்படி அவர் எடுத்த இந்த நேர்காணல்களில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள்  எல்லாம் மிகுந்த பொறுப்புணர்வுடன் சமூக அக்கறையுடன் எளிய மக்களுக்கு  சுலபமாக சென்றடையும் வகையில் கேட்கப்பட்ட கேள்விகள். அதுவும் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களை ஒரு வருட காலத்திற்குள் நேர்காணல் செய்தது உண்மையிலேயே  வியக்கத்தக்க ஒன்றுதான். ஆனால் அந்த நிகழ்ச்சியை பார்த்த பலர் நிகழ்ச்சி தொகுப்பாளர் எப்படிப்பட்ட கேள்விகளை கேட்கிறார், எப்படிப்பட்ட பதில்களை  படைப்பாளிகளிடம் இருந்து வெளியே கொண்டு வருகிறார்  என்பதை கவனிக்காமல்  அவர் ஆங்கரிங் செய்யும் விதம் சரியில்லை, படைப்பாளர்களிடம்  காரசாரமான கேள்விகளை கேட்க தெரியவில்லை, அவர் பேசும் தொனி சரியில்லை என்று கமெண்ட் செய்கின்றனர். ஒரு நேர்காணல் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ன மாதிரியான தகவல்களை படைப்பாளிகளிடமிருந்து வெளியே கொண்டு வருகிறார் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்களுக்கு இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பிடிக்கும்.  அதை விட்டுவிட்டு  நேர்காணல் நேர்காணல்களாக இல்லாமல் விவாதமாக மாறக்கூடிய பரபரப்பான நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு  இந்த நிகழ்ச்சிகள் முற்றிலும் ஒத்து வராது, அவர்கள் இந்த பக்கம் வராமல் இருப்பதே நல்லது. 

இவற்றில் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் சாருநிவேதிதா, யுக பாரதி இவர்களுடைய நேர்காணலை தவிர மற்றவர்களின் அனைத்து நேர்காணல்களும் ஆயிரம் பார்வைகள் கூட தாண்டவில்லை என்பதை பார்க்கும் போது அதிர்ச்சியாகவும் அச்சமாகவும் இருக்கிறது. இத்தனைக்கும் அந்த நிகழ்ச்சியில் சாகித்ய அகாடமி விருது வென்றவர்கள், யுவ புரஸ்கார் விருது வென்றவர்கள் பேசியிருக்கிறார்கள். அவர்களின் நேர்காணல்கள் ஐநூறு பார்வைகளை கூட தாண்டாமல் இருக்கிறது. இந்த மாதிரி வீடியோக்களை பார்க்கும் போதுதான் தமிழ் இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது? மக்கள் இலக்கியங்களை எவ்வளவு  கவனிக்கிறார்கள் என்பதும் புரிய வருகிறது. தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் புத்தக வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை ஒரு முறையாவது பார்க்க வேண்டும். இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமில்ல,  இந்த சமூகத்திற்கு எந்த விதத்திலாவது நாம் நல்ல தொண்டு ஆற்ற வேண்டும் என்று சமூக சேவை செய்ய விரும்பும் இளைஞர்கள் இளைஞிகள் இந்த நிகழ்ச்சிகளை கண்டிப்பாக பார்க்கலாம். 

முக்கியமான குறிப்பு: இங்கே பேசப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியைப் பற்றிய வரிகள், நிகழ்ச்சிக்கான விளம்பரமோ அல்லது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த மனிதர்களின்  ஆதரவாளர்களால் தூண்டப்பட்டு எழுதப்பட்ட வரிகளோ கிடையாது, இந்த நிகழ்ச்சியில் நிறைய நல்ல விஷயங்கள் பேசி இருக்கிறார்கள். நல்ல விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரே எண்ணத்துடன் எழுதப்பட்டவை. இது போன்ற நிகழ்ச்சிகளை பலரும் கூட செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் கேள்விகள் இந்தளவுக்கு தரமானதாக இல்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம். இந்த நிகழ்ச்சிகள் எங்கு இருக்கிறது என்பதை நீங்களே தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். 

Related Articles

“வீடுகள் பெருகுகிறதே தவிர காடுகள் ... ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ம் தேதி உலக காடுகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் வீடுகள் வளர்கிறதே தவிர காடுகள் வளர்ந்த பாடில்லை. காடுகள் தினம் ...
சுட்டுப் பிடிக்க உத்தரவு – விமர்சன... தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் அட்டகாசமான படத்தை தந்தவர் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா. அதை தொடர்ந்து ஜீவா மற்றும் ஹன்சிகாவை வைத்து போக்கிரி ராஜ...
சூர்யாவின் “அகரம் அறக்கட்டளை”... கடந்த 2017 ஆம்  ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த  சர்ச்சைகள் விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வருட...
தமிழ் சீரியல்களில் மாமியார் கொடுமைகள்!... பரபரப்பான சீரியல்களை ஒளிபரப்புவதில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய நான்கு சேனல்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சீரியல்கள் எ...

Be the first to comment on "“ஒரு படைப்பாளரின் கதை” இந்த நிகழ்ச்சியை நாம் ஏன் பார்க்க வேண்டும்?"

Leave a comment

Your email address will not be published.


*