“நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி” – ரஜினி இமயமலை பயணம் குறித்து நெட்டிசன்கள்!

Rajini in Himalayas

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட படம் சிவாஜி. அதில்
அனைத்தையும் ரஜினி இழந்த பிறகு நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி என்று
அவரை பார்த்து விவேக் வசனம் கூறுவார். இப்போது அந்த வசனத்தை ரஜினியின் தற்போதைய
இமயமலை பயணத்துடன் இணைத்து பேசுகின்றனர் நெட்டிசன்கள்.

ஆன்மீக பயணம்

ரஜினி இமயமலை செல்வது வழக்கமான செயல். தற்போது பத்து ஆண்டுகள் கழித்து இமயமலை
சென்றுள்ளார். இமயமலை பயணம் தொடங்குவதற்கு முன் பத்திரிக்கையாளர்கள் அவரை
சந்தித்து, நாட்டில் நிலவும் தொடர் வன்முறை குறித்து கேள்வியெழுப்பினர். அதற்கு பதில் அளிக்க
விரும்பாத ரஜினி, நன்றி வணக்கம் என்று சொல்லிவிட்டு விடைபெற்றார். அவர் சொன்ன நன்றி
வணக்கம் என்ற சொற்களை வைத்தே பல மீம்ஸ்களும் பறந்தது. ஒரு கேள்விக்கு பதில் சொல்ல
திராணியில்லாமல் முதுகை காட்டிச்செல்கிறார் ரஜினி என்று வசைபாடினர். தற்போது
இமயமலையில் குதிரை சவாரி செய்த புகைப்படம் வெளிவர அதையும் வைத்து கலாய்த்து
தள்ளுகிறார்கள்.

அடுத்தடுத்த அடி

வாடகை கொடுக்க வேண்டிய ஆறு கோடி தொகையை லதா ரஜினிகாந்த் செலுத்த வேண்டும்
என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கட்சி தொடங்குவதற்கு முன்பே பண விஷியத்தில் நெகட்டிவாக
இருக்கிறது ரஜினி பக்கம். இவர் தலைமையேற்றால் இவருக்கு கீழே இருப்பவர்கள் எவ்வளவு
சுருட்டுவார்கள் என்று சிந்தியுங்கள் மக்களே என்று கருத்து பரப்பி வருகின்றனர் சிலர். தற்போது
கமலும் ரஜினி மீதான விமர்சனத்தை தொடுத்துள்ளார். காவிரி விவகாரம் மட்டுமல்ல பல
விஷியத்தில் ரஜினி மௌனம் கடைபிடிக்கிறார் என்றார் கமல். இது மறுக்க முடியாத உண்மை
என்பது ‘போர் வரட்டும் ‘டெம்பிளேட் மீம்ஸ்களைப் பார்த்தால் புரியும்.

மெர்சலிடம் காலா தோல்வி

கடந்த சில தினங்களுக்கு முன்பு காலா டீசர் ரிலீசானது. ரஜினி என்ற உச்சகட்ட நட்சத்திரம்
இதில் இருப்பதால் பாகுபலி, மெர்சல் செய்த யூடுப் சாதனையை முறியடிக்கும் என்று
எதிர்பார்த்தனர். ஆனால் மெர்சல் செய்த சாதனையை காலாவில் முறியடிக்க முடியவில்லை. இது
சினிமாவில் அவரது சறுக்கலை காட்டுவதாகவே தெரிகிறது.

சீமான் மோதல்

இன்று தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான போராட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் பங்கு
பெரிதாக இருக்கிறது. அப்படிப்பட்ட கட்சியை கொண்ட சீமானோ ரஜினிக்கு முதல்
முட்டுக்கட்டையாக இருக்கிறார். ரஜினி தமிழர் இல்லை என்பதே அவர் ரஜினியின் அரசியல்
வருகையை வெறுப்பதற்கான முதல் காரணம். ரஜினி தமிழர் தான் என்பதை வெ.இறையன்பு
அவர்களின் கேள்வியும் நானே பதிலும் நானே புத்தகத்தில் இருக்கும் , தமிழ்நாட்டில் பிறந்திருக்கா விட்டாலும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்காவிட்டாலும் தமிழ்ப் பெயரை தாங்கி இருக்காவிட்டாலும் தமிழ் மண்ணையும் தமிழ் மொழியையும் நேசிக்கிறவர்களும் நம் இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்கிறவர்களும் நம் மக்களுக்காக வியர்வை சிந்துபுவர்களும் உலக அரங்கில் நம் அடையாளங்களை உயர்த்திப் பிடிப்பவர்களும் தமிழர்களாகவே கருதப்பட வேண்டும்’ என்ற வரிகளை வைத்து பார்த்தால் ரஜினி தமிழரே.

அதென்ன ஆன்மீக அரசியல்?

இதற்கும் அதே புத்தகத்தில் இருக்கும் சில வரிகளை இணைத்துப் பார்த்தால் விடை கிடைக்கும். ”
ஆன்மீகம் என்பது சடங்குகளில் இல்லை. சாமான்யர்களிடம் அன்பு செலுத்துவதில் இருக்கிறது.
வழிபடுவதில் இல்லை. தடுமாறுபவர்களுக்கு வழிகாட்டுவதில் இருக்கிறது. காயப்படுகிற
மனிதர்களை மட்டுமல்ல விந்தி நடக்கிற விலங்குகளுக்கும் பரிவு காட்டுகிறவனே உண்மையான
ஆன்மீகவாதி ” என்ற வரிகள் ஆன்மீகம் என்றால் என்ன என்பதற்கு தெளிவாக பதிலளிக்கிறது.
இதன்படி பார்த்தால் ரஜினியின் ஆன்மீக அரசியல் மக்களுக்கு ஏற்றதே.

இப்படி நல்லது செய்ய வேண்டுமென்று நினைத்தாலும் சிலர் வேண்டுமென்றே
முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்பதை சிவாஜி படத்தின் ” நீ பேசாம அமெரிக்காவுக்கே
போயிடு சிவாஜி ” என்ற வசனத்துடன் இணைத்து பேசுகிறார்கள் சிலர். இவர்கள் இப்படியிருக்க
கமல் வழக்கம்போல முன்னோடியாக செயல்பட தொடங்கிவிட்டார்.

ரஜினி இமயமலை சென்றால் கமல் பெரியார் வீட்டுக்குச் சென்று வருகிறார். முதலில் இறங்கி
முன்னோடியாக விளங்குவது கமல் ஸ்டைல் என்றால் லேட்டாக வந்தாலும் லேட்டாக வருவது
ரஜினி ஸ்டைல். ஆனால் இந்த லேட் அரசியலுக்கு செட் ஆகுமா என்பது கேள்விக்குறியே.

Related Articles

இந்தப் படத்துக்கா இவ்வளவு பில்டப்பு R... தெலுங்குக்கு எப்படி பாகுபலியோ கன்னட திரை உலகுக்கு கேஜிஎஃப் அப்படி! என்று ஏகப்பட்ட பில்டப் இந்தப் படத்துக்கு. பில்டப்புக்கு தகுந்தாற் போல படம் இருக்கிற...
பிரபஞ்சன் பார்வையில் கல்வி நிலையங்களும் ... எழுத்தாளர் பிரபஞ்சன் புதிய தலைமுறையில் எழுதிய தொடர் மயிலிறகு குட்டி போட்டது என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. கல்வி நிலையங்கள் மற்றும் ஆசிரியர்கள...
” வேகம் மட்டும் போதாது, விவேகம் வே... சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறது என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தது. சிஎஸ்கே ரசிகர்கள்...
காக்கா குஞ்சுகளை காட்டிய முதல் தமிழ் சின... இயக்குனர் ராமின் நான்காம் படைப்பு, நடிகர் மம்முட்டி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் களம் இறங்கும் படம், இந்தப் படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு ...

Be the first to comment on "“நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி” – ரஜினி இமயமலை பயணம் குறித்து நெட்டிசன்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*