கடந்த டிசம்பர் மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார் ரஜினி. அதைத் தொடர்ந்து அவருக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
அன்று முதலே அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். மன்ற நிர்வாகிகள் யார், யார் யாருக்கு என்ன என்ன பொறுப்புகள், என்ன பதவிகள், உறுப்பினர்களை எப்படி சேர்க்க வேண்டும் என்பதை எல்லாம் மிகத் தெளிவாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார் ரஜினி.
சமீபத்தில் கூட உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் பற்றிய விதிமுறைகள் கையேடு ஒன்று வெளியிடப் பட்டிருக்கிறது.
- குற்ற வழக்குகளில் இருப்பவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.
- சாதி, மத இயக்கங்களில் உள்ளவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.
- கட்சி உறுப்பினர்கள் பிளாஸ்டிக் கொடியை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
போன்ற சில வரவேற்கத் தக்க விதிமுறைகள் கொண்ட கையேடு வெளியிடப்பட்டு உள்ளதை தொடர்ந்து தற்போது கட்சி தொடங்கும் அறிவிப்பு தேதியும் வெளியிடப்பட்டு உள்ளதால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
Be the first to comment on "செப்டம்பர் 2-ஆவது வாரத்தில் ரஜினி கட்சி தொடங்குகிறார்!"