மக்கள் நல இயக்கம் தொடங்கிய புரட்சித் தளபதி விஷாலுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது.?

Actor Vishal

(ஆகஸ்டு 29, 2018) இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டமும், விஷாலின் பிறந்தநாளும் ஒன்றாகக் கொண்டாடப்பட்டது. இது ஒருபுறமிருக்க யாரும் எதிர்பார்க்க வண்ணம் அவர் புதிய இயக்கம் ஒன்று தொடங்கியிருப்பது அனைவருக்கும் வியப்பை உண்டாக்கியது. அவர் தொடங்கிய மக்கள் நல இயக்கத்துக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தாலும் ரசிகர்கள் வாழ்த்தினார்களா? வரவேற்கிறார்களா? என்பது தான் கவனிக்கப்பட வேண்டியவை. சினிமா ரசிகர்கள் என்ன தான் சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

சமூக வலைத் தளங்களில் ரசிகர்கள் யாரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக பதிவுகள் இல்லை. மாறாக அவரை சகட்டுமேனிக்கு கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள். அவற்றில் சில பதிவுகளை இங்கு பார்ப்போம்.

  1. இவன் வேற என்ன ரொம்ப டார்ச்சர் பண்றான் டா!
  • புலி எடுத்தா பாயும் புலி எடுக்கிறான்!
  • கத்தி எடுத்தா கத்தி சண்டை எடுக்கிறான்!
  • இப்போ விஜய் மாமா இயக்கத்துக்கு எதிரா மக்கள் நல இயக்கம்னு ஆரம்பிக்கிறான்!

முறையே இளைய தளபதி vs புரட்சி தளபதி

  1. அரசியல்வாதிகள் சரியாக பணியாற்றினால் நாங்கள் ஏன் அரசியலுக்கு வரப் போகிறோம் – விஷால்
  • நீங்க ஒழுங்க நடிச்சா நாங்க ஏன் தமிழ்ராக்கர்ஸ்ல படம் பார்க்க போறோம் – மக்கள்
  1. என்னிடம் கார் மட்டுமே உள்ளது, சொந்தமாக வீடு கூட கிடையாது. – விஷால்
  • ஓ நீயும் ஏழைத்தாயின் மகன் தானா
  • வீதியில் நடப்பதை பாத்துட்டு சும்மா இருக்க முடியாது – விஷால்..
  1. நீ பண்ணுற இந்த கருமத்தை எல்லாம் நாங்களும் பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது…!
  2. கல் தோன்றி மண் தோன்றா……மூத்தக்குடி தமிழ் குடினு பீத்திகிட்டு கடைசி வரை அடிமையாகவே வாழும் இந்த மக்களை என்ன செய்வது?  தம்மை ஆள தன் இனத்தில் ஒரு ஆண்/பெண் கூடவா இல்லை? இந்த மக்கள் இன்னும் எத்தனை வருடங்கள் இந்த திராவிட, சினிமா மாயைக்கு அடிமையாக இருப்பார்கள்  ?
  3. சொல்வதெல்லாம் உண்மை, உணமையைத் தவிர வேறில்லை ஆனால் தமிழ்நாட்டை எட்டுக்கோடி தமிழர்கள் பார்த்துக் கொள்வார்கள்.  நீ வந்த வேலையைப் பார் அல்லது உங்க ஊருக்குப் போய் அரசியல் பண்ணு என்று தமிழர்கள் இந்த தெலுங்கனுக்கு கூறவேண்டும்.

இப்படி பலதரப்பட்ட கருத்துக்கள் குவிந்து வருகிறது.

ஏன் எதிர்ப்புகள்?

இளைஞர் அரசியலுக்கு வர வேண்டும், இளைஞர் அரசியலுக்கு வர வேண்டும் என்று அனைவரும் கூறித் திரிகிறார்கள். ஆனால் இளைஞர் ஒருவர் அரசியலுக்கு வந்தால் அவரை இந்த உலகம் என்ன சொல்கிறது? அவரிடம் என்ன எதிர்பார்க்கிறது? என்பதை எல்லாம் விஷால் விஷியத்தில் நாம் தெளிவாக காணலாம்.

எங்கே விஷாலால் நல்லது நடந்துவிடுமோ என்றும் தெலுங்கன் இவன் எப்படி தமிழகத்தில் அரசியல் பயணம் தொடங்கலாம் என்று என்னென்ன காரணங்கள் கூற முடியுமோ அத்தனையும் முன் நிறுத்தி அவரை பலரும் எதிர்த்து வருகிறார்கள்.

 

Related Articles

அம்மா பிறந்தநாளை முன்னிட்டு அரவக்குறிச்ச... கடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று தமிழகமெங்கும் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு அரவக்குறிச்சி...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தி... மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அடிக்கல...
நேர்மை என்பது ஒருவகை நோய்! – எவனோ... இயக்குனர் நிஷிகாந்த் இயக்கத்தில் மாதவன், சங்கீதா மற்றும் சீமான் நடிப்பில் உருவான படம் எவனோ ஒருவன். மராத்தியில் வெளியான டோம்பிவிலி பாஸ்ட் என்ற படத்தின்...
சுருதி டிவி – தினமும் அரை மணி நேரம... தமிழில் இன்று  ஆயிரக்கணக்கான யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. ஆனால் அத்தனை யூடியூப் சேனல்களில் பெரும்பாலான சேனல்கள் ஏற்கனவே தெரிந்த விஷயங்களை பலபேர் போட...

Be the first to comment on "மக்கள் நல இயக்கம் தொடங்கிய புரட்சித் தளபதி விஷாலுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது.?"

Leave a comment

Your email address will not be published.


*