உங்களுக்கு விருப்பமான ஐபிஎல் வீரர்களை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்

ipl

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் கிரிக்கெட் விரும்பிகளுக்குக் கொண்டாட்டம் தான். குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் போட்டிகளுக்கு இந்தியர்களின் நடுவே ஏகோபித்த ஆதரவு எப்போதும் உண்டு. அதைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய அறிவிப்புகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் 2018ல் விளையாடவிருக்கும் வீரர்களை, ரசிகர்களே தேர்ந்தெடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாட்டை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டார் இந்தியா மேற்கொண்டுள்ளது.

ரசிகர்களுக்கான பரிசு

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளைக் காண இருக்கும் ரசிகர்களுக்கான பரிசாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 700 மில்லியன் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை கண்டு கழிப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் பங்கு பெறலாம். 50 வீரர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் இருந்து ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான வீரர்களைத் தேர்வு செய்ய வாக்குகள் செலுத்தலாம். 50 வீரர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் 30 நட்சத்திர வீரர்களும், 20 புது முகங்களும் அடங்குவர். இந்த அறிவிப்புக்கு ‘எலக்ஷன் சே செலக்ஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

வீரேந்திர சேவாக் வரவேற்பு

ஸ்டார் இந்தியாவின் இந்த அறிவிப்பை முன்னாள் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் வீரேந்திர சேவாக் வரவேற்றுள்ளார். ‘இது ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகச் சிறந்த வாய்ப்பு. ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான வீரரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஐபிஎல் 2018ல் நீங்கள் காண விரும்பும் வீரரை இதன் மூலம் தேர்ந்தெடுங்கள்’ என்று ரசிகர்களுக்கு வீரேந்திர சேவாக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐபிஎல் 2018 போட்டிகள் பத்து சேனல்களில், ஆறு மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றன. அவை முறையே தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் முதன்முறையாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றன.

தங்கள் அணிக்கே திரும்பும் வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியையும், சுரேஷ் ரைனாவையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதன் தலைவர் வீராட் கோலியைத் தக்கவைத்திருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி அதன் தலைவர் ரோஹித் சர்மாவை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தேர்ந்தெடுத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குத் திரும்புகிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் கவுதம் கம்பீர் இன்னும் ஏல பட்டியலில் இருக்கிறார்.

இவர்களாவது வாக்களித்தவர்களுக்கு நல்லது செய்கிறார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Related Articles

ரிங்டோன்களாக இருந்த தனி ஒருவன் வசனங்கள்!... * "உன் எதிரி யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்"* " டேய் செங்கலு... உன் பொண்டாட்டிக்கு பிரசவ வலி வந்துடுச்சி ஆஸ்பத்திரிக்கு போவனும் இறங்கி வ...
ரகசிய ஆவணங்களைக் கசியவிட்ட இந்திய விமானப... இந்திய விமானப்படையின் ரகசியங்களைக் கசிய விட்ட குற்றத்திற்காக இந்திய விமானப்படையில் குழு கேப்டனாக பணியாற்றி வரும் அருண் மர்வாஹா என்பவர் கைது செய்யப்பட்...
நீ வாழ்றதுக்காகப் பிறந்தவன் நான் வாழவைக்... ராகவா லாரன்ஸ் பேய்க்கு பயந்தாங் கோழியாக இருக்கிறார். ஒரு இடத்திற்கு செல்கிறார். அங்கிருந்து பேய் அவரை பின்தொடர்கிறது. ஒரு கட்டத்தில் பேய் அவர் மீது ஏற...
மே 3 – உலக பத்திரிக்கை சுதந்திர தி... உலக பத்திரிக்கை சுதந்திர தினம் ஏன்?மனித உரிமைகள் சாசனம் பகுதி பத்தொன்பதில் உள்ள பேச்சு உரிமை மற்றும் கருத்து உரிமை ஆகியவற்றை நினைவூட்ட 1993 ம் ஆண்...

Be the first to comment on "உங்களுக்கு விருப்பமான ஐபிஎல் வீரர்களை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்"

Leave a comment

Your email address will not be published.


*