அர்ஜூன் ரெட்டியை ஓரங்கட்டிய எனை நோக்கி பாயும் தோட்டா! – ENPT விமர்சனம்!

Enai Noki Paayum Thota movie review

தயாரிப்பு : எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் & ஒன்றாக எண்டர்டெயின்மென்ட்

ரிலீஸ் : வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல் ஐசரி கணேஷ்

எழுத்து இயக்கம் : கௌதம் வாசுதேவ் மேனன்

இசை : தர்புகா சிவா

ஒளிப்பதிவு : ஜோமன் டி ஜான், மனோஜ் பரமஹம்சா

எடிட்டிங் : பிரவீன் ஆண்டனி

நடிகர் நடிகைகள் : தனுஷ், மேகா ஆகாஷ், சசி குமார், சுனைனா, வேல ராமமூர்த்தி, 

தனுஷ், கௌதம் வாசுதேவ் மேனன் என்றதும் கல்லூரி மாணவர்களிடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது பல வருடங்களாக. மறுவார்த்தை பேசாதே என்ற பாடல் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்தது. யார் அந்த மியூசிக் டைரக்டர் மிஸ்டர் எக்ஸ்??? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருக்க சில மாதங்களுக்கு முன்பு தர்புகா சிவா தான் அந்த இசையமைப்பாளர் என்ற பதில் கிடைத்தது. எல்லா சஸ்பென்ஸையும் படக்குழு உடைத்துவிட்டது படம் சீக்கிரம் ரிலீஸ் ஆகிடும் போல என்று நினைத்தவர்களுக்கு இவ்வளவு நாட்களாக ஏமாற்றமே மிஞ்சியது. ஐசரி கணேஷ் என்ற மனிதர் இல்லையென்றால் இந்தப் படம் ரிலீசாக இன்னும் பல யுகங்கள் கூட ஆகி இருக்கலாம். இப்படி பல தடங்கல்கள் என்பதாலோ என்னவோ ஓப்பனிங் சுமாராகவே அமைந்துள்ளது. அசுரன் படத்தின் வெற்றி எந்த விதத்திலும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு உதவவில்லை என்பதே உண்மை. 

கௌதம் வாசுதேவ் மேனன் படம் என்றாலே நாயகிகள் கூடுதல் அழகாக தெரிவார்கள். மேகா ஆகாஷ் மனதை கொள்ளை கொள்கிறார் அவ்வளவு அழகு. தனுஷ் உடனான கெமிஸ்ட்ரி நன்றாகவே பொருந்தி உள்ளது. வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற படங்கள் இல்லாமல் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்தால் நல்ல எதிர்காலம் உண்டு. முதல் படத்திலயே நடிப்பு அசுரன் தனுஷ்க்கு இணையாக நடிப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷியம் இல்லை மேகா ஆகாஷ். வாழ்த்துக்கள்! வேல ராம மூர்த்தி, சசி குமார் போன்ற இதர நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்கள். வழக்கமான கௌதம் படம் போல இந்தப் படத்திலும் ஓத்தா, மயிரு போன்ற வார்த்தைகள் வருகின்றன. வழக்கம் போல கெட்டவார்த்தைகளின் போது கரகோசங்களும் எழுகின்றன. சண்டைக் காட்சிகள் செம. அனல் பறக்கிறது. என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற தலைப்பிற்கான அறிமுக காட்சியும் சண்டைக் காட்சியும் செம.    

தனுஷ் நடிப்பு பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. வழக்கம்போல சிறப்பாகவே நடித்துள்ளார். குறிப்பாக ஆக்சன் காட்சி ரொமான்ஸ் காட்சி இரண்டிலும் தனக்குத் தானே போட்டி போட்டு நடித்துள்ளார். அர்ஜூன் ரெட்டி, கபீர் சிங், ஆதித்ய வர்மா எல்லாம் நம்ம ENPT ரகுவிடம் தோற்றுப் போகிறார்கள்! குறிப்பாக கிஸ் சீன்களில் தனுஷ் அதிக ரசிகைகளை பெறுகிறார் தனுஷ். ஆம் கிஸ் சீன்களின் போது ரசிகைகள் கரகோசம் எழுப்புகின்றனர்.  இசையமைப்பாளர் தர்புகா சிவா படத்தின் இன்னொரு நாயகன் என்று கூட சொல்லலாம். பாடல்கள் அனைத்தும் செம. பின்னணி இசையும் பக்கா. குறிப்பாக சண்டைக் காட்சிகளின் போது ஒலிக்கும் பின்னணி இசை செம. பாடலாசிரியர் தாமரை வழக்கம்போல தன்னுடைய ஆஸ்தான இயக்குனருக்கு அருமையான பாடல் வரிகளை எழுதி தந்துள்ளார். கார்கியின் வரிகளும் சூப்பர். 

அடுத்ததாக பாராட்டப்பட வேண்டியவர் உடை வடிவமைப்பாளர். தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் இருவரையும் செம ஸ்டைலிசாக காட்டி உள்ளார் உடை வடிவமைப்பாளர். குறிப்பாக வெள்ளை சட்டையில் தனுஷ் மிக அழகாக இருக்கிறார். மேக்கப்மேன்கள் நன்றாகவே உழைத்துள்ளார்கள். ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் பிரம்மாதமாகவும் ஒரு சில இடங்களில் அமெச்சூர்டாகவும் இருக்கிறது. இருள் சூழ்ந்த காட்சிகளில் இன்னும் கொஞ்சம் நன்றாக ஒளிப்பதிவு செய்திருக்கலாம். எடிட்டிங் படத்தை ஓரளவுக்கு காப்பாற்றி உள்ளது. பாடல் காட்சிகளில் பாடல் வரிகளுக்கேற்ற காட்சிகளை கோர்த்திருக்கலாம்… பாடல் வரிகளும் காட்சிகளும் சம்பந்தம் இல்லாதது போல் ஓடுகிறது. டப்பிங்கிலும் லேசான சொதப்பல்கள் உள்ளது. வாய்ஸ் ஓவரிலயே படத்தை நகர்த்தி சென்றிருக்கிறார்கள், தவிர்த்திருக்கலாம்… அச்சம் என்பது மடைமையடா படத்தில் செய்தது போலவே இந்தப் படத்திலும் கன்டினியூட்டி மிஸ்ஸிங் சொதப்பல்களை செய்தூள்ளனர். 

” ரோஸ் மில்க்கும் அவளும்… ” , ” பொண்ணுங்க ஒரு ஸ்டெப் எடுத்து வச்சா தான் பசங்க 3 ஸ்ட்டாப்பாவது எடுத்து வைக்க முடியும்… ” , ” அழகான பொண்ணு அப்டின்லாம் தேடி போனது இல்ல… இப்ப உன் மொகத்த தாண்டி யோசிக்க முடியல.., “, ” அடி வாங்கனதும் அன்னிக்குத் தான் மொத நாளு… திருப்பி அடிச்சதும் அன்னிக்குத் தான் மொத நாளு… “, ” நான் கேவலமானவன் இல்ல… நல்லவன்… “, ” பிஎச்டி பண்ணு என்ன பத்தி… “, ” எனக்கு பிடிக்கவே பிடிக்காத ஊரு மும்பை… ” ம்போன்ற வசனங்கள் செம. 

எல்லாம் சரியாக கூடி வந்திருந்தால் கௌதம் வாசுதேவ் மேனனால் தனுஷை வைத்து இன்னும் கூட சிறப்பான படத்தை எடுத்திருக்க முடியும். சூப்பர்ஹிட் மூவியாக வரவேண்டிய படம் இப்போது ஓகே ரகம் படமாக மாறி உள்ளது வருந்த தக்கது. இரண்டாம் பாதியில் கவனம் செலுத்துங்கள் கௌதம். உங்களுடைய சமீபத்திய படங்களில் படுசொதப்பலாக இருப்பது இரண்டாம் பாதி தான். மற்றபடி படம் ஓகே! 

கௌதம் வாசுதேவ் மேனன் & ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியை ரொம்பவே மிஸ் செய்கிறோம்… சீக்கிரம் மீண்டு வாருங்கள் கௌதம் வாசுதேவ் மேனன். மீண்டும் கமல், சூர்யா, தனுஷ் போன்ற நடிக்கத் தெரிந்த நடிகர்களுடன் இணைந்து பழைய படி மாஸ் காட்டுங்கள்… என்றே சொல்லத் தோன்றுகிறது. நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற பாரதியின் வரிகளை GVM குரலில் கேட்க நன்றாக இருக்கிறது! துப்பறியும் ஆனந்தன் படம் தான் ENPT யா… அப்படி இல்லையென்றால் துப்பறியும் ஆனந்தன் படத்திற்காக மரண வெயிட்டிங் ஜிவிஎம். 

Related Articles

“அறம் நீ பழகு! அதுதான் அழகு!”... மெட்ரோ எனும் அருமையான படத்தை தந்த இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனின் இரண்டாவது படம் "கோடியில் ஒருவன்". ஒரு இயக்குனருக்கு இரண்டாவது படம் தான் மிக முக்கியமான ப...
பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய த... பிள்ளை வளர்ப்பு என்பதைப் பற்றி இன்னமும் சில பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. அதை எதோ ஒரு தொந்தரவுக்கு உரிய செயலாகவே பார்க்கின்றனர். அப்படிபட்ட பெற்றோர்கள்...
இன்ஜினியரிங் படிப்பிற்கும் பொது நுழைவுத்... மே, ஜூன், ஜூலை இந்த மூன்று மாதங்களில் ரிசல்ட், தற்கொலை, நீட், கவுன்சிலிங், ஆன்லைன் கவுன்சிலிங் சரிவரவில்லை போன்ற வார்த்தைகள் தான் அடிபட்டுக் கொண்டிருக...
புதிய வாக்காளர் அடையாள அட்டைகளில் ஏகப்பட... ஆதார் கார்டு, ஸ்மார்ட் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என்று அரசு வழங்கும் அனைத்து ஆவணங்களிலும் ஏகப்பட்ட பிழைகள். தேர்தல் நேரம் நெருங்கிவிட்டதால்...

Be the first to comment on "அர்ஜூன் ரெட்டியை ஓரங்கட்டிய எனை நோக்கி பாயும் தோட்டா! – ENPT விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*