” உண்மைக்கு என்ன விலை வேணாலும் கொடுக்கலாம்!” – அடுத்த சாட்டை விமர்சனம் !

Adutha Saattai movie review

தயாரிப்பு : நாடோடிகள் பிக்சர்ஸ் 

தயாரிப்பாளர்கள் : Dr. பிரபு திலக், பி. சமுத்திரக்கனி 

எழுத்து இயக்கம் : எம் அன்பழகன்

ஒளிப்பதிவு : அ. ராசாமதி ( கவிஞர் அறிவுமதியின் மகன் )

எடிட்டிங் : நிர்மல்

சண்டைப் பயிற்சி : சில்வா

உடைகள் : நடராஜ்

இசை : ஜஸ்டின் பிரபாகரன்

நடிகர் நடிகைகள் : யுவன், ஸ்ரீராம், அதுல்யா ரவி, சமுத்திரக்கனி, தம்பி ராமையா…

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் ஆனதாலோ என்னவோ சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டைக்கு பெரிய அளவில் ஓப்பனிங் கிடைக்கவில்லை.  சாட்டை படம் ஏற்படுத்திய நல்ல பெயர் எந்த விதத்திலும் இந்தப் படத்திற்கு உதவவில்லை. மக்களுக்கு சினிமா மீதான ஆர்வமே குறைந்து வருகிறதா அல்லது மழைக்காலம் என்பதால் தியேட்டரில் கூட்டம் குறைவாக இருக்கிறதா தெரியவில்லை… நவம்பர் இறுதிக்கே இந்தக் கதி என்றால் இன்னும் டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகும் படங்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது… அட்டகத்தி தினேஷின் குண்டு, சிவகார்த்திகேயனின் ஹீரோ போன்ற படங்கள் என்ன மாதிரியான ரிசல்ட்டைப் பெற போகின்றன என்று நினைக்கும்போது பக்கென்று இருக்கிறது. சரி அதை விட்டுவிட்டு சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை படத்தைப் பற்றி பார்ப்போம்.  

சமுத்திரக்கனி சாட்டை புகழ் தயாளன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்… அதே மிடுக்கு.,. அதே கம்பீரம்… மனுசன் எல்லா காட்சிகளிலும் புத்துணர்வோடு புரட்சியாக நடித்துள்ளார்… சமுத்திரக்கனியைப் பார்க்கும்போது சில இடங்களில் காமெடி நடிகர் விவேக் நினைவுக்கு வந்து செல்கிறார்…  அடுத்ததாகப் பாராட்டப்பட வேண்டியவர் சிங்கப் பெருமாள் கதாபாத்திரத்தில் நடித்த தம்பி ராமையா… மனுசன் பிரம்மாதமாக நடித்துள்ளார், இன்னொரு தேசிய விருது வெல்ல வாழ்த்துக்கள் தம்பி ராமையா சார்.., குறிப்பாக நீங்கள் ஓகேய் சொல்லும் ஸ்டைல் செம… 

அதுல்யா ரவி அழகாக இருக்கிறார் ( போதும்பொண்ணு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்… ) … நிலவு போன்ற வட்ட வடிவமான முகம். அவருடைய நடிப்பு அங்கங்கே கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போல் தெரிந்தாலும் மனதை கவர்கிறார். சாட்டை படத்தில் நடித்த யுவன் இன்னமும் அப்படியே இருக்கிறார்… நட்சத்திர  நாயகனாக வலம் வர வாழ்த்துக்கள் ப்ரோ… ( அடுத்த படம் பாலாவின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது )… பசங்க பட ஸ்ரீ!ராம் இந்தப் படத்தில் யுவனின் நண்பனாக நடித்துள்ளார்… வழக்கம்போலவே நன்றாக செய்துள்ளார்… மீசை தான் கொஞ்சம் ஒட்டாதது போல் இருக்கிறது… ஒரிஜினல் மீசையாக இருந்தாலும் உறுத்தலாக இருக்கிறது… 

அடியே அழகே… என் அழகே அடியே… ( ஒரு நாள் கூத்து ), அந்திமாலை நேரம் ( மான்ஸ்டர் ) போன்ற சூப்பர்ஹிட் பாடல்களை தந்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்தில் ஒரு ஹிட் பாடல்களை கூட தரவில்லை. அனைத்து பாடல்களும் சுமார் ரகமே. கல்லூரி சம்பந்தப் பட்ட கதை என்றதும் அடிக்கற அடியில் தாரை தப்பட்டைகள் எல்லாம் கிழிந்து தொங்க வேண்டாமா ஜஸ்டின் பிரபாகரன்??? பின்னணி இசையும் சுமார் தான்… வேகாத வெயிலுல போன்ற பாடல்களை இன்னும் கூட சிறப்பாக தந்திருக்கலாம். 

இராசாமதியின் ஒளிப்பதிவு சுமார். துப்பாக்கி முனை அளவுக்கு ஒளிப்பதிவு நன்றாக இல்லை. எதோ சீரியல் பார்ப்பது போன்ற ஷார்ட் பிலிம் பார்ப்பது போன்ற உணர்வை அடிக்கடி ஏற்படுத்துகிறது ஒளிப்பதிவு. 

இயக்குனர் எம் அன்பழகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மூன்றாவது படம்… அவருடைய இரண்டாவது படமான ரூபாய் படம் ( கயல் சந்திரன் மற்றும் கயல் ஆனந்தி நடித்த படம் ) எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை… மீண்டும் தனக்கு பழக்கப்பட்ட கல்வித்துறை அவலம் என்ற களத்தில் இறங்கி உள்ளார்.., இறங்கி அடித்திருக்கலாம்… ஆனால் மிஸ் செய்துவிட்டார்… சாட்டை படத்தில் வரும் வசனங்களும் சில காட்சிகளும் நிஜ உலக அவலங்களை பட் பட்டென்று உடைத்து தெறித்தன… ஆனால் அது போன்ற வசனங்கள் இந்தப் படத்தில் குறைவோ என எண்ண தோன்றுகிறது… கதையின் ஆழமும் திரைக்கதையின் சுவாரஸ்யமும் படத்தில் ரொம்பவே குறைவு. கவனம் தேவை இயக்குனரே… சாட்டை படம் ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானது அல்ல… நிறைய ஆசிரியர்கள் இன்று நேர்மையானவர்களாக சாட்டை தயாளன்களாக மாறி வருகிறார்கள்… புதிய தலைமுறை ( புதிய தலைமுறை ஆசிரியர் விருது ), தினமலர் ( டிவிஆர் நினைவு ஆசிரியர் விருது ) போன்ற நிறுவனங்கள் சிறந்த ஆசிரியர்களுக்கு வருடவருடம் விருதுகள் கொடுத்து வருகின்றன… அந்த அளவுக்கு மிகப் பெரிய சமூக மாற்றத்தை உண்டாக்கிய படம்… உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் என்பதே உண்மை… ரூபாய் படம் சரியாக போகவில்லை தான், அதற்காக நீங்கள் தோல்வி இயக்குனர் கிடையாது… அடுத்த சாட்டை கல்லூரி கல்வி ஊழல் பற்றி பேசியது போல் இன்னும் பல துறைகளில் உள்ள ஊழல்களை அவலங்களை சுட்டிக் காட்டும் படத்தை தொடர்ந்து எடுக்க வேண்டும்… 

சண்டைக் க்காட்சிகள் சுமார் ரகம்… ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா எப்போது தான் நல்ல சண்டைக்காட்சியை தருவார் என தெரியவில்லை… என்னை அறிந்தால் படத்தை தவிர மற்ற அனைத்து படங்களிலும் சுமாரான சண்டைக் காட்சிகளையே தந்துள்ளார் சில்வா… இந்தப் படத்திலும் அப்படியே… பாடல் வரிகளும் சூப்பர்… எடிட்டர் நிர்மலின் பங்களிப்பு மிக முக்கியமானது… ” அதிகாரத்த கிண்டல் பண்ணி சந்தோசப் பட்றோம்… ஆனா அதனால அதிகாரத்துக்கு ஒரு லாசும் இல்ல… “, ” ஒரே காலேஜ்… ஒரே கிளாஸ் ரூம்… இருந்தாலும் இந்தியா பாகிஸ்தான்ல இருக்கற மாதிரி இருக்கு… “, ” பொறந்த இடத்துல மட்டும் இல்ல போற இடத்துலயும் போர் தான்… அவிங்களலாம் ஏறி மிதிச்சிட்டு போய்ட்டே இருக்கனும்… “, ” மத்தவங்க கஷ்டத்த போக்கனும்னு அவசியம் இல்ல.., அவிங்க சொல்றத காது கொடுத்தாலே கேட்டா போதும்.,, அதுவே அவிங்களுக்கு ஆறுதலா இருக்கும்… ” ம்போன்ற வசனங்கள் செம. 

சில தினங்களுக்கு முன் இதே போன்ற கதைக் கருவுடன் வெளியான ராட்சசி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக  பி சி சென்டர்களில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல இந்தப் படமும் பி சி சென்டர்களில் நன்றாக ஓடும். ஏ சென்டர் ரசிகர்கள் கண்டிப்பாக நிறைய காட்சிகளுக்கு உச் கொட்டுவார்கள். அந்த அளவுக்கு அட்வைஸ்களை அள்ளி தெளித்திருக்கிறார் சமுத்திரக்கனி. சாட்டை, அடுத்த சாட்டை என்று இதன் நீட்சியை இதோடு நிறுத்திக் கொண்டால் அனைவருக்கும் நன்று… சாட்டை பார்ட் 2, அடுத்தடுத்த சாட்டை போன்ற விபரீத முடிவுகளில் இறங்க வேண்டாம். கல்வித் துறை பற்றி பேசியது போதும்… என்பது ரசிகர்களின் அன்பான வேண்டுகோள். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கலீல் ஜிப்ரான் போன்றோரின் வரிகள் செம… 

அடுத்த சாட்டை படம் சாட்டை படம் போல் சூப்பராக இல்லையென்றாலும் படத்தின் மையக் கருவுக்காக கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.  ஏ சென்டரில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் இன்ஜினியரிங் படித்தவர்கள் என்பதால் ஆர்ட்ஸ் காலேஜின் வாழ்வியல் அவர்களுக்கு அந்நியமாகத் தெரியலாம்… ஆனால் கிராமபுறத்தில் இந்தப் படத்திற்கான மரியாதையே வேறு… ஆர்ட்ஸ் காலேஜில் எதோ ஒரு டிகிரி முடித்துவிட்டு அதற்கான சரியான வேலை கிடைக்காமல் கூலி வேலைக்கு, டிரைவர் வேலைக்கு, எலக்ட்ரீசியன் வேலைக்கு என்று அல்லல்படும் இளைஞர்கள் இந்தப் படத்தை நிச்சயம் கொண்டாடுவார்கள்… 

அடுத்த சாட்டை – ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இன்னொரு சாட்டை! ஆனால் இந்த தடவை அது கொடுக்கும் வலி ரொம்ப குறைவு… 

Related Articles

இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் வன்புணர... நம்மில் பெரும்பாலோனோர் கேட்டதும் பதறும் குற்றமென்றால் அது பாலியல் வன்புணர்வு தான். காரணம் அது ஒருவரை உடல்ரீதியாக, மனரீதியாக வாழ்நாள் முழுவதும் பாதிப்ப...
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் பற்றிய ச... திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் :தமிழ்நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்குவது திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் தலம் ஆகும். திரு...
#4Yearsofbbvip – ரகுவரன வில்லனா தா... கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாகத் தியேட்டருக்கு சென்று கொண்டாடி தீர்த்த படம் விஐபி. தனுஷை பிடிக்காத ரசிகர்கள...
சூர்யாவின் “அகரம் அறக்கட்டளை”... கடந்த 2017 ஆம்  ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த  சர்ச்சைகள் விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வருட...

Be the first to comment on "” உண்மைக்கு என்ன விலை வேணாலும் கொடுக்கலாம்!” – அடுத்த சாட்டை விமர்சனம் !"

Leave a comment

Your email address will not be published.


*