ஆடம்பரம் இல்லாமல் சிம்பிளாக வீடு தேடிவந்து ஆறுதல் தந்த விஜய்!

ஒரு துக்கவீட்டிற்கு எப்படி வரவேண்டும் என்பதை விஜயிடம் இருந்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும் என்று சமூகவலை தளங்களில் கருத்துக்கள் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.

கடந்த ஆண்டு நீட் தேர்வு தோல்வியால் உயிர் இழந்த அனிதாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் சொல்ல எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீரென அரியலூர் விரைந்து ஆறுதல் சொல்லி வந்தார் நடிகர் விஜய். அதே போல தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆறுதல் கூறி இருக்கிறார். கூடவே உதவித்தொகையாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு லட்சம் பணம் கொடுத்து உதவி இருக்கிறார்.

 

பின்பற்ற வேண்டிய பண்பு

பெரியோரை மதித்தல், எளிமையைக் கடைபிடித்தல், தேவையான நேரத்தில் உரிமைக்காக குரல் கொடுத்தல் போன்ற பண்புகள் விஜய்க்கே உரித்தானது தான். பகலில் வந்தால் ரசிகர்கள் அன்புத் தொல்லை தருவார்கள் என்பதால் நள்ளிரவில் வந்து செல்லுதல் என்பதெல்லாம் உச்சக்கட்ட மனிதம். இப்படி பலவிதமாக விஜயை பாராட்டியும் புகழ்ந்தும் பேசி வருகிறார்கள். குறிப்பு அப்படி பேசுபவர்களில் பாதி பேர் அஜித் ரசிகர்கள்.

Related Articles

கமல் – கலையும் கலைசார்ந்த இடமும் &... சட்டம்நடிப்பு : கமல்(போலீஸ்), சரத்பாபு(வக்கீல்), மாதவி(interior decration), ஒய்.ஜி. மகேந்திரன், மனோரமா மற்றும் பலர்.இயக்கம்: கே.விஜயன்இசை:...
ஜெயமோகனுக்கும் சினிமாவுக்கும் ராசியில்லை... எழுத்தாளர் ஜெயமோகன் இந்தக் காலகட்டத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் என்பதும் அவருடைய வாசகர் வட்டம் எப்படிபட்டது என்பதும் தீவிர புத்தக வாசிப்பாளர்களுக்...
எல்லோரும் செய்றதனால தப்பு சரின்னு ஆகிடாத... நூறு நாட்களை தொட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிர்ப்புப் போராட்டம் பல இழப்புகளை சந்தித்து ஓரளவுக்கு வெற்றி கண்டு உள்ளது. மற்றொரு போராட்டம் பல தலைமுறைகளாக தொ...
மத்திய தமிழகத்தில் 40 டிகிரி செல்ஸியஸ் வ... மத்திய தமிழகத்தில் வெப்பம் நாற்பது டிகிரி செல்ஸியஸாக பதிவாகி இருக்கிறது. மத்திய வானிலை துறையின் சென்னை கிளையின் தரவுகளின் அடிப்படையில் திருச்சியில் அத...

Be the first to comment on "ஆடம்பரம் இல்லாமல் சிம்பிளாக வீடு தேடிவந்து ஆறுதல் தந்த விஜய்!"

Leave a comment

Your email address will not be published.


*