அடுத்த “அஞ்சான்” படமா சாமி2 – விக்ரம் ரசிகர்கள் அதிருப்தி

இது டிரெய்லர் காலம் போல. ஒவ்வொரு  நாளுக்கும் எதாவது ஒரு டிரெய்லர் ரிலீசாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் கோலிசோடா2, சண்டக்கோழி2, தமிழ்படம் 2, சாமி2 என்று பல 2 க்களின் டிரெய்லர்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அவற்றில் முதல் மூன்று படங்களின் டிரெய்லர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்க சாமி2 நல்ல வகையாக நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்டது.

விக்ரமுக்கு ஐ படத்தைத் தொடர்ந்து வேறு எதுவும் பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை. ஸ்கெட்ச் படம் கிளைமேக்ஸ்க்காக லேசான அதிர்வை உண்டாக்கியது. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ரிலீசான சாமி எனும் வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசாவது என்ற செய்தி அறிந்து அவருடைய ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர். மோசன் போஸ்டர் ஓரளவு வரவேற்பைப் பெற்றாலும் டிரெய்லர் சிக்கிக் கொண்டது.

அப்படியே சிங்கம்3 டிரெய்லரைப் பார்த்ததுபோல் இருக்கிறது. மாஸ் வசனங்கள் என்று ” தாய்க்குப் பொறக்கல… பேய்க்குப் பொறந்தவன்… ” டப்பா வசனங்களை எழுதி கடும் அதிருப்தி ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதனாலயே இந்தப்படம் அடுத்த அஞ்சான் என்று ரசிகர்களால் வறுத்து எடுக்கப்பட்டு வருகிறது.

Related Articles

தமிழகத்தின் தற்போதைய சூழலுக்கு தகுந்த பட...  தயாரிப்பு: பென் ஸ்டுடியோஸ் & ஸ்டோன் பெஞ்ச்இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ்இசை: சந்தோஷ் நாராயணன்ஒளிப்பதிவு: திருஎடிட்டிங்: ...
தமிழ் நாட்டின் முதல் பெண் டைரக்டர் டி. ப... ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் 1911 ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். சொந்த ஊர்: தஞ்சை மாவட்டம் திருவையாறு. தந்தை பஞ்சாபகேச அய்யர், கிராம கணக்க...
மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் மாபெரும் ... மகாராஷ்டிரா மாநில அரசு விவசாயிகளின் கோரிக்கைள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளதை அடுத்து மகாராசுடிரா விவசாயிகள் மாபெரும் போராட்டம் வாபஸ் ப...
ரிமோட்டில் இயங்கப்போகிறது சென்னை மெட்ரோ ... சிறுவயதில் நாம் அனைவருமே பொம்மை கார வைத்து விளையாடியிருப்போம் அல்லவா, மிகவேகமாகக் காரை இழுத்து விட்டால் அது சுவரில் டம்மென்று இடித்து நிற்கும். பிறகு ...

Be the first to comment on "அடுத்த “அஞ்சான்” படமா சாமி2 – விக்ரம் ரசிகர்கள் அதிருப்தி"

Leave a comment

Your email address will not be published.


*