சன்னி லியோன் என்ன சாதி? – இந்தச் சாதிப் பெண்ணா இப்படி!?

What is the caste of Sunny Leone

அடப்பாவி… சன்னி லியோனோட சாதியாடா நமக்கு முக்கியம்… அவ ____ தாண்டா நமக்கு முக்கியம்… இப்படி பச்சையாக கமெண்ட் அடிக்கும் மக்கள் தான் இங்கு நிரம்பிக் கிடக்கிறார்கள். அதே சமயம் ஆமா இந்தப் பொம்பள என்ன சாதி… இந்த தொழிலுக்கு வர என்ன காரணம்… மொத இவ இந்தியாக்காரி தானா… இந்திப் படத்துலலாம் நடிக்கிறாளே அப்ப கண்டிப்பா இந்தியாவுக்கும் அவளுக்கும் எதோ நெருங்கிய தொடர்பு இருக்கணும் ல… அப்படி அவ இந்தியாவோட தொடர்புடையவளா இருந்தா அவ சாதியா இருப்பா… கண்டிப்பா உயர்ந்த சாதிப் பொம்பளைய இருக்க மாட்டா… எதோ பொழைக்க வக்கிலாத சாதிக்காரியா இருப்பாளோ… இப்படியும் பல மண்டைகள் யோசித்துக் கொண்டு தான் இருக்கிறது.

ஒரு நபர் பிரபலமாகி விட்டால் உடனே கூகுளிடம் அதிகம் நபரால் கேட்கப்படும் கேள்வி சாதியைப் பற்றியதே. அதிலும் பெண்கள் எதாவது துறையில் சாதித்து விட்டால் உடனே அவர் என்ன சாதி என துளாவுகிறது பழைய மண்டைகள்.

சமீபத்தில் பிக்பாஸ் புகழ் நடிகை ரித்விகாவிடம் சிலர் சாதி குறித்து கேள்வி எழுப்பி வசமாக வாங்கி கட்டிக்கொண்டார்கள். இன்னும் பல நடிகர் நடிகைகளின் சாதி குறித்து ஏகப்பட்ட யூடுப் வீடியோக்கள், ஆன்லைன் கட்டுரைகள் என்று தேவையில்லாத ஆணிகள் ஏராளம்.

அவர்களை சொல்லி என்ன பலன்? மக்கள் எதை அதிகம் விரும்புகிறார்களோ அதை தானே அவர்களால் செய்ய முடியும்? சோத்துக்கான பொழைப்பு அது! மக்கள் அதிகம் விரும்பும் செய்தி எனப் பட்டியலிட்டால் அவற்றில் என்ன மாதிரியான அபத்தங்கள் இருக்கிறது என்பதை பார்ப்போம்.

1. இந்த நடிகர் நடிகை என்ன சாதி தெரியுமா?

2. இந்த நடிகையின் முன்னாள் கணவர்/காதலர் யாரு தெரியுமா? இந்த நடிகர் இந்த நடிகையுடன் இரண்டாவது திருமணம் செய்யப் போகிறாரா?

3. விழாவிற்கு சென்ற நடிகையின் ஆடை விலகியதா? சங்கடப்பட்ட நடிகை!

4. பிரபல நபர் செய்த காரியத்தைப் பாருங்கள்… என்று வேறு நபரின் அந்தரங்க வீடியோவை பதிவேற்றம் செய்வது.

5. அரைகுறை ஆடையுடன் புகைப்படம் வெளியிட்ட நடிகை… கிளுகிளுப்பான புகைப்படங்களை பார்க்க இந்த லின்க்க கிளிக் பண்ணுங்க…

இது போன்ற மட்டமான செய்திகள் மட்டுமே காலங்காலமாக பகிரப்பட்டு உருவாக்கப் பட்டு வருகிறது. அடுத்தவரின் அந்தரங்க வீடியோக்களை பார்ப்பவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகம் என்று ஏற்கனவே இந்தியர்களின் மானம் கப்பல் ஏறிக்கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழர்களின் சாதனையோ மகத்தானது. இது போன்ற செய்திகளுக்கு வரவேற்பு தருவது ஒட்டுமொத்த இந்தியர்களின் சபல புத்தியை வக்கிரத்தையே பிரதிபலிக்கிறது.

பிரதீபா பாட்டிலின் சாதி என்ன? மிதாலி ராஜ் என்ன சாதி? பி. வி. சிந்து என்ன சாதி? என்று சாதித்த பெண்கள் எல்லாம் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்று துளவும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஏனோ? கூகுளில் தெரிந்து கொள்ள வேண்டிய எவ்வளவோ நல்ல விஷியங்கள் இருந்தாலும் இந்தியர்களின் மனம் சாதி என்ன என்பதை தெரிந்துகொள்வதில் தான் ஆர்வமாக இருக்கிறது. இப்படிப்பட்ட கூமுட்டை மக்களிடம் மாட்டிக் கொண்டு கூகுள் படும் பாடு இருக்கே!

பாவம் கூகுள்!

Related Articles

நீரஜ் சோப்ரா என்ன சாதி என்று தெரிந்துகொண... நீரஜ் சோப்ரா - இனி இந்தப் பெயரை நாம் அவ்வளவு சீக்கிரம் மறக்கப் போவதில்லை. 2021ம் ஆண்டிற்கான... இந்தியாவே எதிர்பார்த்து காத்திருந்த டோக்கியோ ஒலிம்பிக் ...
கடந்த பத்தாண்டுகளில் வெளியான டாப் 10 சிற... 2010 ல் வெளியான படங்கள்:  2010 ம் ஆண்டில் மொத்தம் 143 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. அவற்றில் ஆயிரத்தில் ஒருவன், நாணயம், கோவா, தமிழ் படம், விண்ணைத் தாண்டி...
தமிழ்வழிக்கல்வியில் படித்தவர்கள் படும்பா... தாய்மொழிப்பற்றின் காரணமாகவும் போதிய வசதி இல்லாததாலும் நமக்கு வாய்ச்சது இதுதான் என்று தமிழ்மீடியத்தில் படித்த இளைஞர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆவதற்குள்...
”முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்... கடமை வேறு, பெருமை வேறு, தியாகம் வேறு என்று நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை. குறிப்பாக அரசியல்வாதிகள் இதை எப்போது புரிந்து கொள...

Be the first to comment on "சன்னி லியோன் என்ன சாதி? – இந்தச் சாதிப் பெண்ணா இப்படி!?"

Leave a comment

Your email address will not be published.


*