அஜீத் படத்தின் டீசர் ட்ரெய்லர் வைரல் ஆவதும், டீசர் ட்ரெய்லரின் வடிவேலு வெர்சன்கள் வருவதும் மிகச் சாதாரண விசியம். இணைய உலகையே அதிர வைக்க கூடியதாக இருக்கிறது அஜீத் பட டீசர் ட்ரெய்லர் வெளியீடுகள். அப்படி இணையத்தில் இன்று பெரிதும் கொண்டாடப் பட்டு வருகிறது அஜீத் நடிப்பில் தயாராகி உள்ள ” விஸ்வாசம் ” படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ஹிட் அடிக்க, ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கும் ” அட்டேங் ங்கப்பா… ” என்ற ஒற்றை வார்த்தை கொண்ட வசனம் தற்போது அதிக இடங்களில் உபயோகப் படுத்தப் பட்டு வருகிறது.
ஒன்னுமே இல்லாத விஷியத்துக்கு ஓவர் பில்டப் கொடுக்கும் இடங்களில், சம்பந்தமே இல்லாமல் உருகி மருகும் இடங்களில் இந்த அட்டேங் ங்கப்பா வார்த்தையைப் பயன்படுத்தி கலாய்க்க தொடங்கிவிட்டார்கள் நெட்டிசன்கள்.
உதாரணம்:
” மச்சி நீ தான்டா என் உயிர் நண்பன்… ”
” அட்டேங் கப்பா… அண்டப் புலுக புலுகுறான் பாரு… ”
இனி வரும் காலங்களில் எந்தெந்த இடங்களில் அட்டேங் ங்கப்பா என்ற வசனம் உபயோகிக்கப் படும் என்பதை கணக்கிட்டால் பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு இந்தக் கமெண்ட் பயன்படுத்த படலாம்.
1. ” நான் ஆட்சிக்கு வந்தால்… தமிழகம் செழிக்கும்… ”
” அட்டேங் ங்கப்பா… ”
2. ” காவிரி கிடைக்கும்… ”
” அட்டேங் ங்கப்பா… ”
3. ” நீட் ரத்து செய்யப் படும்… ”
” அட்டேங் ங்கப்பா… ”
4. ” விவசாயிகளுக்கு நல்லது நடக்கும்..,”
” அட்டேங் ங்கப்பா… ”
5. ” இந்தியாவிற்காக நாயாக உழைக்கிறேன்… ”
” அட்டேங் ங்கப்பா… ”
6. ” அரசியலுக்கு வந்ததில் இருந்து நான் பொய்யே பேசியதில்லை… ”
” அட்டேங் ங்கப்பா… ”
7. ” ஓட்டுக்கு நாங்கள் பணம் தருவதில்லை… ”
” அட்டேங் ங்கப்பா… ”
8. ” நாங்கள் ஊழலே செய்தது இல்லை… ”
” அட்டேங் ங்கப்பா… ”
9. ” நீ சொன்னா உசரக் கூட கொடுப்பேன்… ”
” அட்டேங் ங்கப்பா… ”
10. ” நா பொய்யே பேசுனது இல்ல… ”
” அட்டேங் ங்கப்பா… ”
இன்னும் பல இடங்களில் இந்த அட்டேங் ங்கப்பா என்ற வார்த்தை பெரிய அளவில் உபயோகப் படுத்தப்படும் என்று கணிக்க முடிகிறது.
Be the first to comment on "வைரலாகும் அஜீத்தின் “அடேங் கப்பா” வசனம் !"