தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக விக்கெட்டுகளை சாய்த்து இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சாதனை

தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை 7 ஒருநாளில் போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியதே தனியொரு சுழற்பந்து வீச்சாளரின் அதிகபட்ச சாதனையாக இருந்து வந்தது. அந்தச் சாதனையை செய்தவர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான கீத் ஆர்தர்ட்டன். இந்தச் சாதனையை இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான சாஹல் மற்றும் குல்தீப்  யாதவ் ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் முறியடித்தனர்.

இந்தத் தொடரில் தனது பதிமூன்றாவது விக்கெட்டை கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் முதன்முதலில் ஆர்தர்ட்டனின் சாதனையை முறியடித்தார். அதன்பிறகு நேற்றைய போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் யாதவ் சாஹலுக்கு அடுத்து ஆர்தர்ட்டனின் சாதனையை முறியடித்தார். இந்தத் தொடரில் மட்டும் குல்தீப் யாதவ மொத்தம் பதினாறு விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஆர்தர்ட்டனின் இந்தச் சாதனை 1998 – 99 சீசனில் நிகழ்த்தப்பட்டது.

நேற்றைய சாதனைக்கு முன்பு, தென்னாப்பிரிக்காவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பட்டியலில் ஆர்தர்ட்டனுக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே இருந்தார். தென்னாப்பிரிக்காவில் 1993 – 94 சீசனில் நடந்த எட்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அவர் பதினோரு விக்கெட்டுகள் வீழ்த்திருந்ததே அவரது சாதனையாக இருந்தது.

தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கே சாதகமானவை. இருப்பினும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அங்கே சாதனைகள் நிகழ்த்துவது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

கவுண்டமணியின் 49-O திரைப்பட வசனங்கள்!... " பிரச்சினை இல்லாத விவசாயி எவன் இருக்குறான்... " " எவன தலைவராக்குறதுனு உங்களுக்கும் தெரியல... தலைவன்னா எப்டி நடந்துக்கனும்னு அவனுக்...
ஆரோக்யமாக எடை குறைக்க ஐந்து வகையான பானங்... இன்றையகாலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் அதிக எடை காரணமாக அவதிப் படுகின்றனர். ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், அமைதியற்ற வாழ்க்கை முறை, சகிப்புத்தன்மையற்ற மன...
#TN_welcomes_XiJinping #GoBackModi என்று... சீன நாட்டை சேர்ந்த ஜின்பிங்கை வரவேற்கும் தமிழர்கள் #Gobackmodi என்று டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம். 1.சீன ...
வில்வதையில் தேசிய அளவில் சாதனை படைத்த நா... 14 . 40 நொடிகளில் 15 மீட்டர்கள் தொலைவுக்கு 118 அம்புகள் எய்து தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார் விஜயவாடாவைச் சேர்ந்த நான்கே வயதான ஆருஷ் ரெட்டி.  இந்திய...

Be the first to comment on "தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக விக்கெட்டுகளை சாய்த்து இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சாதனை"

Leave a comment

Your email address will not be published.


*