தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக விக்கெட்டுகளை சாய்த்து இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சாதனை

தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை 7 ஒருநாளில் போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியதே தனியொரு சுழற்பந்து வீச்சாளரின் அதிகபட்ச சாதனையாக இருந்து வந்தது. அந்தச் சாதனையை செய்தவர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான கீத் ஆர்தர்ட்டன். இந்தச் சாதனையை இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான சாஹல் மற்றும் குல்தீப்  யாதவ் ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் முறியடித்தனர்.

இந்தத் தொடரில் தனது பதிமூன்றாவது விக்கெட்டை கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் முதன்முதலில் ஆர்தர்ட்டனின் சாதனையை முறியடித்தார். அதன்பிறகு நேற்றைய போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் யாதவ் சாஹலுக்கு அடுத்து ஆர்தர்ட்டனின் சாதனையை முறியடித்தார். இந்தத் தொடரில் மட்டும் குல்தீப் யாதவ மொத்தம் பதினாறு விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஆர்தர்ட்டனின் இந்தச் சாதனை 1998 – 99 சீசனில் நிகழ்த்தப்பட்டது.

நேற்றைய சாதனைக்கு முன்பு, தென்னாப்பிரிக்காவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பட்டியலில் ஆர்தர்ட்டனுக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே இருந்தார். தென்னாப்பிரிக்காவில் 1993 – 94 சீசனில் நடந்த எட்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அவர் பதினோரு விக்கெட்டுகள் வீழ்த்திருந்ததே அவரது சாதனையாக இருந்தது.

தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கே சாதகமானவை. இருப்பினும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அங்கே சாதனைகள் நிகழ்த்துவது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

ஜடேஜாவிடம் மன்னிப்பு கேட்ட சிஎஸ்கே ரசிகர... ஐபிஎல் தொடர் 11வது சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிக்கான போட்டியின் போது, ஆட்டம் தொடங்கிய சில நிமிடங...
பள்ளிப்பருவத்தில் வருவது காதலா? வெறும் இ... 96 (Tamil Movie) IMBD Rating - 9.4/10இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிரு...
மூன்று மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தக... கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா(Cambridge Analytica) என்ற நிறுவனம் 87 மில்லியன் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களைத் திருடி தங்களது வாடிக்கையாளர்களோடு பகிர்ந்துக...
“காளைகளுக்காகப் போராடிய நாம் எருமை... தமிழ் யூடியூப் உலகைப் பொருத்தவரை எந்த போலித்தனமும் இல்லாமல் உண்மையான அறச் சீற்றத்துடன் சமூக அவலங்களை பேசி வரும் ஒரே சேனல் என்றால் அது நக்கலைட்ஸ் சேனல்...

Be the first to comment on "தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக விக்கெட்டுகளை சாய்த்து இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சாதனை"

Leave a comment

Your email address will not be published.


*