இந்தியா வருகிறார் கனடா பிரதமர்

Canada Prime Minister

கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ வரும் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி முதல் 23 வரை இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்துவதற்கான பயணமாக இது அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜூலை 2017 ஆம் ஆண்டு இருநாட்டுத் தலைவர்களும் ஜெர்மனியில் நடந்த ஜி20 மாநாட்டில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

பரஸ்பர உறவுகள், வணிகம், கல்வி, உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, விண்வெளி ஆராய்ச்சி, தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் இருநாட்டுத் தலைவர்கள் முக்கிய முடிவுகள் அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.

தற்போதைக்கு இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையே எட்டு பில்லியின் டாலர்கள் அளவுக்கு வணிகம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பதினைந்து மில்லியன் டாலர்கள் அளவுக்கு கனடா  நிறுவன முதலீட்டாளர்களால் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய மாணவர்களின் வெளிநாட்டுக் கல்வி தேர்வில் கனடா முதல் இடம் வகிக்கிறது. 2017 ஆம் ஆண்டு மட்டும் 124000 மாணவர்கள் கல்விக்காக கனடா நாட்டுக்குப் பயணப்பட்டுள்ளனர்.

கனடா பிரதமர் ஆக்ரா, அகமதாபாத், புது டெல்லி, மும்பை மற்றும் அம்ரிஸ்டர் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்ய இருப்பதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

Related Articles

மாவட்ட வாரியாக தமிழ் மற்றும் மலையாள எழுத... தமிழகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உள்ளன. கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவற்றில் சில எழுத்தாள...
12வது நாளாகத் தொடர்ந்து உயர்த்தப்பட்டது ... 12வது நாளாகத் தொடர்ந்து பெட்ரோலின் விலை 36 பைசா உயர்த்தப்பட்டு மும்பையில் லிட்டர் 85.65 ரூபாயாக விற்கப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்களாக உயர்த்தப்பட்டுக...
உலக சினிமா இயக்குனர்களும் அவர்களின் படங்... 1.Meghe dhake tara (1960) படத்தை இயக்கியவர் Ritwik katak Ramkinkar (1975)jukti, takko aar gappo (1974)titash ekti nadir naam (1973)Durbar...
”முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்... கடமை வேறு, பெருமை வேறு, தியாகம் வேறு என்று நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை. குறிப்பாக அரசியல்வாதிகள் இதை எப்போது புரிந்து கொள...

Be the first to comment on "இந்தியா வருகிறார் கனடா பிரதமர்"

Leave a comment

Your email address will not be published.


*