வங்கி மோசடி புகாரில் சிக்குகிறார் பஞ்சாப் முதல்வரின் மருமகன்

வங்கி மோசடி புகாரில் சிக்குகிறார் பஞ்சாப் முதல்வரின் மருமகன்

விஜய் மல்லையா ஆரம்பித்து வைத்த வங்கி மோசடி நாடெங்கும் பரவி இன்று நிரவ் மோடி வரை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தினமும் வங்கி மோசடி குறித்த செய்திகள் நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஹைதராபாத்தில் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து வங்கிகள் தப்பித்து கொள்ள சில்கூர் பாலாஜி கோவிலில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யும் அளவுக்கு நிலைமை நாட்டில் மோசமான ஒன்றாக இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்கின் மருமகன் வங்கி மோசடி புகாரில் சிக்கியுள்ளார்.

பஞ்சாப் முதல்வரின் மருமகன்

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (Oriental Bank of Commerce) என்ற வங்கியில் 109 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்திய 11 பேரில், பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்கின் மருமகனும் ஒருவர் என்று சிபிஐ தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சிம்போலி என்னும் பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கும் ‘சிம்போலி  சுகர்ஸ்  லிமிடெட் (Simbhoali Sugars Limited)’ என்னும் நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த சக்கரை ஆலைத் தனியாரால் நடத்தப்பட்டு வரும் ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் முதல் இயக்குநர்கள் வரை வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.குற்றவியல் சதி மற்றும் ஏமாற்றுதல் என்ற அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அம்ரிந்தர் சிங்கின் மருமகன் குர்பல் சிங் சிம்போலி  சுகர்ஸ்  லிமிடெட் துணை இயக்குநர்களில் ஒருவர் ஆவர். மொத்தம் எட்டு நிறுவனங்களில் இயக்குநர் குழுவில் உறுப்பினராக இருக்கிறார் குர்பல் சிங்.

முறைகேடான வழியில் செலவு செய்யப்பட்ட வங்கிக் கடன்

‘சிம்போலி  சுகர்ஸ்  லிமிடெட்’ நிறுவனத்திற்கு ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கி சார்பில் 2011 ஆம் ஆண்டு 150 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டது. 5700 கரும்பு விவசாயிகளுக்கு நிதியாக வழங்கும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தக் கடன் வழங்கப்பட்டது. ஆனால் முறையாக இந்த பணம் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல், கடன் தொகையானது நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு முறை கேடான வழியில் திருப்பி விடப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. மார்ச் 2015 ஆண்டு அந்த குறிப்பிட்ட வங்கி கணக்கு என்பிஏ(NPA) என்று அறிவிக்கப்பட்டது. பிறகு ஜூன் 2015 ஆம் ஆண்டு இது ஒரு மோசடி என்றும் அறிவிக்கப்பட்டது.

என்பிஏ(Non Performing Assests (NPA)) என்றால் என்ன?

வங்கி கொடுத்த கடன் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் வட்டியாகவோ அல்லது அசலாகவோ திருப்பி செலுத்தப்படாமல் இருக்குமாயின் அந்தத் தொகை அல்லது கணக்கு என்பிஏ என்று அறிவிக்கப்படும்.

எனினும் நிறுவனத்தின் வங்கி கணக்கு என்பிஏ என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பாக மல்டிபிள் பேங்கிங் அரெஞ்மெண்ட்ஸ் என்ற அடிப்படையில் மீண்டும் அதே நிறுவனத்துக்கு 110 கோடி வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட தொகையும் கடந்த நவம்பர் மாதம் 2016 ஆம் ஆண்டு என்பிஏ என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் 2017 ஆம் ஆண்டு ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கி சார்பில் சிம்போலி  சுகர்ஸ்  லிமிடெட் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை என்று சிபிஐ நிறுவனத்தின் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து இருக்கிறது. டெல்லி மற்றும் நொய்டா உள்ளிட்ட எட்டு இடங்களில் சிபிஐ சார்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்துத் தேவைப்படும் பட்சத்தில் நிறுவனத்தின் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு விசாரணை செய்ய படுவார்கள் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

சாமானியர்களிடம் மட்டும் தான் வங்கிகளின் சாமர்த்தியம் செல்லுபடியாகும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.

Related Articles

“நான் பெத்த மகனே” இந்த திரைப... நான் புடிச்ச மாப்பிள்ளை, விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டணா செலவு பத்தணா, வீட்டோட மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்னா கேட்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா போன...
சிதம்பர நினைவுகள் புத்தகத்தை நாம் படிக்க... இந்தப் புத்தகத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன் இயக்குனர் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தையும் இயக்குனர் ராமின் கற்றது தமிழ் படத்தையும் நினைவுக...
சன்னி லியோன் என்ன சாதி? – இந்தச் ச... அடப்பாவி... சன்னி லியோனோட சாதியாடா நமக்கு முக்கியம்... அவ ____ தாண்டா நமக்கு முக்கியம்... இப்படி பச்சையாக கமெண்ட் அடிக்கும் மக்கள் தான் இங்கு நிரம்பிக...
இத இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது̷... சூதுகவ்வும் திரைப்படம் வெளியாகி இன்றோடு (01-05-2013) ஆறு வருடங்கள் ஆகப்போகிறது. நலன் குமாரசாமி, ஸ்ரீனிவாஸ் கவிநயம் இருவரும் கதை எழுதி உள்ளனர். நயன்தார...

Be the first to comment on "வங்கி மோசடி புகாரில் சிக்குகிறார் பஞ்சாப் முதல்வரின் மருமகன்"

Leave a comment

Your email address will not be published.


*