கமல் தனது கட்சி பெயரை மாற்றுவாரா? மய்யம் என்பதன் பொருள் என்ன?

கமல் தனது கட்சி பெயரை மாற்றுவாரா? மய்யம் என்பதன் பொருள் என்ன?

ஐந்து வருடத்திற்கு ஒரு முறை என் விரலை கறையாக்கிக்கொள்வது போதாதா என்று அரசியல் களத்தை விட்டு ஒதுங்கி நின்ற கமல்ஹாசன் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் புயலாய் கிளம்பி டுவிட்டரில் சாமான்ய மக்களின் பிரதிநிதியாய் ஆளுங்கட்சிக்கு சாட்டையடி கொடுத்து வந்தார். டுவிட்டரில் விமர்சனம் செய்வது பெரிய விஷியமில்லை திராணி இருந்தால் சினிமாவை விட்டு வெளியேறி அரசியல் களத்தில் குதித்து பேசுங்கள் என்று சிலர் கருத்து தெரிவித்து உசுப்பேத்திவிட அதுவே இன்று அவர்களுக்கு பேராபத்தாக மாறியுள்ளது. அவர்கள் சொன்னதைப் போலவே, சினிமாவை விட்டு வெளியேறி முழுநேர அரசியல்வாதியாக மாற தயாராகிவிட்டார் கமல்.

எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம்

கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என்பதை நன்கு உணர்ந்து இன்று வரை எதையும் கற்றுக்கொள்ளும் மாணவனாகவே திகழ்கிறார். அவருடைய அந்த பண்பை சிறப்பித்து, கமலுக்கு அரசியல் தெரியாது. அவன் அரசியல் கற்றுக்கொண்டு வந்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று பாரதிராஜா சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார். இப்போது அதுவும் செயலாக மாறி வருகிறது.

ரஜினியுடன் ஒப்பீடு

ரஜினி, கமல் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பாக ஒருவரையொருவர் புறம்பேசிக்கொண்டதில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷியம். இன்னும் சில வருடங்கள் சென்றால் இருவருடைய நட்பும் ஐந்து ஆண்டு கால நட்பாக தொடர இருக்கிறது. கடந்த இருபது வருடங்களாக அரசியலுக்கு வரேன் வரேன் என்று பொறுமை காத்த ரஜினிக்கு முன்பே அரசியல் களத்தில் கமல் இறங்கியது தான் ஒப்பீடுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால் சினிமா மட்டுமல்ல அரசியலிலும் என் பாணி வேறு உன் பாணி வேறு என்பதில் இருவருமே உறுதியாக உள்ளனர்.

கட்சி எப்படி தொடங்கணும்

ஒரு கட்சி தொடங்குவது எப்படி என்பதை முதற்கொண்டு அனைத்துமே ஆகச்சிறந்த முறையில் திட்டமிட்டு முறையாக செய்துள்ளார் கமல். பக்கத்து மாநில முதல்வரிடம் கலந்தாலோசித்து, மூத்த அரசியல்வாதிகளிடம் ஆசி பெற்று, எந்தெந்த நாட்களில் எங்கெங்கு சுற்றுப்பயணம் என்பதை இன்றைய மக்களின் களமான இணையத்தில் பதிவிட்டு பயணத்தை தொடங்கி ஒரு அரசியல் பயணம் எப்படி தொடங்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறார்.

இளைஞர்கள் ஆதரவு

இந்நிலையில் நேற்று மாலை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது கட்சிப் பெயரையும், தனது கட்சி சின்னத்தையும் தெரிவித்துள்ளார் கமல். அவரது அறிவிப்பு வெளியான நிமிடங்களில் இருந்து சமூக வலைதளங்களில் இளைஞர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை தெரிவித்து மகிழ்ந்துள்ளனர். சமீபத்தில் நிரூபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, மூத்தவர்கள் நான் தோற்கப்போவதாக கூறலாம், ஆனால் இளைஞர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்று பதிலளித்தார் கமல். அவருடைய பதிலுக்கேற்றார் போலவே இளைஞர்கள் பெரும்பாலானோர் கமலின் வருகையை ஆதரித்திருப்பது தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை விரும்புகிறார்கள் என்ற மனப்பான்மையை தெளிவாகக் காட்டியுள்ளது.

கட்சி பெயர் மாற்றம் செய்யப்படுமா?

அதே சமயத்தில் கட்சி பெயர் குறித்த சில விவாதங்களும் எழுந்துள்ளது. மக்கள் நீதி மய்யம் என்ற அவருடைய கட்சி பெயர் பகுத்தறிவை வலியுறுத்தும் பெரியாரின் நீதிக்கட்சியை நினைவூட்டுகிறது என்று நெகிழ்கின்றனர். இன்னும் சிலரோ மய்யம் என்ற வார்த்தை பெரியாருக்குடையது என்று நெகிழ்கின்றனர். இது ஒரு புறமிருக்க கட்சியின் பெயர் குழப்பத்தை உண்டாக்குகிறது என்கின்றனர் சிலர். மய்யம் என்ற வார்த்தையின் பொருளென்ன, மையம் என்பதை மையம் என்றே எழுதாமல் மய்யம் என்று ஏன் எழுத வேண்டும்? மக்கள் நீதி மய்யம் என்பது மக்கள் நீதி மன்றம் என்பதுடன் குழப்பத்தை உண்டாக்கும் வகையில் உள்ளது, ஆதலால் கமல் தனது கட்சி பெயரை இன்னும் நன்கு கலந்தாலோசித்து வேறொரு புதிய பெயரை வேண்டுமென்று குரலெழுப்பி வருகின்றனர்.

மய்யம் என்றால் என்ன?

இந்தக் கேள்விக்கு, நான் இடதுசாரிக்கும் வலதுசாரிக்கும் மையத்தில் நிற்பவன், நடுநிலைவாதி என்பதை தான் மய்யம் என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறோம் என்று பதில் தெரிவித்துள்ளார் கமல்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். கமல் தனது கட்சிப்பெயரை மாற்றுவாரா?

அல்லது தனக்கே உரிய பாணியில் எல்லோரையும் குழம்பவிடப் போகிறாரா? மக்களோடு மக்களாக நின்று மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டுவாரே என்பதற்கு பதில் ரஜினி சொல்வதுபோல் காலம் தான் பதில் சொல்லும்.

Related Articles

ரஜினியை சாக்கடைக்குள் தள்ளிவிட்ட ரஞ்சித்... ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான, பலருடைய மூன்றரை வருட உழைப்பை சுமந்த 2.O படம் தற்போது ரிலீசாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.ரஜி...
ஆண்ட்ரியா – அதிகம் கொண்டாடப்பட வேண... ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தில் வக்கீல் அப்பாவிற்கு மகளாக பிறந்தவர் ஆண்ட்ரியா. ஏ. ஆர் ரகுமான் இசையில் உருவான ஒரு காபி விளம்பரத்தில் தமிழ் பட சிவாவுடன் ...
கடந்த பத்தாண்டுகளில் வெளியான டாப் 10 சிற... 2010 ல் வெளியான படங்கள்:  2010 ம் ஆண்டில் மொத்தம் 143 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. அவற்றில் ஆயிரத்தில் ஒருவன், நாணயம், கோவா, தமிழ் படம், விண்ணைத் தாண்டி...
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இ... வேலைக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இனி சம்பளம் வழங்கக் கூடாது என்று தொடக்க கல்வித்துறை ஆய்வாளர் அறிக்கை விடுத்து உள்ளார். ...

Be the first to comment on "கமல் தனது கட்சி பெயரை மாற்றுவாரா? மய்யம் என்பதன் பொருள் என்ன?"

Leave a comment

Your email address will not be published.


*