பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து பிரபலங்களின் கடும் கண்டனங்கள்!

Pollachi Sexual Abuse Issue

* பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை நான் கடுமையாக கண்டிக்கிறேன்; இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து – நடிகர் ஜி.வி.பிரகாஷ்

* பொள்ளாச்சி சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது; பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்; அப்போதுதான் அவர்கள் தைரியமாக முன்வந்து குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியளிப்பார்கள் – நடிகர் சித்தார்த்

* பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது. இந்த கூட்டத்தையும், இதில் சம்பந்தப்பட்டவர்களையும், அரசும் அமைச்சர்களும் காப்பாற்ற முனையாமல், சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, உடனடியாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் – கனிமொழி, திமுக

* பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கிறார்கள்.

பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் குடுத்து ஆண்பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு  விடிவு இல்லை – கரு. பழனியப்பன்

* That voice just keeps echoing in the ear. You sometimes think evil is just a concept & men are creatures of circumstance & then something like this happens – இயக்குனர் சி.எஸ். அமுதன்

* Are u kidding me..?! Time n time again the same bloody crime..N we celebrate women’s day..!! this is what women mean to this society..#pollachirapists you should be skinned to death.!! Is this the kind of world we live in.!?? #DeathPenaltyforrape it’s the only way..!! #disgusted – நடிகை வரலட்சுமி சரத்குமார்

* பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள்அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது,பெண்ணினம் கசக்கப்படுவதையும்..நசுக்கப்படுவதையும்..துளியும்,ஏற்றுக்கொள்ள முடியாதஒன்று,பாதிக்கப்பட்டபெண்கள் பாதுகாக்கப்படவேண்டும,சரியானவிசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்,சிறப்பு புலனாய்வு வேண்டும் – தமிழிசை சவுந்தர்ராஜன்

* பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட முயற்சி செய்வது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்; வழக்கை உடனடியாக மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் – சீமான்

* இவர்கள் கொடூரமாக தண்டிக்கபட வேண்டும். சட்டமோ… கடவுளோ… தன் கடமையை தவறாமல் செய்யட்டும் – நடிகர் சதீஷ்

* தமிழ்நாடே குலை நடுங்கும் வகையில் இளம்பெண்களை சீரழித்த பிரச்னையில், குற்றவாளிகளை காப்பாற்றுவதில் ஆளுங்கட்சியே போராடுவது கடும் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல வெட்கக்கேடானது  – மு.க.ஸ்டாலின்

Related Articles

ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் படங்கள்!... ஏப்ரல் 4ம் தேதி :குப்பத்து ராஜாஜிவி பிரகாஷ் குமார், பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் "குப்பத்து ராஜா" திரைப்படம். நடன இயக்குனர் ...
தல அஜித் பற்றிய 48 தகவல்கள்!... கடந்த மே 1ம் தேதி அஜீத்துக்கு 48 வது பிறந்தநாள் அவருடைய ரசிகர்களால் கொண்டாட பட்டது. 48 வயதான அவரைப் பற்றிய 48 தகவல்கள்! தன்னை தேடி வர...
மேற்கு ஜனக்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில்... நகரும் படிக்கட்டுகளில் நாட்டின் மிக உயரமானதாக தற்போது வரை இருந்து வருவது மும்பை விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் அமைந்திருக்கிறது. அதன் உயரம் 1...
சூர்யாவின் “அகரம் அறக்கட்டளை”... கடந்த 2017 ஆம்  ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த  சர்ச்சைகள் விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வருட...

Be the first to comment on "பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து பிரபலங்களின் கடும் கண்டனங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*